Advertisement

காது வலி நீங்க பாட்டி வைத்தியம்

காது வலி நீங்க பாட்டி வைத்தியம்

உயிர்களிலேயே வாய்விட்டு பேசி தொடர்பு கொள்ளும் உயிரினம் மனிதன் மட்டுமே. அந்த மனிதன் பிற மனிதர்கள் தன்னிடம் கூறும் வார்த்தைகளையும், பிற சத்தங்களையும் கேட்க உதவும் உறுப்புகள் காதுகள் ஆகும். அந்த காதுகளில் சில சமயம் சிலருக்கு வலி ஏற்பட்டு அவர்களை துன்புறுத்துகின்றது. அந்த காது வலியை பற்றியும் அது நீங்குவதற்காண மருத்துவ குறிப்புகளை பற்றியும் இங்கு காண்போம்.

ear pain

காது வலி ஏற்படுவதற்கான காரணங்கள்

காது வலி ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தொடர்ந்து அதிக ஒலி எழுகிற சூழல்களில் இருப்பதாகும். மேலும் சளி பிடித்துக்கொள்ளும் போதும், காதுகளில் நீர் புகுந்து கொள்வதாலும், சில சமயங்களில் கிருமி தொற்றின் போதும் காது வலி ஏற்படலாம்.

காது வலி நீங்க மருத்துவ குறிப்புக்கள்

குறிப்பு 1:

வெற்றிலையை சாறு பிழிந்து ஒரு சில சொட்டுகளை வலியுள்ள காதுகளில் விட்டால் காது வலி குறையும்.

குறிப்பு 2:

பெருங்காயத்தை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி வடிகட்டி அதனுடன் சிறிது நல்லெண்ணெய் கலந்து, காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடாக காதில் சில துளிகளை விட காது வலி குறையும்.

perungayam

குறிப்பு 3:

எலுமிச்சம் பழ சாற்றை பிழிந்து வடிகட்டி அதன் சொத்துகளை காதுகளில் விட வலி குறையும்.

குறிப்பு 4:

கற்பூரத்தை காய்ச்சி அதன் சில துளிகளை காதுகளில் விட்டு, அந்த கற்பூர திரவத்தை காதுகளின் அடியில் கழுத்து பகுதிகளில் நன்கு சூடு பறக்க தேய்க்க காது வலி நீங்கும்.

karpooram

குறிப்பு 5:

குளிக்கும் போதோ அல்லது நீச்சல் பயிற்சிகளின் போதோ காதுகளில் நீர் புகா வண்ணம் பாதுகாக்க வேண்டும். அதிகளவு ஒலிகளை கேட்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். இதனை சரியாக கடைபிடித்தாலே பாதி பேருக்கு காது வலியே வராது.