Advertisement

கழுதை பால் அருந்தினால் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான பலன்கள் என்ன தெரியுமா?

கழுதை பால் அருந்தினால் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான பலன்கள் என்ன தெரியுமா?

உலகில் எண்ணற்ற விலங்கு மற்றும் பறவையினங்கள் இருக்கின்றன. இவற்றில் குட்டியிட்டு பாலூட்டும் விலங்குகளை பாலூட்டிகள் என்கின்றனர். மனிதர்களும் இந்த பாலூட்டி பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். உலகெங்கிலும் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவாக தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக பசும்பாலையே அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும் தாய்ப்பாலில் இருக்கின்ற சத்துக்களைக் காட்டிலும் பல அற்புதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாலை பல விலங்குகள் உற்பத்தி செய்கின்றன. அப்படியான விலங்குகளில் ஒன்று தான் மனிதர்களுக்கு பாரங்களை சுமக்க உதவும் விலங்காக இருக்கும் கழுதை ஆகும். நமது நாட்டின் சித்த மருத்துவ குறிப்பிலும் கழுதைப்பாலின் முக்கியத்துவம் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கழுதைப் பாலை அனைவரும் அருந்துவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

donkey milk

கழுதை பால் பயன்கள்

புற்று நோய்களுக்கான மருந்து

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களில் மிகவும் கொடுமையானது புற்றுநோயாகும். இந்த நோய் ஒரு முறை வந்து விட்டால் அதற்கான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டாலும் புற்றுநோய் செல்கள் நமது உடலில் மீண்டும் மீண்டும் வளர்வதை தடுக்க முடியாமல் போகிறது. மேலை நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் கழுதைப்பால் மனிதர்களின் உடலில் வளருகின்ற புற்றுநோய் செல்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கண்டறிந்துள்ளனர். மேலும் புற்றுநோய்க்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சையான கீமோ தெரப்பி எனப்படும் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்ட புற்று நோயாளிகளின் உடலில் இருக்கின்ற நச்சுக்களை நீக்குவதில் கழுதைப்பால் பேருதவி புரிந்ததாக அந்த ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன.

குழந்தைகள் உணவு 

கழுதைப்பால் தாய்பால் அருந்தும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றான ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. மனிதர்களின் தாய்ப்பாலில் இருக்கும் காரத்தன்மை 7 முதல் 7.5 pH அளவாக இருக்கிறது. அதே நேரத்தில் கழுதைப் பாலின் காரத்தன்மை 7 முதல் 7.2 pHஅளவாக இருக்கிறது. எனவே கழுதை பாலை வளரும் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் கழுதைத் பாலில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. இந்த கால்சியம் சத்து வளரும் குழந்தைகளின் எலும்புகளை மிகவும் வலிமை பெறச் செய்யும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது.

donkey milk

சரும அழகு 

பழங்காலத்தில் எகிப்திய பேரழகியும், அரசியுமான கிளியோபாட்ரா தனது சரும அழகை காப்பதற்கு தினமும் கழுதை பாலில் குளியல் மேற்கொண்டதாக கூறப்படுவதுண்டு. இது குறித்து பலரும் பலவித கருத்துகளை கூறினாலும். தற்காலங்களில் விற்கப்படும் பல அழகு சாதனப் பொருட்களில் கழுதைப்பால் சேர்க்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. கழுதைப்பால் மனிதர்களின் தோலில் ஈரப்பதம் தன்மையை அதிக நேரம் நீடித்திருக்கச் செய்ய உதவுகிறது. எனவே தான் இவை அழகு சாதனப் பொருட்களில் அதிகம் சேர்க்கப்படுகிறது. கழுதை பாலை முகம் மற்றும் உடல் முழுவதும் பூசிக் கொண்டு 20 நிமிடம் கழித்து குளிப்பவர்களுக்கு சருமத்தில் இருக்கின்ற கரும்புள்ளிகள், எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவை நீங்கி இளமையான தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் தருகிறது.

சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாக 

விலங்கினங்களில் கழுதைக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. அத்தகைய கழுதை பாலிலிருந்து பெறப்படும் பாலிலும் வீரியம் மிக்க நோய் எதிர்ப்புத்திறன் உள்ளது. கழுதைப்பாலை கிடைக்கும் சமயங்களில் அருந்துபவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் பன்மடங்கு வலுப்பெறுகிறது. எத்தகைய கடுமையான தொற்று நோய்களும் கழுதை பால் அருந்துபவர்களை சுலபத்தில் பாதிக்காமல் தடுக்கிறது. எக்சிமா, சோரியாசிஸ், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு கழுதைப்பால் சிறந்த இயற்கை மருத்துவ உணவுப் பொருளாக இருக்கிறது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கழுதை பால் அருந்துவதால் அந்த நோய்களின் கடுமை தன்மை குறைந்து, விரைவிலேயே நிவாரணம் கிடைக்கும்.

donkey milk

ஜீரண சக்தி அதிகரிக்க 

மனிதர்கள் அதிகம் அருந்தும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. பசும்பாலில் இருக்கும் இத்தகைய அதிக கொழுப்புச் சத்துக்கள் பலராலும் சுலபத்தில் செரிமானம் செய்ய முடிவதில்லை. ஆனால் கழுதை பாலில் அதிகளவு அளவு கரையும் தன்மை உள்ள கொழுப்பு சத்து இருக்கிறது. எனவே செரிமான பிரச்சனை குறித்து கவலைகள் ஏதுமில்லாமல் கழுதைப்பாலை தாராளமாக அருந்தலாம். கழுதை பால் உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. கழுதைப்பால் மனிதர்களின் குடலில் உணவு செரிமானத்திற்கு உதவும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

கல்லீரல் குறைபாடுகள் நீங்க 

கழுதைப்பால் பயன்பாடு குறித்து பல வகையில் மருத்துவ ஆய்வுகள் செய்த மேலைநாட்டு மருத்துவர்கள் கழுதை பால் இருக்கும் சத்துகள் நமது உடலில் இருக்கின்ற அத்தனை வகையான நச்சுக்களையும் போக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. மேலும் கல்லீரலில் தங்கியிருக்கின்ற கிருமிகளை அழித்து கல்லீரலை வலுப்படுத்தும் சக்தியும் பெற்றிருப்பதாக அந்த ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர். கழுதைப்பாலில் குறைந்த அளவே கொழுப்பு சத்து இருப்பதாலும், இதில் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகம் இருப்பதாலும் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு வலு சேர்க்கும். கல்லீரலை நன்கு பலப்படுத்துகிறது. மேலும் மது மற்றும் இதர போதைப் பொருள் பயன்படுத்துவதால் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளையும் சரி செய்கிறது.

donkey milk

ஒமேகா – 3 சத்து 

ஒமேகா – 3 என்பது ஒரு வகையான கொழுப்புச் சத்தாகும். இந்த ஒமேகா – 3 கொழுப்புச் சத்து மனிதர்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இந்த சத்து மீன் போன்ற கடல் உணவுகளில் அதிகம் காணப்படுகிறது. அதற்கடுத்து கழுதைப்பாலில் இந்த ஒமேகா-3 சத்து அதிகம் இருக்கிறது. எனவே கழுதை பால் அருந்துபவர்களுக்கு இந்த ஒமேகா 3 கொழுப்புச் சத்துக்கள் கிடைக்கப் பெற்று அவர்களின் உடலில் இருக்கும் இதயத் தசைகளை வலுப்படுத்தி, இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் மூளை செயல் திறனையும் அதிகரிக்கிறது.

சிக்கலான குறைபாடுகளுக்கு தீர்வு 

கழுதை பாலில் பல்வேறு அபூர்வ மருத்துவ ஆற்றல் இருப்பதாக அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கூறுகின்றனர். ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை சாப்பிடும் நிலையில் இருப்பவர்கள், நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து குணமடையும் நபர்கள், பதின் பருவ வயதுகளின் இறுதி கட்டத்தில் இருப்பவர்கள், மாதவிலக்கு நிற்கின்ற வயதுகளில் இருக்கும் பெண்கள் ஆகியோர்களுக்கு ஏற்படும் உடல் நலம் சார்ந்த குறைபாடுகள் அனைத்தையும் தீர்க்கவல்ல சத்து மிகுந்த உணவாக கழுதைப்பால் இருக்கிறது. எனவே இத்தகைய நிலையில் இருப்பவர்கள் அவசியம் அருந்த வேண்டிய ஊட்டச்சத்து பானமாக கழுதை பால் இருக்கிறது.

donkey milk

சிறந்த ஊட்டச்சத்து உணவு 

மற்ற விலங்குகளின் பாலை காட்டிலும் ஊட்டச்சத்து மிகுந்த பால் வகையாக கழுதைப்பால் இருக்கிறது. கழுதைத் பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங்க், சோடியம் போன்ற உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் சரிசமமான அளவில் இருப்பதால் கழுதைப் பாலை அருந்துபவர்களுக்கு அத்தனை விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கப் பெற்று உடல் வலிமையையும், உற்சாகமான மன நிலையையும் கிடைக்கின்றது.

மலச்சிக்கல் தீர 

தற்போதைய அவசரமான உலகத்தில் இருக்கின்ற பலருக்கும் மிகப்பெரிய தினசரி குறைபாடாக இருப்பது மலச்சிக்கல் பிரச்சனை ஆகும். ஆரோக்கியமான உணவு, சரியான விகிதத்தில் நீர் அருந்துவதால் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள முடியும். கழுதைப்பாலில் செரிமானத்தை ஊக்குவிக்க கூடிய சத்துக்களும் அதிகமாகவும், குறைந்த அளவே கொழுப்பு சத்தும் இருப்பதாலும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. ஏற்கனவே மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கழுதை பால் அடிக்கடி அருந்துவதால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கின்ற அசுத்தங்களை போக்கி மலச்சிக்கலைத் தீர்க்கிறது.