Advertisement

அதிமதுரம் சாப்பிடுவதால் உடனே நீங்கும் நோய்கள் என்ன தெரியுமா?

அதிமதுரம் சாப்பிடுவதால் உடனே நீங்கும் நோய்கள் என்ன தெரியுமா?

தற்காலங்களில் உலகெங்கிலும் புதிது புதிதாக நோய்கள் உருவாகி வருகிறது. சித்த மருத்துவம், ஆயர்வேதம் போன்ற முறைகளை நாடி மேலை நாட்டவர்களே நம் நாட்டிற்கு வரும் போது, நமது மக்கள் ரசாயனங்கள் மிகுந்த ஆங்கில மருந்துகளை நாடுகின்றனர். நமது இந்திய நாடு “மூலிகைகளின் சுரங்கம்” என்று சொன்னால் அது மிகையாகாது. நமது நாட்டில் வளரும் உயிரை காக்கும் மூலிகைகளில் ஒன்று தான் “அதிமதுரம்”. அதிரமதுரத்தின் பல்வேறு மருத்துவ பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

அதிமதுரம் பயன்கள்

சுக பிரசவம்

பத்துமாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை வகைக்கு 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து, பிறகு சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

வயிறு

பலரும் சரியாக காலை உணவுகளை சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். அதிமதுரப்பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும். வயிற்றில் ஏற்படும் பிற பிரச்சனைகளுக்கு அதிமதுரத்தை பொடி பதத்தில் சாப்பிடுவது தான் சிறந்த பலனை தரும்.

மூட்டுவலி பிரச்சனைகள்

வாதம் என்பது உடலின் காற்றின் தன்மை அதிகரிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளிலிருக்கும் மூட்டு பகுதிகளில் வலி உண்டாவதோடு விறைப்புத்தன்மை ஏற்படுகிறது. அதிமதுர தூள் கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும்.

சிறுநீரகங்கள்

உடலில் சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு சிறுநீரக தொற்று நோய்களால் சிறுநீர்ப்பைகளில் புண்கள் ஏற்படுகிறது. அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.

athimathuram 3

தொண்டை

அதிரமதுரத்தை சிறிதளவு எடுத்து வாய்க்குள் போட்டு அதக்கி கொள்வதால் அதிகளவு உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீர் சிறிது சிறிதாக தொண்டைக்குள் இறங்கி தொண்டையில் சளித்தொல்லையால் ஏற்படும் குரல் கரகாரப்பை நீக்கும். சளியால் ஏற்படும் தொண்டைகட்டையும் சீக்கிரத்தில் குணமாகும்.

தலைமுடி

சிறிதளவு அதிமதுரத்தை தூய்மையான பசுப்பாலில் ஊறவைத்து, பிறகு நன்கு அரைத்து அந்த விழுதை தலையில் நன்கு ஊரும் வகையில் அழுத்தி தேய்த்து, சுமார் இரண்டு மணிநேரம் கழித்து தலைக்கு குளித்தால் தலைமுடி உதிர்வது குறையும். தலயின் தோல்களில் இருக்கும் சிறு புண்கள் ஆறும். இள நரை நீங்கும். முடி பட்டு போன்று மென்மையாகும்.

மலட்டு தன்மை

ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலர்களின் மலட்டுத்தன்மை நீக்குவதற்கு அதிமதுரத்தை நன்றாக பொடித்து பசுப்பாலில் போட்டு கலக்கி, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு நரம்புகள் வலிமைபெறும், தாது புஷ்டி உண்டாகும். பெண்களின் கருப்பையில் இருக்கும் குறைகளை போக்கி சீக்கிரத்தில் கருவுற செய்யும்.

வழுக்கை

தற்காலங்களில் மிக இளம் வயது ஆண்களுக்கு கூட தலைமுடி சீக்கிரம் உதிர்ந்து தலையில் வழுக்கை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனை கொண்டவர்கள் அதிமதுரத்தை நன்கு பொடி செய்து, அம்மியில் போட்டு அதனுடன் சிறிது எருமை மாட்டு பாலை விட்டு நன்கு அரைத்து, வழுக்கை ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் ஊறிய பின்பு குளித்து வந்தால் வழுக்கை ஏற்பட்ட இடங்களில் முடி முளைக்க தொடங்கும்.

athimathuram 4

மலச்சிக்கல்

பலருக்கும் காலை நேரத்தில் மலச்சிக்கல் காரணமாக மலம் சரியாக கழிக்க முடியாமல் பிரச்சனை ஏற்படுகிறது. இதை போக்க அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றை சம அளவில் எடுத்து, நன்கு இடித்து சலித்து வைத்து கொண்டு இரவு தூங்கும் முன்பு ஒரு சிட்டிகை அளவு பசுப்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சுலபத்தில் நீங்கும்.

கல்லீரல்

அதிமதுரம் சற்று திராவகத்தன்மை வாய்ந்த மருத்துவ மூலிகை என்பதால் அதில் கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தி அதிகம் உள்ளது. அதிமதுரத்தை அவ்வப்போது சிறிதளவு சாப்பிட்டு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம் பெரும். உடலில் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மைகளை நீக்கும். ரத்தத்தில் நோயெதிர்ப்பு தன்மையை மேம்படுத்தும்.