Advertisement

கொய்யா பழம் பயன்கள்

கொய்யா பழம் பயன்கள்

மற்ற வகையான உணவுகளை சாப்பிட்டு உயிர் வாழும் உயிரங்களை விட, இயற்கை உணவுகளை அதிகம் உண்ணும் விலங்குகள், மனிதர்கள் அதிகம் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கை உணவுகளில் ஒன்று தான் பழங்கள். மனிதர்கள் உண்பதற்கேற்ற, சத்துக்கள் நிறைந்த பழவகைகள் ஏராளம் இருக்கின்றன. வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளையும் “கொய்யா பழம்” பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும். கொய்யா பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

கொய்யா பழம் பயன்கள்

தைரொய்ட்

“தைரொய்ட்” என்பது தொண்டை பகுதியில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த தைரொய்ட் சுரப்பி சரியாக இயங்காத உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். கொய்யா பழத்தில் செம்பு சத்து அதிகம் உள்ளது. செம்பு சத்து தைரொய்ட் சுரப்பியை மற்றும் அது சுரக்கும் ஹார்மோன்களின் சமசீர் தன்மையை மேம்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்கிறது.

ரத்தம்

கொய்யா பலம் ரத்தத்தில் அதிகம் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. ரத்தம் அதிகம் கெட்டியாகாமல் அதன் நீர்ம தன்மையை பாதுகாக்கும் சக்தியும் கொய்யா பழத்திற்கு உண்டு. இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இருக்கும் ரத்தத்தில் நச்சுக்களை அனைத்தும் நீங்கி ரத்தம் சுத்தமாகிறது. ரத்ததின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

வைட்டமின் சி

கொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. எனவே அனைத்து வயதிறனாரும் கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.

புற்று நோய்

புற்று நோய்க்கெதிராக கொய்யா பழம் சிறப்பாக செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொய்யா பழத்தில் “லைக்கோபீனே, க்வெர்செடின்” போன்ற வேதி பொருட்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இவை உடலில் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளருவதை தடுப்பதில் பேருதவி புரிகிறது. புற்று பாதிப்பு கொண்டவர்களும், புற்று நோய் ஏற்படாமல் இருக்க நினைப்பவர்களும் கொய்யா பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

நீரிழிவு

கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. மேலும் இது மிக குறைந்தளவு “கிளைசீமிக்” குறியீட்டு அளவு கொண்ட ஒரு பழமாகும். இந்த கிளைசீமிக் குறியீட்டு அளவு மிக குறைந்த அளவில் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட்டுட்டு வரும் போது அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகரிப்பதை தடுக்கிறது. நீரிழவு நோயாளிகள் அவ்வப்போது கொய்யா பலம் சாப்பிடுவது நல்லது.

மலச்சிக்கல்

கொய்யா பழம் நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு பழமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்து ஒரு இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. தினந்தோறும் காலை அல்லது மதியத்தில் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்னையை விரைவில் தீர்க்கும். அல்சர், குடல்களில் ஏற்படும் புண்களையும் ஆற்றும் தன்மை கொண்டது கொய்யா பழம்.

கரிப்பிணி பெண்கள்

கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் சத்து நிறைந்த இயற்கை உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. கொய்யா பழத்தில் “வைட்டமின் பி 9” என்கிற சத்தும், “போலிக் அமிலம்” அதிகம் உள்ளது. இந்த சத்துகள் வயிற்றில் வளரும் குழந்தையின் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தும் பணியை செய்ய

அவசியமானதாகும். எனவே கருவுற்றிருக்கும் பெண்கள் அவ்வப்போது கொய்யா பழங்களை சாப்பிடுவது நல்லது.

மன அழுத்தம்

இன்று உலகளவில் பலரையும் பாதிக்கும் ஒரு மனம் சம்பந்தமான பாதிப்பாக மன அழுத்தம் இருக்கிறது. கொய்யா பழத்தில் “மெக்னீசியம்” தாது அதிகம் நிறைந்துள்ளது. இது உடலில் நரம்புகள் மற்றும் தசைகளுக்கு ஓய்வளிக்கும் ஆற்றலை கொண்டது. மூளையின் செல்களையும் புத்துணர்ச்சி அடையச் செய்யும் தன்மையும் கொண்டது. கொய்யா பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் மன அழுத்தம் ஏற்படாதவாறு தடுக்கலாம்.

உடல் எடை

அதிகளவு உடல் எடை இருப்பது பல விதமான நோய்களுக்கும், உடல் பாதிப்புகளுக்கும் ஆரம்பமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் தவிர்த்து, முறையான உடற்பயிற்சிகளை செய்வதுடன் கொய்யா பழத்தையும் அவ்வப்போது உண்பதால், அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கிறது. உடலில் கொழுப்புகள் சேராமல் தட்டுப்பதால் உடல் எடையையும் குறைக்க முடிகிறது.

ஸ்கர்வி

ஸ்கர்வி என்பது “வைட்டமி சி” சத்தின் குறைபாட்டால் பல் ஈறுகளில் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படுவது, பற்கள் உடைந்து விடுவது, உடலின் எலும்புகள் வலுவிழப்பது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் நோயாகும். இந்நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு இயற்கையிலேயே அதிகளவு வைட்டமின் சி சத்துகள் அதிகம் நிறைந்த கொய்யா பழங்களை அடிக்கடி சாப்பிடுவது சிறந்ததாகும்.