Advertisement

உடல் சூடு குறைய டிப்ஸ்

உடல் சூடு குறைய டிப்ஸ்

மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹயிட். இந்த வெப்பநிலை அதிகரித்தால் அது உடல் வழக்கத்தை விட அதிக வெப்பமடைந்ததாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. பொதுவாக பலருக்கு கோடைகாலங்களிலும், வேறு பல புற சூழ்நிலைகளாலும் உடல் வெப்பம் அதிகரிக்கிறது. இந்த உடல் வெப்பத்தை தணிக்க கூடிய சில எளிய வீட்டு வைத்திய முறைகளை தெரிந்து கொள்வோம்.

Body heat

வேப்பிலை

காலையில் குளிக்கும் போது அந்த நீரில் சிறிது வேப்பிலைகளை போட்டு, சிறிது நேரம் ஊறவைத்த பின் அந்நீரால் குளிக்க உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியடையும்.

இளநீர்

ரத்தத்தை தூய்மை படுத்தக்கூடியதும், உடல் வெப்பத்தை போக்கி உடலை குளிர்விக்க கூடியதுமான இளநீரை தினமும் பகல் வேளைகளில் அருந்த உடல் உஷ்ணமாவதை தடுக்கும்.

ilaneeer

வெங்காயம்

வெங்காயம் நீர்சத்து அதிகம் கொண்ட ஒரு காய் ஆகும். அதிலும் சிறிய வெங்காயம் பல நன்மை குணங்களை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது. அடுப்பில் கடாய் வைத்து சிறிது நெய் ஊற்றி, பெரிய வெங்காயம் அல்லது சிறிய வெங்காயத்தாள்களை வதக்கி சாப்பிட உடல் சூடு தணியும்.

onion

பனைவெல்லம்

உடலுக்கு தேவையான பலத்தையும் உடலின் அதீத உஷ்ணத்தையும் போக்கவல்லது. பனைவெல்லம் இதை காய்ச்சிய பாலில் கலந்து, கரைத்து உடல் வெப்பம் அதிகம் இருக்கும் போது குடிக்க சூடு தணிந்து உடல் குளிர்ச்சியடையும்.

மாதுளம் பழம்

நீர்சத்து அதிகம் கொண்டதும் உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது மாதுளம் பழம். இப்பழத்தை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இந்த மாதுளம் பழச்சாற்றில் பனங்கற்கண்டுகளை கரைத்து குடிக்க உடல் சூடு தணியும்.

Maadhulai

சீரகம்

நமது பெரும்பாலான அன்றாட உணவுகளில் சீரகம் முக்கிய இடம் பெறுகிறது. சிறிது சீரகத்தை எடுத்து பசுவெண்ணையில் கலந்து, குழைத்து காலை மற்றும் மாலை வேளைகளில் உண்டு, பின்பு சிறிது இதமான வெந்நீர் குடிக்க உடல் சூடு தணியும்.

Seeragam

அதிமதுரம்

சிலருக்கு உடல் வெப்பம் என்ன குளிர்ந்த உணவுகளையும் உண்டாலும் தணியாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் அதிமதுரத்தை ஒரு தேக்கரண்டி இளநீரில் கலந்து, நன்கு கலக்கி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க நல்ல குணம் கிடைக்கும்.