Advertisement

உடைத்த கடலை பருப்பு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

உடைத்த கடலை பருப்பு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

பருப்புகளில் பல வகைகள் உண்டு. அதில் பெரும்பாலான பருப்புகளை நமது அன்றாட உணவு தயாரிப்பில் பயன்படுத்துகின்றோம். அப்படியான பருப்புகளில் ஒன்று தான் உடைத்த கடலை பருப்பு. இதற்கு பொட்டு கடலை என்கிற மற்றொரு பெயரும் உண்டு. புரதச் சத்து மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த உடைத்த கடலை பருப்புகளை, மனிதர்கள் தினமும் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

udaicha-kadalai

உடைத்த கடலை பயன்கள்

உடல் சக்தி

உடைத்த கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும்.

நரம்புகள் 

உடலின் அனைத்து உறுப்புகளும் நன்றாக இயங்க எலும்புகள் எப்படி அடிப்படையாக இருக்கிறதோ, அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் உடல் உறுப்புகள் நரம்புகள் ஆகும். இந்த நரம்புகள் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் உடல் சீராக இயங்குவதில் பிரச்சினைகள் இருக்காது. உடைத்த கடலை பருப்பில் இருக்கும் புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள் நமது உடலில் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

udaicha-kadalai

உலகெங்கிலும் இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொழுப்பில்லாத உணவுகளை அறவே தவிர்த்து, புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் இதய நலம் மேம்படுத்துகிறது. புரத சத்து அதிகம் நிறைந்த உடைத்த கடலை பருப்புகளை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.

செரிமான சக்தி 

நாம் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்ய வயிறு, குடல் போன்ற உறுப்புக்கள் ஆரோக்கியமாகவும், ஆற்றல் மிகுந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். உடைத்த கடலை பருப்பில் உள்ள எளிதில் ஜீரணம் ஆக கூடிய புரத சத்து மற்றும் நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

udaicha-kadalai

ஆரோக்கியமான வளர்ச்சி

குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும். உடைத்த கடலையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் அதிகம் உடைத்த கடலை பருப்புகளை சாப்பிடுவதால் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறலாம்.

சருமம்

உடைத்த கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. இந்த பருப்பில் நிறைந்திருக்கும் புரதம் மற்றும் இதர சத்துகள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை இந்த உடைத்த கடலை பருப்பிற்குஉண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும்.

udaicha-kadalai

தலைமுடி

உடைத்த கடலை பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் உள்ளன. உடைத்த கடலை பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு மேற்கூறிய புரதங்கள் உடலில் சேர்ந்து தலைமுடிகளின் வேர்களை பலப்படுத்துகின்றன. இப்பருப்புகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனையும் போக்குகிறது.

கர்ப்பம்

பெண்களுக்கு பேறு காலத்தில் சத்து நிறைந்த உணவுகள் கொடுக்க வேண்டியது அவசியமாகும். உடைத்த கடலை பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு வருவது, அவர்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் கருவிற்கும் நன்மையை அளிக்கும். பிரசவ நேரத்தில் ஏற்படும் வலி மற்றும் உடல் சோர்வை போக்க இப்பருப்புகள் உதவுகின்றன.

udaicha-kadalai

நோய் எதிர்ப்பு

பருப்பு வகைகள் அனைத்துமே மனிதர்களின் உடலாரோக்கியதை மேம்படுத்துபவையாகவே உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு வேதிப்பொருட்கள் ரத்தத்தில் ஏற்கனவே உள்ளன. உடைத்த கடலை பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து ஜுரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது.

உடல் எடை

உடைத்த கடலை பருப்புகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இல்லாமல், உடல்நலத்திற்கு உதவக்கூடிய புரதங்கள் அதிகம் நிறைந்துள்ளன. தங்கள் வயதின் உயரதிக்கேற்ற உடல் எடை இல்லாமல் இருப்பவர்கள் சீக்கிரத்தில் உடல் எடை பெருக்கவும், தசைகள் வலுமிக்கதாக இருக்கவும் உடைத்த கடலை பருப்புகளை அதிகம் சாப்பிட்டு வருவது நல்லது.