Advertisement

எவ்வளவுதான் நல்லா மாவு ஆட்டி வெச்சாலும் இட்லி பஞ்சு போல, வரவே மாட்டேங்குதா? நீங்க சொதப்பலா மாவு ஆட்டினாலும், அதுல சூப்பர் இட்லி சுட முடியும். உங்களுக்கான சின்ன சின்ன டிப்ஸ்!

எவ்வளவுதான் நல்லா மாவு ஆட்டி வெச்சாலும் இட்லி பஞ்சு போல, வரவே மாட்டேங்குதா? நீங்க சொதப்பலா மாவு ஆட்டினாலும், அதுல சூப்பர் இட்லி சுட முடியும். உங்களுக்கான சின்ன சின்ன டிப்ஸ்!

நம்ம வீட்ல எவ்வளவுதான் கஷ்டப்பட்டு மாவை ஆட்டி வைத்தாலும், ஹோட்டலில் சுடுவது போல இட்லி வரவில்லை என்ற கம்ப்ளைன்ட் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், நம் வீட்டிலும், ஹோட்டலில் சுடுவது போன்ற வெள்ளையான, பஞ்சுபோல புசுபுசுன்னு இட்லி கட்டாயம் சுட முடியும். இந்த அளவில் இட்லி மாவு ஆட்டி பாருங்க! இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க! ஒருவேளை உங்களுடைய மாவு பதம், தவறிவிட்டால் கூட, அதை சரி செய்ய ஒரு ஐடியா உள்ளது. அதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

making-idly

இட்லி அரிசி-4 டம்ளர்

குண்டு உளுந்து -1 டம்ளர்

வெந்தயம்-1 டேபிள் ஸ்பூன்

வேக வைத்த சாதம்-1/2 கப்.

இட்லிக்கு அரிசியை எந்த டம்ளரில் அளக்கிறீர்களோ, அதே டம்ளரில் கட்டாயம் உளுந்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்தயம் ஒரு டேபிள்ஸ்பூன்தான் எடுக்க வேண்டும். வெந்தயம் அதிகமாகி விட்டாலும், இட்லி தண்ணீர் விட்டு கொழகொழவென்று ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. அரிசி அளக்கும் டம்ளரிலேயே பாதி அளவு சாதம் எடுத்துக் கொள்ளுங்கள்.

rice-satham

Tips 1:

முதலில் அரிசியை தண்ணீர் ஊற்றி நன்றாக 6ல் இருந்து 7 முறை கழுவவேண்டும். உங்களால் முடிந்தால் 10 முறை கழுவினாலும் தவறில்லை. ஹோட்டலில் இட்லி வெள்ளையாக வருவதற்கு இதுதான் காரணம். இட்லி அரிசி கட்டாயம் 6ல் இருந்து 7 மணி நேரம் ஊற வேண்டும்.

Tips 2:

வெந்தயத்தை, இட்லி அரிசி ஊற வைக்கும் போதே தனியாக ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். உளுந்தோடும் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டாம். அரிசியோடு சேர்த்து வெந்தயத்தை ஊற வைக்க வேண்டாம்.

ulunthu-venthayam-idly

Tips 3:

உளுந்தை ஒரு தனி பாத்திரத்தில் போட்டு, மூன்று முறை நன்றாகக் கழுவி விட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த தண்ணீரை ஊற்றி தான் உளுந்து ஆட்ட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஊறவைத்த தண்ணீரை கீழே ஊற்றி விட கூடாது. உளுந்து ஒரு மணி நேரம் வரை ஊறினால் போதும்.

Tips 4:

சில பேர் வீடுகளில் போர் தண்ணீர் உப்பு தண்ணியாக இருக்கும். குடிப்பதற்காக தனியாக கேன் வாட்டர் அல்லது RO வாட்டர் வைத்திருப்பார்கள். நீங்கள், அரிசியையும், பருப்பையும் ஊற வைக்கக் கூடிய தண்ணீர் கட்டாயம் குடிதண்ணீர் ஆகத்தான் இருக்க வேண்டும். உப்புத் தண்ணீராக இருந்தால் அரிசியும் உளுந்தும் நன்றாக ஊறாது. இட்லி அரிசியையும், உளுந்தம் பருப்பையும், அலசும் தண்ணீர் உப்பு தண்ணீராக இருக்கலாம் தவறில்லை. மறக்காமல் நல்ல தண்ணீர் ஊற்றி அரிசியையும் உளுந்தையும் ஊறவையுங்கள்.)

idly-maavu1

இப்போ மாவட்ட போறீங்க! முதலில் கிரைண்டரில் தனியாக ஊற வைத்திருக்கும் வெந்தயத்தைப் போட்டு, லேசாக தண்ணீர் விட்டு மொழுமொழுவென்று ஆட்டிக் கொள்ளுங்கள். சில பேர் வீட்டில் இட்லியில், வெந்தயம் அறையாமல் முழுசாவே இருக்கும். தனியாக இப்படி ஆட்டும் பட்சத்தில், வெந்தயம் மொழுமொழுவென்று அரைந்து விடும். அரைந்த வெந்தயத்துடன், உளுந்தை போடவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கிரைண்டர் பக்கத்திலிருந்து ஆட்ட வேண்டும். உளுந்து போட்டுட்டு, மூடிட்டு போய் விடக்கூடாது. 3 நிமிடங்களுக்கு ஒரு முறை, 3 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு விட்டு ஆட்டும் பட்சத்தில் உளுந்து பொங்கி அறையும். (உளுந்து ஊறவைத்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.)

உளுந்தை வழித்து எடுத்து விடவேண்டும். அதன் பின்பு அரிசியை போட்டு நன்றாக ஆட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். கொற கொறன்னு ஆட்டி எடுத்துக்கோங்க. அதுக்காக ரவை போலும் இருக்கக்கூடாது. ரவையின் விட சிறியதாக இருக்கவேண்டும். அப்படி ஆட்டி எடுக்க வேண்டும். இட்லி மாவை வழிப்பதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு 1/2 கப் அளவு வடித்த சாதத்தை, அரிசி மாவோடு சேர்த்து அரைத்து விடுங்கள்.

grinding-idly maavu

இப்போது உளுந்தையும் அரிசி மாவையும் ஒன்றாக போட்டு உங்கள் கைகளால் கரைக்க வேண்டும். (இப்போது எல்லோர் வீடுகளிலும் டேபிள் டாப் கிரைண்டர் தான் இருக்கின்றது. உங்கள் வீட்டில் பெரிய கிரைண்டர் இருக்கும்பட்சத்தில் அரிசி மாவை வழிப்பதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பு, அந்த அரிசிமாவில் உளுந்தை கொட்டி இரண்டு நிமிடம், அரிசி மாவும் உளுந்து மாவும் ஒன்றாக கலந்த உடன் வழித்துக் கொள்ளலாம். சுலபமாக இருக்கும்.

அப்படி அரிசி மாவையும் உளுந்து மாவையும் கிரைண்டரில் ஒன்றாக கலக்கினால் கூட, பாத்திரத்தில் வழித்த பின்பு, உங்களது கைகளால் 5நிமிடம் கரைக்க வேண்டும். கைகளால் மாவு கரைக்கும் போது தான், மாவு நன்றாக புளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உப்பு போட்டு கரைத்த மாவை 8 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்.

idly-maavu2

எட்டு மணி நேரம் கழித்து, இட்லி ஓட்டுவதற்கு முன்பாக, ஒரு முறை  மாவை கரண்டியால் அடித்து கலக்கிய பின்பு, இட்லி ஊற்றி வைத்தீர்கள் என்றால், இட்லி சூப்பரா வரும் என்பதில் சந்தேகமே இல்லை. இட்லி மாவு கெட்டியாக இருக்க வேண்டும். தண்ணீர் ஊற்றி கரைத்து விடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மாவு நீர்த்து போய் விட்டால், இட்லி கட்டாயம் சப்பையாகத்தான் இருக்கும்.

சரி. மாவை தப்பு தப்பா ஆடிடீங்க, மாவு நீர்த்து போச்சு. அதுல சூப்பரா எப்படி இட்லி செய்வது? அந்த மாவை ஒரு 5 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள், வெளியே எடுத்து நல்லா கரைச்சி அதுக்கப்புறம் இட்லி ஊத்துங்க. அவ்வளவு தானே!

idly-maavu3

இட்லி ரொம்ப கல்லு மாதிரி இருந்துச்சுன்னா, உங்க வீட்டில அப்பளம் இருக்கும் இல்லையா? உளுந்து அப்பளம். அத நான்கு அப்பளம் எடுத்து, தண்ணீரில் போட்டு ஊற வைத்து விட்டு, மிக்ஸியில் போட்டு அரைச்சுக்கோங்க. தேவையான அளவு இட்லி மாவை சின்ன பாத்திரத்தில் எடுத்துக்கோங்க. அரைச்ச அப்பளத்தை, இட்லி மாவுடன் சேர்த்து கலக்கி இட்லி சுட்டா, கல்லு இட்லியும், சாஃப்ட் இட்லியா மாறிவிடும். இது மட்டும் ஃபாலோ பண்ணி இட்லி சுட்டு பாருங்க பதம் தப்பவே தப்பாது.