Advertisement

ரத்த அழுத்தம் குறைய சித்த மருத்துவ குறிப்புக்கள்

ரத்த அழுத்தம் குறைய சித்த மருத்துவ குறிப்புக்கள்

மனிதர்கள் உயிர்வாழவும், அவர்கள் உடலில் பல அத்தியாவசிய செயல்கள் நடை பெறவும் செய்வதில் ரத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ரத்தத்தின் அழுத்த நிலை “ரத்த அழுத்தம்” என்று மருத்துவ உலகினர் வரையறுத்துள்ளார். ஒரு மனிதனின் சராசரியான ரத்த அழுத்த அளவாக 120/80 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு கீழாக செல்வது குறைந்த ரத்த அழுத்தம் என்றும், அதிகமானால் உயர் ரத்த அழுத்தம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் ஒருவரது வயது, உடல்நிலை, பரம்பரை ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது. ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கவும், ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதை குறைப்பதற்கான இயற்கை மருத்துவ முறைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரத்த அழுத்தம் குறைய சித்த மருத்துவ குறிப்புக்கள்

உடல் எடை

ஒவ்வொரு மனிதனும் அவன் இருக்கின்ற உயரத்திற்கேற்றவாறு உடல் எடை இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு தங்களின் உயரத்திற்கேற்ற எடையை விட கூடுதலான உடல் எடை இருக்கும் பட்சத்தில் அந்நபருக்கு ரத்த அழுத்தம் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. எனவே ஒவ்வொருவரும் தங்களின் உடல் எடையை சரியான அளவில் வைத்து கொள்வதால் ரத்த அழுத்தம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

உப்பு, சர்க்கரை

நாம் சாப்பிடும் உணவில் ருசியை அதிகம் ஏற்படுத்தும் பொருட்களாக சர்க்கரை மற்றும் உப்பு இருக்கிறது, இந்த இரண்டின் அளவும் நாம் சாப்பிடும் உணவில் அதிகம் கலப்பதால், நமக்கு வருக்காலங்களில் ரத்த அழுத்தம் உருவாவதற்கான சூழலை ஏற்படுத்துகிறது. எனவே நமது உணவில் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை குறைத்து கொள்வது நல்லது.

salt

மன அழுத்தம்

பரபரப்பான வாழ்க்கை முறைகளால் உலகெங்கிலும் பல மக்கள் மன அழுத்தம் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது மனதில் ஏற்படும் கவலைகள், துக்கங்கள் மற்றும் பதற்றமான மனநிலை போன்றவை நமது உடல்நலத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மனம் சம்பந்தமான பிரச்சனைகள் ரத்த அழுத்தும் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கிறது எனவே மன அழுத்தம் இல்லாதவாறு நம்மை நாம் பாதுகாத்துகொள்ள வேண்டும்.

புகை பிடித்தல்

புகை பிடித்தல் என்பதும் ஒரு வகையான போதை பழக்கம் தான். இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பலருக்கும் புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. பல்லாண்டுகளாக புகைக்கும் பழக்கம் கொண்ட நபர்களுக்கு ரத்த நாளங்கள் சுருங்கி போகும் நிலை உண்டாகிறது. இது எதிர்காலத்தில் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாகிறது. புகைக்கும் பழக்கதை சீக்கிரத்தில் விட்டொழிப்பதன் மூலம் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கலாம்.

smoking

சரியான ஓய்வு

நீண்ட நேரம் கடுமையான உடலுழைப்பபில் ஈடுபட்டும் சரியாக ஓய்வெடுக்காதவர்கள், இரவில் நீண்ட நேரம் கண்விழிப்பவர்கள், சரியான தூக்கம் வராத நபர்கள் போன்றோருக்கு ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. எனவே ஒவ்வொரு நபரும் தினமும் சரியான அளவு ஓய்வு உடல் மற்றும் மனதிற்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம்.

பீட்ரூட்

கிழங்கு வகையான பீட்ரூட் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த ஒரு இயற்கை மருத்துவ உணவாக பயன்படுகிறது. பீட்ரூட் கையில் நிறைந்திருக்கும் சக்திகள் உடலில் இருக்கும் ரத்தத்தில் கொழுப்புகள் அதிகம் சேர்ந்து, ரத்த ஓட்டத்தை முடக்கி விடாமல், சீரான ரத்த ஓட்டத்தை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்கிறது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பீட்ரூட் காயாகவோ, ஜூஸ் போட்டோ அருந்தி வருவது நல்லது.

Beetroot Juice

மீன்

உடல்நலம் நன்றாக இருக்க விரும்புபவர்கள் முழுமையாக சைவ உணவிற்கு மாறுவது சிறந்தது. எனினும் அனைவராலும் சுலபத்தில் அசைவ உணவு பழக்கத்தை விட்டு விட முடியாது. ரத்த அழுத்தும் வராமல் தடுக்க விரும்புபவர்கள், அப்பிரச்சனை குறைக்க விரும்புபவர்கள் மாடு, ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை அறவே சாப்பிடுவதை தவிர்த்து, அசைவத்தில் மீன் மட்டும் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

பூண்டு

பூண்டு ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் சிறந்த மருத்துவ பொருளாக இருக்கிறது. ரத்த அழுத்தம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் பூண்டு சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தர்களேயானால் சுலபத்தில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம். பூண்டு உடலின் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து ரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கிறது.

மாதுளம் பழம்

மாதுளம் பழங்களில் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மைகள் மற்றும் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும் திறன் அதிகமுள்ளது. தினமும் காலையில் மாதுளம் பழ சாறு அருந்துபவர்களுக்கு ரத்த அழுத்தம் பிரச்சனை குறைவதோடு, ரத்த அழுத்தம் இல்லாதவர்களுக்கு அது ஏற்படுவதற்கான சாத்தியங்களை தள்ளி போடுகிறதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

ஓட்ஸ்

தற்போது அதிக மக்களால் சாப்பிடப்பட்டு வரும் ஓட்ஸ் உணவு ரத்த அழுத்தம் பிரச்னையை போக்குவதில் நன்கு உதவுகிறது. ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு சத்து குறைவாகவும், சோடியம் உப்பின் அளவு மிக குறைவாகவும் இருப்பதால் காலை வெளியில் ஓட்ஸ் கொண்டு செய்யப்பட்ட உணவை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் சராசரியளவில் இருக்கும்.