Advertisement

உங்கள் வீட்டில் ரோஜா பூ இருந்தால் எத்தனை நோய்களை தீர்க்கலாம் தெரியுமா?

உங்கள் வீட்டில் ரோஜா பூ இருந்தால் எத்தனை நோய்களை தீர்க்கலாம் தெரியுமா?

நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு செடியின் வேர், பட்டை, காய், கனி மட்டும் மருத்துவதிற்கு பயன்படுத்தியதோடு அதன் பூக்களையும் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ரோஜாப்பூ பாரத தேசம் எங்கும் வளர்க்கப்படுகிறது. அந்த ரோஜா பூவை கொண்டு பலவிதமான நோய்களுக்கு தீர்வு கண்டுள்ளனர் நம் முன்னோர்கள். ரோஜா பூக்களில் ஹைபிரிட் எனப்படும் கலப்பு ரோஜா பூக்களை விட பன்னீர் ரோஜா, நாட்டு ரோஜா ஆகியவற்றையே மருத்துவ மருத்துவ சிகிச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்வது ஏற்றதாகும். இங்கு ரோஜா பூக்களால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரோஜா பூ பயன்கள்

தலைவலி

சிலருக்கு உடலில் பித்தம் அதிகரித்து விடுவதாலும், வேறு பல உடல் ரீதியான காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட தலைவலியால் அவதிப்படுபவர்கள் மற்ற எந்த மருத்துவ முறைகளையும் நாடுவதற்கு முன்பு புதிதாக பூத்த ரோஜா பூ ஒன்றை எடுத்து. அதன் வாசத்தை சிறிது நேரம் முகர்வதால் தலையை கடுமையான தலைவலி குறையும்.

உடல் துர்நாற்றம்

உடலில் அதிகம் வியர்வை சுரக்கும் நபர்களுக்கும், மாமிசம் உணவுகள் அதிகம் சாப்பிடும் நபர்களுக்கும் உடல் துர்நாற்றம் அதிகம் இருக்கும். அவர்களது உடல் துர்நாற்றம் போக்க சரியான தீர்வாக ரோஜா பூ இருக்கிறது. இதன் இதழ்களை சாப்பிடுபவர்களுக்கு வியர்வையினால் உண்டாகும் விஷ தன்மையை உங்கள் உடலில் இருந்து நீக்கி உங்கள் உடலை குளிர வைக்கிறது. எனவே கோடை களங்களில் காலங்களில் ரோஜா பூ இதழ்களை அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

வாய்ப்புண்

உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போதும், காரமான உணவுகளை அதிகம் உண்பதாலும் பலருக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகிறன. இதற்கு மருந்தாக ரசாயனங்கள் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதை விட சிறிது ரோஜா இதழ்களை மென்று சாப்பிடுவது சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இது உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி, வாய் புண் உருவாவதை குறைத்து அதனால் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியை குறைக்க உதவுகிறது.

ஆண்மை குறைபாடு

உடல் உஷ்ணம் அதிகம் இருப்பவர்களுக்கும், வெப்பம் நிறைந்த இடங்களில் பணி புரிகின்ற ஆண்களுக்கும் அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன வாய்ப்புகள் அதிகமாகின்றன. ரோஜா பூவின் இதழ்களை சாப்பிடுவதால் உடலை குளிர்ச்சியடைந்து, ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்குகிறது. ரோஜா பூவை அடிக்கடி முகர்ந்துகொள்வதால் உடலுறவில் ஆர்வமில்லாத நிலை நீங்கும்.

மலச்சிக்கல் 

ரோஜா இதழ்கள் வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையை சீர் செய்கிற சக்தி அதிகம் கொண்டுள்ளது. இது செரிமானம் நடக்க மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் உங்கள் பசியை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் குறைய இது ஒரு சிறந்த மருந்து ஆகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ரோஜா இதழ்களை மென்று சாப்பிடுவது நல்லது.

இளமை தோற்றம் 

அனைவருக்குமே எப்போதும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்கிற ஆவல் இருக்கத்தான் செய்கிறது. இதற்காக விலையுர்ந்த பல அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை விட ரோஜா பூ இதழ்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.

மயக்கம் 

ஒரு சிலருக்கு வெளியில் செல்லும் போது மயக்கம் ஏற்படும், அதிலும் குறிப்பாக கோடைகாலங்களில் உடலின் உஷ்ணம் அதிகரித்து ரத்த ஓட்டம் மூளைக்கு செல்லாமல் சுணங்குவதால் இத்தகைய மயக்க நிலை ஏற்படுகிறது. இப்படிபட்டவர்கள் வெளியே செல்லும் போதும், வீட்டிற்கு திரும்பிய பின்பும் ரோஜா பூவை முகர்ந்து கொள்வதாலும், அந்த பூவின் இதழ்களை சாப்பிடுவதாலும் மயக்க நிலை ஏற்படாமல் தடுக்க முடியும். உடல் மற்றும் மனம் சுறுசுறுப்புடன் இயங்கும்.

மாதவிடாய் 

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கு ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஆனால் சில பெண்களுக்கு இந்த மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படவும் செய்கிறது. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா இதழ்களை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

சீதபேதி, வயிற்று போக்கு

உடல் மிகவும் உஷ்ணம் அடைவதாலும், வேறு சில காரணங்களாலும் சிலருக்கு சீதபேதி எனப்படும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இந்த சீதபேதி ஏற்பட்டவர்கள் தொடர்ந்து ஏற்படும் வயிற்று போக்கு நிற்க சிறிது ரோஜா பூக்களை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் இப்படிப்பட்ட கடுமையான சீத பேதி நீங்குவதோடு தொடர்ந்து ஏற்படும் வயிற்று போக்கும் நிற்கும்.

இதயம் 

நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தாலும், இதயத்திற்கு நலத்தை தருகின்ற உணவுகள் மற்றும் மூலிகைகளை சாப்பிட்டு வருவது நல்லது. காலையில் ரோஜா இதழ்களை மென்று சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. ரத்தம் கட்டிக்கொள்வது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.