பெண்ணின் கருவறையில் குழந்தை எப்படி உருவாகிறது தெரியுமா?
ஆண், பெண் இனைந்து மேற்கொள்ளும் திருமண வாழ்க்கையின் சிறப்பே குழந்தை பேறு தான். கணவன் மனைவி உடல் தொடர்பு கொண்ட பிறகு மனைவி கருவுற்று, பத்து மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கிறாள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு பெண்ணின் வயிற்றில் குழந்தை கருவாக எப்படி தோன்றுகிறது என்பதை பெரும்பாலானோர் அறிந்து கொள்வதில்லை. இங்கு ஒரு குழந்தை எவ்வாறு உருவாகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நல்ல உடல் மற்றும் மன நலன் கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் பொழுது, உடலுறவின் இறுதியில் ஆணின் விந்து பெண்ணின் இனப்பெருக்க உறுப்புக்கள் வெளிப்பட்டு, அந்த விந்தில் இருக்கும் விந்தணுக்கள் பெண்ணின் கருப்பைக்குள் செல்கின்றன.
அப்பெண்ணின் மாதவிடாய் முடிந்த பின் 9 ஆம் நாளில் இருந்து 28 ஆம் நாள் வரை அண்ட அணு எனப்படும் கருமுட்டைகள் புதிய உயிரை உருவாக்கும் நிலை அடைந்து, ஆணின் விந்து அணு கருமுட்டைக்குள் நுழைய பெலோப்பியன் டியூப் எனப்படும் கருக்குழாய் பகுதியில் காத்து கொண்டு இருக்கும்.
ஆணின் விந்தில் இருந்து வெளிப்பட்ட விந்துவில் இருக்கும் பல லட்ச விந்தணுக்கள் பெண்ணின் கருப்பையில் இருக்கும் பெண்ணின் அண்ட முட்டை முட்டை எனப்படும் கருமுட்டையை அடைய நீந்தி செல்ல அத்தனை விந்தணுக்களும் முயற்சிக்கும். இப்படி அத்தனை லட்சம் விந்து அணுக்கள் கருமுட்டைக்குள் நுழைய மேற்கொள்ளும் முயற்சி மிகவும் கடினமானது ஆகும்.
கருமுட்டையை அடைய போட்டியிடும் அத்தனை லட்சம் விந்தணுக்களில், முக்கால் வாசி விந்தணுக்கள் பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் காரத்தன்மை கொண்ட அமிலத்தால் அழிக்கபட்டுவிடுகிறது. மீதமிருக்கும் ஆரோக்கியமான விந்து அணுக்கள் அத்தகைய காரத்தன்மை கொண்ட அமில தாக்குதலை எதிர்த்து போராடி கருமுட்டையை அடையும் தனது லட்சிய பயணத்தை தொடரும்.
இப்போது மீண்டும் பெண்ணின் பிறப்புறுப்பு சளி போன்ற திரவம், மீதும் மீதம் இருக்கின்ற அந்த விந்து அணுக்களை தடுக்கும். இங்கும் எதிர்ப்பு திறனில்லாத விந்தணுக்கள் அழிந்து, மீதம் இருக்கின்ற குறைந்த அளவிலான ஆரோக்கியமான விந்து அணுக்கள் மட்டும் இந்நிலையை கடந்து கருமுட்டையை அடையும் பயணத்தை தொடரும்.
குறைந்த அளவில் மீதம் இருக்கின்ற விந்து அணுக்கள் கருமுட்டை இருக்கும் பெலோப்பியன் குழாயினால் மீண்டும் தடுக்கப்படும். இந்த தடையையும் மீறி ஒரே ஒரு ஆரோக்கியமான விந்து அணு வெற்றிகரமாக கருமுட்டையினுள் கருவுறுதலை தொடங்கும். ஓர் விந்து அணு குழாயை தாண்டிய உடனேயே, குழாய் மற்ற விந்து அணுக்கள் உள்ளே நுழையாதவாறு மூடி விடும் அதிசயத்தை இயற்கை பெண்ணினத்திற்கு அளித்திருக்கிறது.
கருவுறுதல் நிகழ்வு வெற்றி அடைந்தால் கரு உருவாக தொடங்கி விடும். விந்தணு கருமுட்டையை அடையவில்லையெனில் பெண்ணின் மாதவிடாய் வெளிப்படும். இதற்கு மாறாக பெண்ணின் உடலில் மாதவிடாய் தள்ளிப்போனால், வாந்தி, தலைசுற்றல் போன்ற கர்ப்பத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் குழந்தை உருவாகி விட்டது என்று அர்த்தம்.
வயிற்றில் கருவாக வளரும் குழந்தையின் பாலினம் ஆணா அல்லது பெண்ணா என்பது கருவுறுதலில், எந்த முட்டையின் பங்கு அதிகம் இருந்ததோ, அதன் அடிப்படையில் குழந்தையின் பாலினம் இருக்கும். கருவுறுதலில் ஆணின் விந்து அணு நன்கு செயல்பட்டு, அந்த ஆணின் குரோமோசோம்களில் “Y” குரோமோசோம் பிறக்கின்ற குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கின்றன. பத்து மாதங்கள் கழித்து அந்த கரு இந்த பூமியில் ஆழகான குழந்தையாக இந்த பூமியில் இவ்வாறாக தான் மனித குழந்தைகள் ஒரு பெண்ணின் கருவறையில் இவ்வாறாகவே உரு பெறுகின்றனர்.