Advertisement

ரசமணியின் பயன்களும் அதன் ரகசியங்களும் ரசமணி ரசமணி என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்டது. ‘ரசம்’ என்றால் பாதரசம். திரவ நிலையை கொண்ட இந்த உலோகம், நம் உடலுக்கு கெடுதலை தரும். ஆனால் சித்த வைத்தியத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளில் பாதரசம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பாதரசத்தை மருந்தாகப் பயன்படுத்தும் போது தீராத நோய்களும் தீரும் என்று சித்தர்களின் வைத்தியத்தில் கூறப்பட்டுள்ளது. rasamani இப்படி சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இந்த பாதரசத்தை கடினமான உலோகமாக மாற்றி, மணியாக செய்து, கயிரில் கோர்த்து கழுத்தில் கட்டிக்கொண்டால் ஏராளமான பயன்கள் உண்டு என்கிறது சித்தர்களின் ரகசிய குறிப்பு. திரவத் தன்மையை கொண்ட பாதரசத்தை அரிய மூலிகைகளுடனும், பாஷானத்துடனும் சேர்த்து கடினமான உலோகமாக மாற்றுவது ரசவாதம் என்று கூறுவார்கள். இப்படி ரசவாதத்தில் மூலமாக செய்யப்பட்ட ரசமணி ஏராளமாக இருக்கிறது. ரசவாதத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட சிலைதான் பழனியில் உள்ள ‘ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலை’. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ‘போகர் சித்தர்’ இந்த நவபாஷாண சிலையை ரசவாதத்தின் மூலம் வடிவமைத்து பிரதிஷ்டை செய்தார். இன்றும் அந்த சிலையின் மீது பட்டு வெளிவரும் தீர்த்தத்தை குடித்தால் தீராத நோய்களும் தீர்கின்றது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு உண்மை. ரசமணியின் பயன்கள் சித்தர்களுக்கு rasamani இரும்பைக் கூட தங்கமாக மாற்றும் சக்தி சித்தர்களின் ரசவாதம் வெறும் வைத்தியத்தோடு மட்டும் நின்று விடவில்லை. ஞானசக்தி, யோகசக்தி இவைகளிலும் சித்தர்கள் சிறந்து விளங்கினார்கள். எந்த ஒரு உலோகமானாலும் அதை தங்கமாக மாற்றும் உலோகமாற்றும் வித்தையை சித்தர்கள் அறிந்திருந்தனர். இந்த வித்தை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடிய இல்லை. இது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. கலியுகத்தில் இது அறியப்படாமல் இருப்பதே நல்லது. இடம்பெயர்தல் சித்தர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர ரசகுளிகை என்று கூறப்படும் ரசமணியை பயன்படுத்தி வந்தார்கள். முறையான மந்திரங்களை ஓதி, சரியான மூலிகைகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த ரசமணியை சித்தர்கள் வைத்திருந்தார்கள். அவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயற வேண்டும் என்றால் இந்த ரசமணியை வாயில் போட்டு கொள்வார்கள். இது சித்தர்களுக்கு காற்றில் பறக்கும் சக்தியை கொடுக்கின்றது. இப்படித்தான் போகர் இந்தியாவிலிருந்து சீன தேசத்திற்கு சென்றதாக கோரக்க சித்தர் கூறுகின்றார். இப்படிப்பட்ட மந்திர தந்திரங்களை அறிந்துகொள்ள மனிதர்கள் ஒன்றும் ஞானிகளோ, சித்தர்களோ மகான்களோ அல்ல. பணத்தாசை இல்லாமல், மற்ற ஆசைகளை எல்லாம் துறந்த சித்தர்களுக்குள்ளேயே இந்த வித்தையெல்லாம், சித்தர்கள் மறைவது போலவே, இப்படிப்பட்ட மந்திர, தந்திரங்களும் மறைந்துவிட்டது. ஆனால் மனிதனுக்கு பயன்படும் வகையில், மருத்துவத்தை சித்தர்கள் விட்டுச் சென்றிருக்கின்றார்கள். இந்த ரசமணியால் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை பற்றி காண்போம். rasamani வாதம் பித்தம் கபம் மனிதனின் உடலுக்கு இந்த மூன்று நிலைகளும் மிகவும் முக்கியமானது. இந்த மூன்றும் சமமாக இருந்தால் மட்டுமே நம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாதம் என்பது நம் உடம்பில் உள்ள ஒரு வாயு. இது நம் உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. பித்தம் என்பது நம் உடலின் வெப்பநிலையை தருகின்றது. கபம் என்பது நம் உடலுக்கான குளிர்ச்சியைத் தருகின்றது. இந்த மூன்றும் நம் உடம்பில் அதிகரித்தாலும், குறைந்தாலும் நம் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. வாதம் கூடினாலும், பித்தம் கூடினாலும், கபம் கூடினாலும் நம் உடலில் 1482 வியாதிகள் வந்துவிடும். இந்த வாதம் பித்தம் கபம் சமநிலை படுத்த இந்த ரசமணி உதவி செய்கிறது. ரத்த அழுத்தம் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ரசமணியை அணிவதால் ரத்த அழுத்தம் சீராக்கப்பட்டு அவர்களின் உடல்நிலை இயல்புக்கு திரும்பிவிடும். நம் உடலில் உள்ள சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்பட இது உதவி செய்கிறது. உடலிலுள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் இது பயன்படுகிறது. எதிர்மறை சக்திகள் நம் உலகத்தில் எத்தனையோ எதிர்மறை ஆற்றல் கொண்ட சக்திகள் இருந்துதான் வருகின்றது. அவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த ரசமணிகள் பெரிதும் பயன்படுகிறது. மற்றவர்கள் நமக்கு வைக்கும் பில்லி, சூனியம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மால் விடுபட முடியும். பிரகாசமான முகம் இந்த ரசமணியை அணிந்து கொண்டால் நம் மனதிலுள்ள ஒளியானது தூண்டப்பட்டு நம் முகம் பிரகாசமாக ஜொலிக்க படுகிறது. அதுமட்டுமில்லாமல் நம் அறிவு வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் அதிகரிக்கப்படுகிறது. நமது வயது முதுமை அடைந்தாலும், நம் உடலை இளமையோடு வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்போதுமே இருக்கிறது. என்றும் நம் தேகம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க இதை அணிந்து கொள்ளலாம். rasamani தாம்பத்திய வாழ்க்கை கணவன்-மனைவி இடையே ஒற்றுமையை அதிகரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி அளிக்க ரசமணிக்கு ஒரு பங்கு உண்டு. விந்தணுவை கெட்டியாக்கும் சக்தியும் ரசமணிக்கு உண்டு. வியாபாரம் நல்ல முறையில் நேர்மையாக நடத்தப்படும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு இந்த ரசமணி துணையாக நிற்கும். நாம் வாகனத்தில் செல்லும் பொழுது விபத்துக்களை தடுக்க ரசமணி பயன்படுத்தப்படுகிறது. சிறு குழந்தைகளுக்கு காத்து, கருப்பு அண்டாமல் சிறுகுழந்தைகளை பாதுகாக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் இருந்து பாதுகாக்க ரசமணியானது உதவுகின்றது. அஷ்டமா சித்தி இந்த ரசமணி வைத்து அஷ்டமா சித்திகளையும் விளையாடிப் பார்க்கலாம் என்பது சித்தர்களின் வாக்கு. ஆனால் அதைப் பற்றின குறிப்புகள் நம் கண்களில் புலப்படவே இல்லை. கலியுகத்திற்கு அது தேவையும் இல்லை. அஷ்டமாசித்திகளை பற்றி அறியாவிட்டாலும், மனிதனுக்கு பயன்தரக்கூடிய ரசமணியை பற்றி அறிந்து இருப்பது மனிதர்களின் பாக்கியம். rasamani ரசமணிகள் உண்மையான ரசமணிகளா என்று பரிசோதிக்கும் சில டிப்ஸ் 1. ரசமணியை வாங்கி வந்தவுடன் சுத்தமான தண்ணீரில் வைக்கவும். 2. ஒரு மணி நேரத்திற்குப் பின்பு நாம் தண்ணீரில் போட்ட ரசமணியானது பொன் நிறமாக மாற வேண்டும். நவபாஷாணம் சேர்த்து செய்த ரசமணி பொன் நிறமாக மாறும் தன்மையை கொண்டது. 3. ரசமணி சிறிதளவு பசும்பாலில் போட்டால், அந்த பாலானது 2 நிமிடத்திற்குள் தயிராக மாறி விடும். 4. அலுமினியத்துடன், ரசமணியை சேர்த்து தேய்த்தால் அலுமினியம் சாம்பல் பஸ்பமாக மாறிவிடும்.

ரசமணியின் பயன்களும் அதன் ரகசியங்களும்

ரசமணி

ரசமணி என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்டது. ‘ரசம்’ என்றால் பாதரசம். திரவ நிலையை கொண்ட இந்த உலோகம், நம் உடலுக்கு கெடுதலை தரும். ஆனால் சித்த வைத்தியத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளில் பாதரசம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பாதரசத்தை மருந்தாகப் பயன்படுத்தும் போது தீராத நோய்களும் தீரும் என்று சித்தர்களின் வைத்தியத்தில் கூறப்பட்டுள்ளது.

rasamani

இப்படி சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இந்த பாதரசத்தை கடினமான உலோகமாக மாற்றி, மணியாக செய்து, கயிரில் கோர்த்து கழுத்தில் கட்டிக்கொண்டால் ஏராளமான பயன்கள் உண்டு என்கிறது சித்தர்களின் ரகசிய குறிப்பு.

திரவத் தன்மையை கொண்ட பாதரசத்தை அரிய மூலிகைகளுடனும், பாஷானத்துடனும் சேர்த்து கடினமான உலோகமாக மாற்றுவது ரசவாதம் என்று கூறுவார்கள். இப்படி ரசவாதத்தில் மூலமாக செய்யப்பட்ட ரசமணி ஏராளமாக இருக்கிறது.

ரசவாதத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட சிலைதான் பழனியில் உள்ள ‘ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலை’. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ‘போகர் சித்தர்’ இந்த நவபாஷாண சிலையை ரசவாதத்தின் மூலம் வடிவமைத்து பிரதிஷ்டை செய்தார். இன்றும் அந்த சிலையின் மீது பட்டு வெளிவரும் தீர்த்தத்தை குடித்தால் தீராத நோய்களும் தீர்கின்றது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு உண்மை.

ரசமணியின் பயன்கள் சித்தர்களுக்கு

rasamani

இரும்பைக் கூட தங்கமாக மாற்றும் சக்தி

சித்தர்களின் ரசவாதம் வெறும் வைத்தியத்தோடு மட்டும் நின்று விடவில்லை. ஞானசக்தி, யோகசக்தி இவைகளிலும் சித்தர்கள் சிறந்து விளங்கினார்கள். எந்த ஒரு உலோகமானாலும் அதை தங்கமாக மாற்றும் உலோகமாற்றும் வித்தையை சித்தர்கள் அறிந்திருந்தனர். இந்த வித்தை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடிய இல்லை. இது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. கலியுகத்தில் இது அறியப்படாமல் இருப்பதே நல்லது.

இடம்பெயர்தல்

சித்தர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர ரசகுளிகை என்று கூறப்படும் ரசமணியை பயன்படுத்தி வந்தார்கள். முறையான மந்திரங்களை ஓதி, சரியான மூலிகைகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த ரசமணியை சித்தர்கள் வைத்திருந்தார்கள். அவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயற வேண்டும் என்றால் இந்த ரசமணியை வாயில் போட்டு கொள்வார்கள். இது சித்தர்களுக்கு காற்றில் பறக்கும் சக்தியை கொடுக்கின்றது. இப்படித்தான் போகர் இந்தியாவிலிருந்து சீன தேசத்திற்கு சென்றதாக கோரக்க சித்தர் கூறுகின்றார்.

இப்படிப்பட்ட மந்திர தந்திரங்களை அறிந்துகொள்ள மனிதர்கள் ஒன்றும் ஞானிகளோ, சித்தர்களோ மகான்களோ அல்ல. பணத்தாசை இல்லாமல், மற்ற ஆசைகளை எல்லாம் துறந்த சித்தர்களுக்குள்ளேயே இந்த வித்தையெல்லாம், சித்தர்கள் மறைவது போலவே, இப்படிப்பட்ட மந்திர, தந்திரங்களும் மறைந்துவிட்டது. ஆனால் மனிதனுக்கு பயன்படும் வகையில், மருத்துவத்தை சித்தர்கள் விட்டுச் சென்றிருக்கின்றார்கள். இந்த ரசமணியால் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை பற்றி காண்போம்.

rasamani

வாதம் பித்தம் கபம்

மனிதனின் உடலுக்கு இந்த மூன்று நிலைகளும் மிகவும் முக்கியமானது. இந்த மூன்றும் சமமாக இருந்தால் மட்டுமே நம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாதம் என்பது நம் உடம்பில் உள்ள ஒரு வாயு. இது நம் உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. பித்தம் என்பது நம் உடலின் வெப்பநிலையை தருகின்றது. கபம் என்பது நம் உடலுக்கான குளிர்ச்சியைத் தருகின்றது. இந்த மூன்றும் நம் உடம்பில் அதிகரித்தாலும், குறைந்தாலும் நம் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. வாதம் கூடினாலும், பித்தம் கூடினாலும், கபம் கூடினாலும் நம் உடலில் 1482 வியாதிகள் வந்துவிடும். இந்த வாதம் பித்தம் கபம் சமநிலை படுத்த இந்த ரசமணி உதவி செய்கிறது.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ரசமணியை அணிவதால் ரத்த அழுத்தம் சீராக்கப்பட்டு அவர்களின் உடல்நிலை இயல்புக்கு திரும்பிவிடும். நம் உடலில் உள்ள சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்பட இது உதவி செய்கிறது. உடலிலுள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் இது பயன்படுகிறது.

எதிர்மறை சக்திகள்

நம் உலகத்தில் எத்தனையோ எதிர்மறை ஆற்றல் கொண்ட சக்திகள் இருந்துதான் வருகின்றது. அவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த ரசமணிகள் பெரிதும் பயன்படுகிறது. மற்றவர்கள் நமக்கு வைக்கும் பில்லி, சூனியம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மால் விடுபட முடியும்.

பிரகாசமான முகம்

இந்த ரசமணியை அணிந்து கொண்டால் நம் மனதிலுள்ள ஒளியானது தூண்டப்பட்டு நம் முகம் பிரகாசமாக ஜொலிக்க படுகிறது. அதுமட்டுமில்லாமல் நம் அறிவு வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் அதிகரிக்கப்படுகிறது. நமது வயது முதுமை அடைந்தாலும், நம் உடலை இளமையோடு வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்போதுமே இருக்கிறது. என்றும் நம் தேகம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க இதை அணிந்து கொள்ளலாம்.

rasamani

தாம்பத்திய வாழ்க்கை

கணவன்-மனைவி இடையே ஒற்றுமையை அதிகரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி அளிக்க ரசமணிக்கு ஒரு பங்கு உண்டு. விந்தணுவை கெட்டியாக்கும் சக்தியும் ரசமணிக்கு உண்டு.

வியாபாரம்

நல்ல முறையில் நேர்மையாக நடத்தப்படும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு இந்த ரசமணி துணையாக நிற்கும். நாம் வாகனத்தில் செல்லும் பொழுது விபத்துக்களை தடுக்க ரசமணி பயன்படுத்தப்படுகிறது.

சிறு குழந்தைகளுக்கு

காத்து, கருப்பு அண்டாமல் சிறுகுழந்தைகளை பாதுகாக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் இருந்து பாதுகாக்க ரசமணியானது உதவுகின்றது.

அஷ்டமா சித்தி

இந்த ரசமணி வைத்து அஷ்டமா சித்திகளையும் விளையாடிப் பார்க்கலாம் என்பது சித்தர்களின் வாக்கு. ஆனால் அதைப் பற்றின குறிப்புகள் நம் கண்களில் புலப்படவே இல்லை. கலியுகத்திற்கு அது தேவையும் இல்லை. அஷ்டமாசித்திகளை பற்றி அறியாவிட்டாலும், மனிதனுக்கு பயன்தரக்கூடிய ரசமணியை பற்றி அறிந்து இருப்பது மனிதர்களின் பாக்கியம்.

rasamani

ரசமணிகள் உண்மையான ரசமணிகளா என்று பரிசோதிக்கும் சில டிப்ஸ்

1. ரசமணியை வாங்கி வந்தவுடன் சுத்தமான தண்ணீரில் வைக்கவும்.

2. ஒரு மணி நேரத்திற்குப் பின்பு நாம் தண்ணீரில் போட்ட ரசமணியானது பொன் நிறமாக மாற வேண்டும். நவபாஷாணம் சேர்த்து செய்த ரசமணி பொன் நிறமாக மாறும் தன்மையை கொண்டது.

3. ரசமணி சிறிதளவு பசும்பாலில் போட்டால், அந்த பாலானது 2 நிமிடத்திற்குள் தயிராக மாறி விடும்.

4. அலுமினியத்துடன், ரசமணியை சேர்த்து தேய்த்தால் அலுமினியம் சாம்பல் பஸ்பமாக மாறிவிடும்.