புதன், 11 மே, 2022

18 வருடங்களுக்கு பிறகு கமலின் குரலில் குத்து பாடல் விக்ரம் படத்தில்.

கமலின் குத்து பாடல்உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம். 

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது, இதற்காக தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கிறார்கள் என்றே கூறலாம்.

இந்நிலையில் இன்று விக்ரம் படத்தின் சிங்கிள் பாடலான "பத்தல பத்தல" 7 மணிக்கு வெளியாகவுள்ளது, கமல் இன்ட்ரோ குத்து பாடலாக உருவாகியுள்ளதை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் 18 வருடங்களுக்கு பிறகு கமலின் குரலில் இன்ட்ரோ குத்து பாடல் விக்ரம் படத்தில் தான் அமைந்துள்ளது. இதற்கு முன் வசூல்ராஜா திரைப்படத்தில் தான் கமல் இப்படி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.