Skip to main content

Posts

Showing posts from December, 2022

இந்த வாரம் டபுள் எலிமினேஷன் வெளியேறும் போட்டியாளர்கள்.

இந்த வாரம் டபுள் எலிமினேஷன் வெளியேறும் போட்டியாளர்கள். வெளியேறிய குயின்ஸி பிக் பாஸ் சீசன் 6 நிறைவு காலத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் சுமார் 21 போட்டியாளர்கள் களமிறங்கியிருந்தார். ஆனால் மக்களின் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளைப் பெற்ற சுமார் 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளர். மேலும் கடந்த வாரம் குயின்சி வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த வார தலைவரின் தேர்வுக்கான டாஸ்க்கள் பிக் பாஸால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் தனலெட்சுமி, சிவின் மற்றும் மணிகண்டன் கலந்துக் கொண்டார்கள்.  மேலும் முதல் சுற்றில் சிவின் தோல்வியுற்றதால் மணிக்கும் தனலெட்சுமிக்கும் போட்டிகள் தொடர்ந்தது. நாமினேஷனில் சிக்கிய பிரபலங்கள் இந்நிலையில் இந்த வாரம் தலைவர் மணி என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷனில் ஆயிஷா, ராம், அசீம் ஆகியோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வாரம் ஆயிஷா அல்லது ராம் வெளியேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  தொடர்ந்து அசீமிற்கு மூன்றாவது வொர்னிங் கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த வாரம் அசீம் ரெட்கார்ட்டுடன்

பிரபல நகைச்சுவை நடிகர் ஹரி வைரவன் மறைவு குறித்து நடிகர் சூரி உருக்கமாக பதிவிட்டுள்ளார்

பிரபல நகைச்சுவை நடிகர் ஹரி வைரவன் மறைவு குறித்து நடிகர் சூரி உருக்கமாக பதிவிட்டுள்ளார். வெண்ணிலா கபடிக் குழு அறிமுகம்  தமிழில் வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஹரி வைரவன், நள்ளிரவு 12.15 மணியளவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.  அவரது மரணம் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரி வைரவனின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூரி இரங்கல் பதிவு  இந்த நிலையில் நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று காலை தம்பி வைரவனின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயர் கொண்டேன். பிரிவின் மீளா துயரில் தவிக்கும் குடும்பத்தாருக்கு அந்த ஆத்தா மீனாட்சி எல்லா தைரியத்தையும் தர வேண்டுகிறேன். போய் வா தம்பி' என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இன்று காலை தம்பி வைரவனின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயர் கொண்டேன். பிரிவின் மீளா துயரில் தவிக்கும் குடும்பத்தார் க்கு அந்த ஆத்தா மீனாட்சி எல்லா தைரியத்தையும் தர வேண்டுகிறேன். போய் வா தம்பி #ActorVairavan pic.twitter.com/ulBY4H5TLR — Actor Soori (@sooriofficial) Decemb

எலிமினேஷனை அறிவித்த கமல்.. எதிர்பார்த்த போட்டியாளர் தான் வெளியேறினார்

எலிமினேஷனை அறிவித்த கமல்.. எதிர்பார்த்த போட்டியாளர் தான் வெளியேறினார் பிக் பாஸ் பிக் பாஸ் 6 தற்போது பாதி நாட்களை கடந்துவிட்டது. மீதம் இருக்கும் நாட்களில் சிறப்பாக விளையாடி யார் பைனல் வரை செல்லப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் சரியாக போட்டியில் கவனம் செலுத்தாத போட்டியாளர்கள் தான் எலிமினேஷனில் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அசல், ராபர்ட், ஷெரினா உட்பட இதுவரை 6 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கின்றனர். வெளியேற்றப்பட்ட குயின்சி இந்நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மைனா, ஜனனி, ரச்சிதா, குயின்சி, தனலட்சுமி மற்றும் கதிரவன் ஆகியோர் இருந்தனர். அதில் குயின்சி தான் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்து இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை எபிசோடு ஷூட்டிங் இன்றே முடிவடைந்த நிலையில் குயின்சி எலிமினேஷன் பற்றி உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.  

ஜோதிகா இதுவரை நடித்த திரைப்படங்கள் 1998 2023 Cinemugam

ஜோதிகா இதுவரை நடித்த திரைப்படங்கள் 1998 - 2023. Cinemugam. #Jyothika #cinemugam #filmography