ஜவான் வெறித் தனமான வசூல் | Jawan Box Office Collection
ஜவான்
ஷாருக்கான் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக ஒரு ஹிட் கொடுக்க போராடி வந்தார். அவ்வளவு தான் இனி இவரும் எதாவது டிவி நிகழ்ச்சி செல்ல வேண்டியது தான் என்ற நிலை தான் இருந்தது.
ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி என்றைக்கும் நான் தான் கிங் என்று பதான் படம் மூலம் நிரூபித்தார், உலகம் முழுவதும் பதான் ரூ 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில் பதானை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக் நடிப்பில் வெளிவந்த ஜவான் நேற்றோடு ரூ 1000 கோடி வசூலை கடந்துள்ளது.
தமிழ் சினிமா இயக்குனர்களில் முதன் முறையாக ரூ 1000 கோடி வசூலை தொட்ட இயக்குனர் என்ற பெருமையை அட்லீ பெற்றுள்ளார், ஷங்கரின் 2.0 கூட ரூ 700 கோடி தான் வசூல் செய்தது.