Skip to main content

விலகிய மேலாடை.. Zoom செய்த கேமரா மேன்.. வாணி போஜன் கொடுத்த பதிலடி..!

 நடிகை வாணி போஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் அவருடைய வீடியோ ஒன்றை காட்டி இதற்கு உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.



அந்த வீடியோவில் நடிகை வாணி போஜன் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது அவருடைய மேலாடை மெல்லமாக விலகி விட அதனை அட்ஜஸ்ட் செய்யும் இடைவெளியில் கேமராமேன் ஒருவர் அந்த பாகத்தை ஜூம் செய்து பபடமாக்கியிருக்கிறார்.


அந்த வீடியோ காட்சியை வாணி போஜனிடம் காட்டி இப்படி உங்களை படம் பிடித்து இருக்கிறார்கள். இதற்கு உங்களுடைய பதில் என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதை நானும் பார்த்தேன்.. எனக்கு மிகவும் அருவருப்பான ஒரு விஷயமாக எனக்கு தெரிந்தது.


அதாவது நான் ஆடையை அட்ஜஸ்ட் செய்கிறேன் என்றால் கேமராவை வேறு பக்கம் நீ திருப்பி இருக்க வேண்டும். அது தான் ஒரு மனிதத் தன்மை. ஆனால், நான் எப்போது அட்ஜஸ்ட் செய்வேன்.


அதனை ஜூம் செய்து படம் எடுக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் தவறு என் மீது கிடையாது.


ஏனென்றால் நாம் எந்த உடை அணிந்தாலும் அந்த உடை நாம் நடக்கும் போது திரும்பும் போது என அப்படி இப்படி விலகத்தான் செய்யும்.


அதை காத்திருந்து படம் பிடிப்பது என்பது அவர்களுடைய தவறே தவிர என்னுடைய தவறு கிடையாது என பதில் கொடுத்திருக்கிறார்.


இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வாணி போஜன் சொன்ன கருத்துக்களில் உண்மை உள்ளது என்று அவருக்கு ஆதரவாக பல ரசிகர்கள் பேசி இருக்கிறார்கள்.


## நடிகை வாணி போஜன் அளித்த பதிலுக்கு நம் கருத்து:


நடிகை வாணி போஜன் அந்த வீடியோவில் பற்றி அளித்த பதிலில் முழு நியாயம் இருக்கிறது. ஒரு பெண் தன்னுடைய ஆடையை சரிசெய்யும் போது, அந்த நேரத்தில் அவரை ஜூம் செய்து படம் எடுப்பது தவறான செயல். அது ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது போன்றது. 


வாணி போஜன் சொன்னது போல, எந்த உடை அணிந்தாலும் அது நடக்கும் போது, திரும்பும் போது சற்று விலகிவிட வாய்ப்பு உள்ளது. அதை காத்திருந்து தவறாக படம் எடுப்பது நிச்சயமாக தவறு. 


இந்த சம்பவம் நடிகை வாணி போஜனுக்கு மட்டுமல்லாமல், அனைத்து பெண்களுக்கும் எதிரான ஒரு குற்றம். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். 


வாணி போஜனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரசிகர்களின் கருத்துக்களையும் நாம்  முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும். 


இந்த சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுத்தருகிறது. பெண்களை மதிக்க வேண்டும், அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடக்கூடாது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.



Comments