விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஒரே நாள்ல 2 திருமணமா? ஆமாங்க, நீங்க கேட்டது உண்மைதான்!
இவர்களுடைய பிரம்மாண்ட திருமணம் இன்று உதய்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட மாளிகையில் நடைபெறுகிறது. இந்த மாளிகையின் ஒரு நாள் வாடகை மட்டும் 10 லட்சத்திற்கும் மேலாம்!
இந்த கல்யாணத்தோட மொத்த செலவு 90 லட்சத்துல இருந்து 2.5 கோடி ரூபாய் வரைக்கும் ஆகுமாம்! அதுவே பிரைவசிக்காக மொத்த ரிசார்ட்டையும் புக் செஞ்சிருந்தா செலவு இன்னும் பல மடங்கு அதிகமாகும்னு சொல்றாங்க.
அதுமட்டுமில்லாம, ஒரே நாள்ல ரெண்டு முறை திருமணம் நடக்கப்போகுது! காலையில் தெலுங்கு பாரம்பரியப்படியும், மாலையில் ராஷ்மிகாவின் கொடவா பாரம்பரியப்படியும் திருமணம் நடக்கிறது.
இதில் ஹைலைட் என்னன்னா.. விஜய்யின் தாய் மாதவி, தங்களின் மருமகள் ராஷ்மிகாவுக்கு பரம்பரை வளையல்களை கல்யாண பரிசா கொடுத்திருக்காங்களாம்!
திருமணத்துக்குப் பிறகு, மார்ச் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் புடைசூழ பிரம்மாண்ட ரிசப்ஷன் நடக்கவுள்ளது.
இந்த கியூட்டான ஜோடிக்கு உங்க வாழ்த்துகளை கமெண்ட்ல சொல்லிட்டு, அப்படியே நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க!