Advertisement

பூண்டு பொடி, Garlic Podi, Rice Mix,

பூண்டு பொடி,  Garlic Podi, Rice Mix, 

பூண்டு பொடி / Garlic Podi / Rice Mix


Hello Friends, Welcome to Amma Samayal, 

நம்ம இன்னைக்கு அம்மா சமையலில் பொடி வகைகள் பத்தி பார்க்க  போகிறோம். அந்த வகையில் நாம இன்னிக்கு பார்க்கப் போறது பூண்டுப்பொடி.  இது ரொம்பவே ஒரு ஆரோக்கியமான பொடி இதை சாதத்தோட சாப்பிடவும் நல்லா இருக்கும். அதே மாதிரி இட்லி தோசை சப்பாத்தி கூடவும் சாப்பிட நல்லா இருக்கும். 


பூண்டு பொடி ரெகுலரா சாப்பிடும் போது இதயத் தசைகள் வலுப்பெறும் அதே சமயம் இதயத்தில கொழுப்பு சேராம இது நம்மை காக்கும். இது இரத்த அழுத்தத்தையும் சம சீரா வச்சுக்க உதவும். 


இந்தப் பொடியில நிறைய சத்துக்கள் இருக்கு.  அதனால கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை நீங்க மிஸ் பண்ணாம முழுவதும் பாருங்க. அதுல அம்மா பூண்டு பொடியோட நன்மைகள பத்தி தெளிவா சொல்லிருக்காங்க. 

முதல அடுப்பை பத்த வச்சு அதில ஒரு பாத்திரத்தை வச்சு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு தோல் நீக்கிய பூண்டை அதுல போட்டு வறுத்து எடுக்கணும். நல்ல பிரவுன் கலர்ல வரும் வரைக்கும் வறுத்து எடுக்கனும். 


நெருப்ப குறைச்சி வச்சி நல்ல மொரு மொருப்பா வதக்குனாதான் பூண்டோட வாசனை இல்லாம போகும். அதிக நாட்கள் கெட்டும் போகாது. 


இந்த பொடி வாயு தொல்லைய முலு கட்டுபாட்டுல வைக்க உதவும். பூண்டு வந்து கிருமி நாசினிங்றது எல்லாருக்கும் தெரியும்.  இப்போ பூண்ட நல்லா வருத்து எடுத்தாச்சி. இப்போ அதே பாத்திரத்துல எண்னை இல்லாம உளுந்த வருத்து எடுக்கனும்.


பூண்டு வந்து கிருமிநாசினிங்ரது எல்லாருக்கும் தெரியும். அதனால வயித்துல குடலுல பூச்சி தொந்தரவுனால அவதி படுதவங்க இந்த பூண்டு பொடிய தொடர்ச்சியா சாப்பிடுறதுனால அந்த பிரச்சனை நமக்கு வராது. உளுந்த நல்லா வதக்கிருங்க உளுந்து வளருர குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது. வீட்டிலுள்ள எல்லாருக்கும் ரொம்ப ஆரோக்கியமானது. 


நல்ல கோல்டன்  ப்ரௌன் கலர் ஆனதுக்கு அப்புறம் பூண்டையும் சேர்த்து காய்ந்த வத்தலையும் சேர்த்து  வதக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். 


பூண்டை அதிக அளவு உணவில் சேர்க்கும் போது நம்ம உடம்புல சேர கூடிய தேவையில்லாத கொழுப்பு கண்ட்ரோல்ல இருக்கும். அதே மாதிரி வைரஸ் தொற்று நோய்கள் இதெல்லாம் பரவாமல் காக்கும்.


அதே போல பாடல்.பால் கொடுக்குறவங்க பூண்டு அதிகமா எடுக்கும் போது தாய் பால் அதிகமா சுரக்கும். நெஞ்சில இருக்க கூடிய சலியை கரைச்சிட்டு சுவாசத்தை வந்து நல்ல சுவாசிக்க உதவுது ஜீரண சக்திய அதிகரிக்க கூடியது.


இப்ப நல்ல ஆறுனதுக்கு அப்புறம் ஒரு மிக்சி ஜார்ல போட்டு ரொம்ப நேரம் ஓட விட்டுடே இருக்க கூடாது.அப்படி பன்னுனிங்கனா பூண்டு வந்து பேஸ்ட் மாதிரி ஆகிரும். அதனால கொஞ்ச,கொஞ்சமா அரைச்சி எடுத்துகனும். இப்ப பூண்டு பொடி நமக்கு ரெடி.


அதற்கு தேவையான பொருட்கள்.


மலை பூண்டு அல்லது நாட்டுப்பூண்டு = 200 கிராம்

காய்ந்த வத்தல் = 5

உளுந்தம் பருப்பு = ½ கப் அளவு

எண்ணெய் = 1

உப்பு = தேவையான அளவு


எந்த பொடியா இருந்தாலும் நிரைய செய்யாமல் ஒரு வாரத்துக்கு மட்டும் செஞ்சி வைத்து கொள்ளுங்கள்.இப்படி கொஞ்சமா பண்றதுனால அதோட பெனிபிட்ஸ் நமக்கு முழுமையா கிடைக்கும்.


இந்த பொடிய நீங்க சாதத்தோட நெய் ஊற்றி  சாப்பிடும் போது ரொம்பவே நல்லா இருக்கும். அதே மாதிரி தோசைக்கு மேல ஸ்பிரட் பண்ணி சாப்பிடுறதுக்கும் ரொம்ப நல்லா இருக்கும்.


இந்த பொடிய நம்ம ஒரு பத்து நாளைக்கு ஸ்டோர் பண்ணி வச்சிகலாம்.ஒரு காற்று புகாத பாட்டிலில் ஸ்டோர் பண்ணி வச்சிகலாம்.