வெறும் 10 நாட்களில் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல், உடல் எடையை குறைக்க உங்களுக்கு ஆசையா இருக்கா? 1 ஸ்பூன் இந்தப் பொடியை சாப்பிட்டாலே போதும்.
நிறைய பேர் இன்று அதிகப்படியான உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். உடல் எடையை குறைப்பதற்கு செயற்கையாக எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால் அந்த வழிகள் அனைத்தும் எதிர்காலத்தில் நமக்கு பக்க விளைவுகளை உண்டாக்கி விடும். இயற்கையான முறையில், இயற்கையாக விளையக்கூடிய பொருட்களை வைத்து நம் உடலில் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாமல் மிக மிக சுலபமாக, உடல் எடையை குறைக்க உங்களுக்காக, ஒரு வழி இந்த குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. படிப்படியாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வழியை தாராளமாக பின்பற்றலாம்.
உடல் எடையை குறைப்பதற்கு, நாம் ஒரு பொடியை தயார் செய்யப் போகின்றோம். அதற்குத் தேவையான பொருட்களை முதலில் பார்த்து விடுவோம். கொடம் புளி – 50 கிராம், சோம்பு – 50 கிராம், சீரகம் – 25 கிராம், ஆளி விதை – 50 கிராம், காய்ந்த கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு.
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொடம்புளியை போட்டு இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் சூடுபடுத்தி எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அதே கடாயில் சோம்பு, சீரகம், ஆளிவிதை, காய்ந்த கறிவேப்பிலை இந்த நான்கு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து 2 நிமிடங்கள் வாசம் வரும் வரை வறுத்து எடுத்து நன்றாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும்.
இதனுடன் வறுத்து வைத்த கொடம் புளி யையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கு தேவையான பொடி மிக மிக சுலபமான முறையில் தயார். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு காற்று புகாமல் மூடி வைத்துவிட்டால், இரண்டு மாதங்கள் வரைகூட கெட்டுப் போகாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் கூட வைக்க வேண்டாம்.
தினமும் இரவு சாப்பாட்டை சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பாக இந்தப் பொடியை சாப்பிட வேண்டும். 1 ஸ்பூன் அளவு இந்தப் பொடியுடன், 1/2 ஸ்பூன் தேன் கலந்து அப்படியே சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் 1 டம்ளர் அளவு தண்ணீரில் இந்தப் பொடியைப் போட்டு கலந்து அப்படியேவும் குடித்துக் கொள்ளலாம்.
இரவு நேரத்தில் இதை குடிக்க முடியாதவர்கள் காலை உணவு சாப்பிட்ட பின்பு, ஒரு மணி நேரம் கழித்தும் இந்த பொடியை சாப்பிட்டு வரலாம். முறையான சாப்பாட்டுடன், இந்தப் பொடியை தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தாலே உங்களுடைய உடல் எடையில் நல்ல வித்தியாசம் தெரியும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிப்ஸை முயற்சி செய்து பாருங்கள். பக்க விளைவுகள் ஏற்படாமல் இயற்கையான முறையில் உங்கள் எடையை குறைக்க இதுவும் ஒரு சிறந்த வழிதான்.