Advertisement

வெறும் 7 நாட்களில் கால்சியம் குறைபாட்டை சரி செய்ய, ஆயுசுக்கும் மூட்டு வலியில் இருந்து தப்பித்துக்கொள்ள, தினமும் ஒரு டம்ளர் இந்த பாலை குடிச்சுட்டு வாங்க!

வெறும் 7 நாட்களில் கால்சியம் குறைபாட்டை சரி செய்ய, ஆயுசுக்கும் மூட்டு வலியில் இருந்து தப்பித்துக்கொள்ள, தினமும் ஒரு டம்ளர் இந்த பாலை குடிச்சுட்டு வாங்க!

நம்முடைய உடல் ஆரோக்கிய குறைபாட்டிற்கு முதல் காரணம் நம்முடைய உணவு பழக்கவழக்கங்கள் தான். வெறும் அரிசியை கொண்டு செய்யக்கூடிய பொருட்களைத்தான் தினசரி சாப்பாட்டில் சேர்த்துக் கொள்கின்றோம். ஆனால் தானிய வகைகளில் தான் அதிகப்படியான கால்சியம் சத்து இருக்கின்றது. அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் தாத்தாக்கள் கேழ்வரகு கம்பு தினை போன்ற தானிய உணவுகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்ட காரணத்தால் தான், 80 வயதைக் கடந்தாலும், மூட்டு வலி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். இப்போது முப்பது வயதை கடக்கும் போதே நமக்கு மூட்டுவலி வருகின்றது. இந்த மூட்டு வலியிலிருந்து தப்பிக்க எலும்புகளை உறுதிப்படுத்த என்னதான் செய்வது.

backbonepain

இந்த சத்து நிறைந்த பாலை குடித்தால், கால்சியம் குறைபாடட்டில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். இந்த பாலை தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் நாம் பார்த்து விடுவோம். கேழ்வரகு மாவு – 250 கிராம், கருப்பு எள்ளு – 50 கிராம், சோம்பு – 2 டேபிள்ஸ்பூன், கற்கண்டு – 50 கிராம்.

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கேழ்வரகு மாவை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடைய பச்சை வாடை போகும் அளவிற்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக கருப்பு எள்ளை சூடான கடாயில் கொட்டி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எள் கடாயில் கொட்டிய உடன், பட் பட் என வெடிக்க தொடங்கும். அது வரை வறுத்துக் கொள்ள வேண்டும். எள்ளு கருகி விடக்கூடாது.

ragi 1

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வறுத்த எள்ளு, சோம்பு, கற்கண்டு இந்த 3 பொருட்களையும் போட்டு நன்றாக பொடி செய்து, அந்த பொடியை வறுத்த கேழ்வரகு மாவுடன் நன்றாகக் கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.


இந்தப் பொடியை தினசரி எப்படி பாலுடன் கலந்து குடிப்பது? பாலை காய்ச்சி ஒரு டம்ளர் அளவு சூடாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு நீங்கள் அரைத்த பொடியை சேர்த்து, அதில் 1/4 டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இந்த கரைசலை சூடாக இருக்கும் பாலில் ஊற்றி கலந்து அப்படியே குடித்து விடவேண்டியது தான்.

ellu 1-compressed

இந்தப் பவுடரை தண்ணீரில் கலக்காமல் நேரடியாக சூடான பாலில் போட்டால் கட்டிப்பிடிக்கும். நன்றாக கலக்க முடியாது என்பதால்தான் கொஞ்சமாக பச்சை தண்ணீரில் இந்த பொடியை கலந்து, சூடான பாலில் ஊற்றி கலக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. தினமும் காலையில் காபி டீயை தவிர்த்துவிட்டு இந்த பாலை குடிப்பது நல்லது.

milk4

சோம்பு வாசம் பிடிக்காதவர்கள் சோப்புக்கு பதிலாக ஏலக்காய்களை சேர்த்துக் கொள்ளலாம். கற்கண்டு வேண்டாம் என்பவர்கள் அதை தவிர்த்து விட்டு அதற்குப் பதில் பாலில் தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து கூட இந்த பாலை குடிக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்பே சேர்க்காமலும் இந்த பாலை பருகலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உடலில் இருக்கும் கால்சியம் சத்துக் குறைபாட்டை சீக்கிரமே சரி செய்ய இந்த பால் உதவியாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.