இப்படி செய்தால் போதுமே! வாயை சுற்றி உள்ள கருவளையம், பூனை முடி பிரச்சனை ஒரே நாளில் சரியாகிவிடும். உங்க முகம் 10 நிமிஷத்தில அழகா மாறிவிடும்.
இன்றைய காலகட்டத்தில் நிறைய பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை இது. வாயை சுற்றி லேசாக கருவளையம், அதே சமயத்தில் உதட்டுக்கு மேல் பக்கத்தில் பூனைமீசை பிரச்சனை, உதட்டுக்கு கீழே, தாடை பகுதிகளில் லேசாக முடி பிரச்சனை. சிலருக்கு இந்த முடிகள் கண்ணுக்கு தெரியாமல் சின்ன சின்னதாக இருக்கும். சிலருக்கு வெளியே தெரியும் அளவிற்கு கொஞ்சம் பெரிய அளவில் வளர்ச்சி இருக்கும். இது கட்டாயமாக பெண்களின் அழகை பாதிக்கும். தேவையற்ற முடி வளர்ச்சியை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளது. அதில் ஒரு வழியைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
வாயை சுற்றி கருவளையம் ஏற்படுவதற்கு ஒரு காரணம் நம்முடைய முகத்தில் ஈரத்தன்மை குறைவாக இருப்பது தான். ஈரப்பதம் குறைந்து வறட்சி அடைவதால் தான் வாயை சுற்றி கருவளையம் ஏற்படுகின்றது. தினமும் காலை எழுந்தவுடன் 1/2 ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை உங்களது விரல்களால் தொட்டு வாயை சுற்றி கருவளையம் உள்ள இடங்களில் கீழிருந்து மேல் பக்கமாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்து விட்டு 1 மணி நேரம் கழித்து எப்போதும் போல குளித்துக் கொள்ளலாம்.
அடுத்தபடியாக கடலை மாவு – 1 ஸ்பூன், குப்பைமேனி பவுடர் – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன், தயிர் – 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 1 ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் ஒரு பவுலில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் திக்கான பேஸ்ட் பதத்தில் ஒரு பேக்கை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
ரொம்பவும் தண்ணீராக இந்த பேக்கை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டாம். தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்த பிறகு தேங்காய் எண்ணெயை துடைத்து எடுக்காமலேயே இந்த பேக்கை கொஞ்சம் தடிமனாக போட்டுக்கொள்ள வேண்டும். உதட்டை சுற்றி போடலாம். தாடை பகுதிகளில் முடி இருந்தால் போட்டுக்கொள்ளலாம். கண்ணத்தில் முடி இருந்தாலும் போட்டுக்கொள்ளலாம்.
இந்தப் பேக் 80% காய்ந்ததும், பூனை முடி பிரச்சனை உள்ளவர்கள் இதை தண்ணீர் போட்டு கழுவ கூடாது. ஈரத்துணியால் துடைத்து எடுத்த கூடாது. உங்களது விரல்களைக் கொண்டு இந்த பேக்கை லேசாக ஸ்க்ரப் செய்து அப்படியே உதிர்த்து எடுக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு அதிகப்படியான வலி எதுவும் தெரியாது. ஆனால் மிக சிறிய அளவில் உங்கள் முகத்தில் இருக்கும் பூனை முடிகள் ஒரு முறையிலேயே உதிர்வது தெரியும்.
தினந்தோறும் இந்த பேக்கை போட்டு, தினம்தோறும் இப்படி ஸ்க்ரப் செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய முடிகள் தானாக உதிரத் தொடங்கிவிடும். மீண்டும் வளர்வது கூடிய விரைவில் தடைபடும்.
உங்களுக்கு பூனை முடியால் பிரச்சனை இல்லை. வாயை சுற்றி கருவளையம் பிரச்சனை மட்டும் தான் உள்ளது என்றால், இந்த பேக்கை போட்டு விட்டு 15 நிமிடங்கள் கழித்து, ஒரு காட்டன் துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் நினைத்து அந்த துணியை கொண்டு இந்த பேக்கை துடைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் இதை முகம் முழுவதும் அப்ளை செய்தால் ஃபேஷியல் செய்தது போல உங்களது முகம் பொலிவடையும்.
ஆனால் இந்த ஃபேஸ் பேக்கை போட்ட பின்பு உடனடியாக சோப்பு போட்டு உங்களது முகத்தை கழுவி விடாதீர்கள். இரண்டு மூன்று மணி நேரம் கழித்து கழுவலாம். உங்களுக்கு பகலில் செய்வதற்கு நேரமில்லை என்றால் இரவு நேரத்தில் தேங்காய் எண்ணெயால் ஒருமுறை மசாஜ் செய்துவிட்டு, அதன் பின்பு இந்த பேக்கை அப்ளை செய்து நன்றாக ஸ்கரப் செய்து எடுத்து விட்டு அப்படியே தூங்கி விடுங்கள். மறுநாள் காலை எப்போதும் போல சோப்பு போட்டு குளித்தாலும் தவறு கிடையாது. உங்களுக்கு இந்த குறிப்புகள் ட்ரை பண்ணி பாருங்க.