Advertisement

ஆக்சிஜனை கொடுக்கக்கூடிய டாப் 5 செடிகள்! காற்றை சுத்தப்படுத்தி வீட்டிற்குள் ஆக்சிஜனை கொடுக்கும் செடிகள் என்னென்ன?

ஆக்சிஜனை கொடுக்கக்கூடிய டாப் 5 செடிகள்! காற்றை சுத்தப்படுத்தி வீட்டிற்குள் ஆக்சிஜனை கொடுக்கும் செடிகள் என்னென்ன?

பொதுவாக இண்டோர் பிளான்ட்ஸ் எனப்படும் வீட்டிற்குள் வளர்க்கப்படும் செடிகள் பெரும்பாலும் காற்றினை சுத்தப்படுத்தி ஆக்சிஜனை அதிகமாக நமக்கு உற்பத்தி செய்து கொடுக்கும். இன்று பல வகைகளில் காற்றைக் கூட விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு தான் மனிதன் இருக்கின்றான். இந்த நிலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக் கூடிய ஐந்து வகை எளிமையான செடிகள் என்ன? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படிப்போம்.

indoor-plants

வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் எல்லாம் வீடுகளுக்கு உள்ளேயே நிறைய வகையான செடிகளை வாங்கி வளர்ப்பார்கள். இப்படி வாங்கி வளர்க்கப்படும் செடிகள் வெறும் அழகிற்காக வளர்க்கப்படுபவை அல்ல. அழகை தாண்டிய ஆரோக்கியமும் இதில் அடங்கி இருப்பது இப்போது தெரிய வருகிறது. வீடுகளுக்குள் இருக்கும் அசுத்த காற்றை நீக்கி சுத்தம் செய்து எப்பொழுதும் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் இவ்வகையான செடிகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

அதில் முதன்மையாக விளங்குவது நாம் அனைவரும் எளிதாக வளர்க்கக் கூடிய ‘கற்றாழைச் செடி’. கற்றாழை மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. மேலும் கற்றாழையில் இருக்கும் பயன்கள் எண்ணற்றவை ஆகும். இத்தகைய கற்றாழை செடியை வீட்டில் வளர்த்தால் வீட்டிற்குள் சுற்றிக் கொண்டு இருக்கும் கெட்ட சக்திகளை ஒழித்து நல்ல சக்திகளை பெருகச் செய்யும். மேலும் ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்கி நல்ல காற்றை கொடுக்கும். இதனால் கற்றாழை அனைவருடைய வீடுகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய செடி வகைகளில் ஒன்றாகும்.

money plant

அதிர்ஷ்டத்தையும், பணத்தையும் வாரி வழங்கும் என்று கூறப்படுகின்ற ‘மணி பிளான்ட்’ செடி காற்றினை சுத்தம் செய்யும் பியூரிஃபையராக செயல்படும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? மணிபிளான்ட் செடி ஒன்றை வாங்கி வந்து வீட்டில் எந்த மூலையில் வைத்து நீங்கள் வெறும் தண்ணீரில் வளர்த்தாலும் மடமடவென வளர வேண்டும். மணிபிளான்ட் செடி ஒரு வீட்டில் வளரவில்லை என்றால் அந்த வீட்டில் கெட்ட அதிர்வுகள் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தமாகும். வெறும் தண்ணீரையும், காற்றையும் மட்டுமே உறிஞ்சிக் கொண்டு எளிதில் வளரக்கூடிய மணிபிளான்ட் காற்றில் இருக்கும் மாசுக்களை கிரகித்து காற்றை சுத்தம் செய்து ஆக்சிஜனை கொடுக்கும்.


‘ஸ்நேக் ட்ரீ’ என்று கூறப்படும் ஒரு வகை செடியானது பார்ப்பதற்கு பாம்பு போல நீளநீளமாக வளைந்து காணப்படும். இந்தச் செடி வீட்டுக்குள் வளர்க்கும் பொழுது அதிக அளவில் காற்றில் இருக்கும் மாசுகளை கிரகித்து ஆக்சிஜனை அதிகமாக வெளியேற்றும் வீட்டை தூய்மையாக வைத்திருக்கும். ‘பேம்பூ ட்ரீ’ எனப்படும் ஒருவகையான குட்டையாக வளரும் மூங்கில் செடிகள் பெரும்பாலும் வீடுகளுக்குள் வைத்து வளர்க்கப்படும் அழகிய செடி வகைகளில் ஒன்றாகும். பெரிய பெரிய கட்டிடங்கள், அலுவலகங்களில் வைத்து இது போன்ற செடிகள் வளர்ப்பதை நாம் கண்டிருப்போம். இவ்வகையான செடிகளும் ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்து கொடுக்கக் கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.

bonsai-tree

‘போன்சாய்’ எனப்படும் குறுகிய அளவிலான மரங்கள், செடிகள் பார்ப்பதற்கு அழகிய தோற்றத்தையும், காற்றில் இருக்கும் தூசிகளை அகற்றி நல்ல ஒரு சுவாசிக்கக் கூடிய ஆக்சிஜனையும் கொடுக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் இந்த வரிசையில் ஸ்பைடர் ட்ரீ, பிளமிங்கோ, இதய வடிவில் இருக்கும் இலைகளைக் கொண்ட வீட்டுக்குள் வளர்க்கக்கூடிய செடிகள் பெரும்பாலும் ஆக்சிஜனை கொடுக்கக் கூடியவை. வீட்டிற்கு வெளிய வளர்க்கும் மரங்களில் எந்த மரங்கள் அதிகளவில் ஆக்ஸிஜனை கொடுக்கும்? என்று அடுத்த பதிவில் பார்ப்போம்! இது போன்ற செடி வகைகளை வீட்டிற்குள் வளர்த்து ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்து வீட்டிற்குள்ளேயே நல்ல சுவாசத்தை பெற்றுக் கொள்ளலாம்.