Advertisement

ஆங்காங்கே சேர்ந்துள்ள ஊளை சதை மற்றும் உடல் எடை கணிசமாக குறைய 7 நாட்களுக்கு இதை ஒரு டம்ளர் குடித்தால் போதுமே!

ஆங்காங்கே சேர்ந்துள்ள ஊளை சதை மற்றும் உடல் எடை கணிசமாக குறைய 7 நாட்களுக்கு இதை ஒரு டம்ளர் குடித்தால் போதுமே!

நம் உடலில் ஆங்காங்கே அனாவசியமாக தேங்கியிருக்கும் கொழுப்புக்களை கரையச் செய்ய, உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற இந்த விஷயத்தை கையாண்டு பார்க்கலாம். இதில் எவ்விதமான பக்கவிளைவுகளும் இல்லை. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய இந்த பொருட்கள் கொண்டு இப்படி செய்யும் பொழுது கணிசமாக உடல் எடை குறைவதை நீங்களே உணரலாம். இதை எப்படி செய்ய வேண்டும்? யாரெல்லாம் செய்யலாம்? யாரெல்லாம் செய்யக் கூடாது? என்பதையும் தெரிந்து கொண்டு செய்யுங்கள். இவற்றை தெரிந்து கொள்ள இப்பதிவை தொடருங்கள்.

முதலில் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற மூன்று நாளைக்கு இதை செய்யலாம். செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணையை தினமும் ஒரு ஸ்பூன் அளவிற்கு காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பின்னர் ஒரு டம்ளர் அளவிற்கு வெது வெதுப்பான சுடு தண்ணீரை குடித்து விட வேண்டும். முதல் நாள் இதை செய்யும் பொழுது உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறுவதற்குரிய அறிகுறிகள் தெரியும். இதனால் பயப்படத் தேவையில்லை. இரண்டிலிருந்து மூன்று முறை மலம் கழிக்க நேரும். கர்பிணிகள், அல்சர், சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், கர்பத்திற்கு முயற்சி செய்பவர்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் இதை செய்ய வேண்டாம்.

இரண்டாம் நாள், மூன்றாம் நாள் செய்யும் பொழுது இத்தகைய அறிகுறிகள் உங்களுக்கு வராது. இதுபோல் மூன்று நாட்கள் செய்தபின் அடுத்து இருக்கும் நான்கு நாட்களுக்கு பின் வரும் இந்த குறிப்புகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அப்போது தான் அதனுடைய முழு பலன் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சீரகம் போட்டுக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரே ஒரு துண்டு சிறு அளவிற்கு பட்டை போட்டு கொள்ள வேண்டும்.

pattai

நீங்கள் பயன்படுத்தும் பட்டை மேலே காட்டியுள்ள படி சுருள் பட்டை ஆக இருக்கக் கூடாது. சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் தட்டையான பட்டையை பயன்படுத்த வேண்டும். இதனை இரவு நேரத்தில் செய்து அப்படியே ஊற விட்டு விட வேண்டும். ஜீரகம் மற்றும் பட்டையில் இருக்கும் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கி தண்ணீரின் நிறம் வெள்ளை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத் துவங்கும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை அப்படியே குடிக்கவும் செய்யலாம் அல்லது இதனுடன் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்கலாம்.


இவ்வாறு சேர்த்தால் இன்னும் கூடுதல் பலன்களை கொடுக்கும். இதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் வரை குடித்து வர வேண்டும். இப்படி தேங்காய் எண்ணெயும், இந்த சீராக தண்ணீரையும் ஏழு நாட்கள் முறையாக குடிக்க உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, அதிகப்படியான கொழுப்புகளை கரைக்க துவங்க செய்யும். அதன் பின்னர் சாதாரணமாக 5 லிட்டர் தண்ணீரில் 5 ஸ்பூன் அளவிற்கு சீரகத்தை மட்டும் இரவு நேரத்தில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்பொழுதெல்லாம் தாகம் எடுத்தாலும் இந்த தண்ணீரை பருகி வர வேண்டும்.

ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் வரை தொடர்ந்து இதை கடைபிடிக்கும் பொழுது உங்கள் உடல் எடை கணிசமாக குறைந்துவிடும். இதற்காக எந்தவிதமான மருந்து மாத்திரைகளும் அல்லது உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவையும் தேவைப்படாது. இதே போல வெறும் வயிற்றில் இளம் சூடான தண்ணீரில் தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி உடல் சுத்தமடையும். இவற்றில் உங்களுக்கு பிடித்தமானவற்றை செய்து உங்களை நீங்களே ஆரோக்கியமாகவும், அழகாகவும் மாற்றிக் கொள்ளுங்கள்.