டாய்லெட் சென்று வந்தபின் கைகளை சோப்பு போட்டு கழுவுவது அவசியம்... ஏன் தெரியுமா..?
டாய்லெட் சென்று வந்தபின் கைகளை கழுவாமல் விடுவது உங்களுக்கே விஷமாக மாறும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
டாய்லெட் சென்று வந்தபின் கைகளை கழுவாமல் விடுவது உங்களுக்கே விஷமாக மாறும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். இதனால் இங்கிலாந்தில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 40,000 பேர் நோயால் அனுமதிக்கப்படுவதாக ஆய்வு குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அதாவது டாய்லெட் பயன்படுத்தியபின் கைகளை கழுவாமல் விடுவதால் இ.கோலி மற்றும் ஹெச் பைலொரி ஆகிய இரு பாக்டீரியாக்கள் கைகளில் தொற்றிக் கொண்டிருப்பதாகவும், அது ஃபுட் பாய்சனாக மாறும் என்றும் தெரிவித்துள்ளனர். இது விஷமாக மாறுவது மட்டுமன்றி சிறுநீரகப் பாதையில் தொற்றுகளையும் உண்டாக்கும்.
இந்த ஆய்வில் நூற்றுக்கணக்கானோரின் இரத்தத்தை பரிசோதனை செய்து உறுதி செய்துள்ளது. குறிப்பாக அதில் உள்ள ஹெச் பைலொரி பாக்டீரியாவானது அல்சர், வயிற்றுப் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களையும் உண்டாக்கும் என்கிறது. இதை United European Gastroenterology நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு எதிர்பாராதவிதமாக கண்களில் கைகளை வைத்தாலும் கண்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படும். எனவே உங்களுடைய சோம்பேறித்தனத்தால் கைகளைக் கழுவத் தவறுவதால் இப்படி பல வகையான நோய்களை சந்திப்பீர்கள் என்கிறது ஆய்வு.
இதுமட்டுமல்ல பல வகையான நோய்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கிறது. எனவே அடிப்படையான தூய்மை பழக்கங்களைப் பின்பற்றுவது அவசியம் என்பதையும் உணர்த்துகிறது இந்த ஆய்வு.