Advertisement

மாதவிடாய் நாட்களில் பெண்கள் மலச்சிக்கலை அனுபவிக்க என்ன காரணம்..? தெரிந்துகொள்ளுங்கள்…

மாதவிடாய் நாட்களில் பெண்கள் மலச்சிக்கலை அனுபவிக்க என்ன காரணம்..? தெரிந்துகொள்ளுங்கள்…

மாதவிடாய் வருவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பிலிருந்தே மலச்சிக்கல் பிரச்னை தொடங்கிவிடும். அப்போதிலிருந்தே உடலில் புரோகெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கத் துவங்கும். இந்த ஹார்மோன் உற்பத்தி வயிற்றில் செரிமாண ஆற்றலை குறைக்கும்.


மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை வருவது வயிற்றுவலியை போல் சாதாரண நிகழ்வுதான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல் என்பது சற்று அசௌகரியமான விஷயம்தான் என்றாலும் இந்த பிரச்னையை தவிர்க்க இயலாது என்கின்றனர்.


இதற்கு என்ன காரணம்? : இதற்கு ஹார்மோன் பிரச்சனையே காரணம். மாதவிடாய் வருவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பிலிருந்தே மலச்சிக்கல் பிரச்னை தொடங்கிவிடும். அப்போதிலிருந்தே உடலில் புரோகெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கத் துவங்கும். இந்த ஹார்மோன் உற்பத்தி வயிற்றில் செரிமாண ஆற்றலை குறைக்கும். எனவே இதுதான் மலச்சிக்கலுக்குக் காரணமாக இருக்கலாம் என்கிறனர்.


இதை எப்படி சரி செய்வது ? : இதற்கு ஒரே வழி மாதவிடாய் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பும், மாதவிடாய் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்திலும் நார்ச்சத்து அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி உணவுப் பழக்கத்தில் சற்று கூடுதலாக நார்ச்சத்து கொண்ட பழங்கள் , காய்கறிகளை சாப்பிட வேண்டும்.


அதாவது நார்ச்சத்து கொண்ட ஆப்பில், பீன்ஸ், கீரை வகைகள், தானியங்கள், வாழைப்பழம், கேரட், புரக்கோலி, மக்காசோளம்,சியா விதைகள் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம்.


உணவு மட்டுமன்றி அதிகமாக தண்ணீர் அருந்துங்கள். அதேபோல் எலுமிச்சையை தண்ணீரில் பிழிந்து குடிப்பதும் மலச்சிக்கலுக்கு நல்லது.