இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருந்தால் கட்டாயம் இந்த பிரச்சனைகள் எல்லாம் விரைவில் வரும்! அது என்ன?
உடல் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு விஷயங்களில் முன்னறிவிப்பு இல்லாத சில விஷயங்களும் அடங்கியுள்ளன. அதாவது எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் சில நோய்கள் நமக்கு தோன்றும். ஆனால் பெரும்பாலான நோய்கள் வரப் போகிறது என்பதை முன்கூட்டியே சில அறிகுறிகள் மூலம் நமக்கு தெரிய வைத்து விடும். இந்தப் பிரச்சினை நமக்கு வந்தால் என்ன அர்த்தம்? அடுத்து என்ன நமக்கு நடக்க போகிறது? என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதைத்தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
நம் முகத்தில் திடீரென அரிப்போ அல்லது நமைச்சலோ எடுக்கிறது என்றால் அது அடுத்து வரும் நோயின் அறிகுறியாக இருக்கும். அடுத்து உங்களுக்கு தலை முடி உதிர்வு பிரச்சனை தீவிரமாகும் என்பது அர்த்தம். தலைமுடியில் சுத்தம் இல்லாமலிருந்தால் இது போன்ற அறிகுறிகள் தென்படும். உங்களுக்கு வயிற்றுவலி அல்லது வயிற்றால போன்றவை அடிக்கடி நிகழ்ந்தால் கைவிரல் நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கைவிரல் நகங்கள் சுத்தமாக இல்லை என்றால் இதுபோன்ற அறிகுறிகள் நமக்குத் தெரியவரும்.
கண்கள் அல்லது மூக்கு பகுதிகளில் அரிப்பு இருந்தால் அடுத்து ஜலதோஷம், தும்மல் போன்ற பிரச்சனைகள் வரும். இதனை வருமுன் காப்பது மிகவும் நல்லது. உங்கள் காது பகுதியில் அதிகமாக குடைச்சல் இருந்தால் காய்ச்சல் வரும் என்று அர்த்தம். உடலுக்கு தேவையான ஓய்வு கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் கைமடிப்பு போன்ற இடங்களில் அதேபோல் கழுத்து, கால் போன்ற மடிக்கும் இடங்களில் கருப்பாக பட்டை போல் இருந்தால், அந்த இடத்தில் நோயின் அறிகுறி தென்படுகிறது. அடுத்து உங்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படவும், உடலில் இருக்கும் சக்திகள் தேங்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதே போல திடீரென உடம்பில் இன்சுலின் அதிகமாக சுரந்து பொய் பசி உண்டாகிறது என்றால் உடலின் சக்தி தேங்கி விடுகிறது என்பது அர்த்தமாகும்.
சிலருக்கு கால் பாதங்களில் வெடிப்பு அதிகரித்து காணப்படும். இப்படி அதிகமாக கால்வெடிப்பு உண்டானால் உடலில் இருக்கும் உறுப்புகள் சூடாகிறது மற்றும் அதிக அழுத்தம் பெறுகிறது என்பது அர்த்தம். உடலை குளிர்ச்சி அடைய செய்தால் இந்த பிரச்சனை நீங்கும். மூட்டு, முழங்கால், மணிக்கட்டு போன்ற இடங்களில் அதிகமாக வலி இருந்தால் உடல் எடை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று அர்த்தம். தேவையான உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது.
முதுகுத்தண்டு, இடுப்பு பகுதி போன்ற இடங்களில் அதிக வலி இருப்பவர்கள் அல்லது தினந்தோறும் வலியால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி பசும்பால் குடித்து வருவது நல்லது. சுண்ணாம்புச் சத்து மற்றும் நார் சத்து குறைவாக இருப்பதால் எலும்புகள் பலவீனம் அடைகிறது. அதனால் தான் இந்த தொந்தரவுகளும் வருகிறது. உடலில் நீர்சத்து மற்றும் எண்ணெய் தன்மை குறைந்து விட்டால் கை, கால்களில் தோல் உரிதல், உதடுகள் வறண்டு போதல், பிளவு படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உடம்பில் தேவையில்லாத அழுத்தம் மற்றும் வாயு தேங்கி இருந்தால் முதுகு, குதிகால், தோள்பட்டை போன்ற இடங்களில் இறுக்கமாக உணர்வீர்கள். விரலில் இருக்கும் நகங்களுக்கு மேல் பகுதியில் கருப்பாக கோடு இருந்தால் கட்டாயம் உடற்பயிற்சி செய்வது நல்லது. இதயத்திற்கு தேவையான சத்து கிடைக்காததை இவை உணர்த்துகிறது.