காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான முதல் உணவு எதுவாக இருந்தால்! நாள் முழுவதும் உற்சாகம் கிடைக்கும் தெரியுமா?
காலையில் எழுவது மட்டுமல்ல இரவு நீங்கள் தூங்குவது கூட மறுநாள் உற்சாகத்திற்கு ஒரு காரணம் தான். இரவில் நீங்கள் எந்த அளவிற்கு நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் கொண்டு தூங்குகிறீர்களோ! அந்த அளவிற்கு மறுநாள் முழுவதும் உற்சாகத்துடன், தெம்புடன் காட்சி அளிப்பீர்கள். இது பலரும் தங்கள் அனுபவத்தில் உணர்ந்து இருப்பீர்கள். அதுபோல காலையில் எழுந்ததும் முதல் உணவு இந்த பொருட்களை மட்டும் நாம் எடுத்துக் கொண்டால் அதன் பிறகு அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு சோர்வு இல்லாமல் சுறுசுறுப்புடன் செயல்படக் கூடிய அற்புதமான ஆற்றல் உண்டாகும். அது என்ன பொருட்கள்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
காலை முதல் உணவாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்தப் பொருட்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுப் பொருட்கள் சற்று விலை உயர்ந்ததாக இருந்தாலும் இதன் எண்ணிக்கை குறைவாக தான் நாம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். மேலும் இதனை சமைக்க வேண்டிய அவசியம் கூட நமக்கு ஏற்படுவது இல்லை. இதனால் நிறையவே நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்தும் கூடிய உணவு வகை என்று தான் கூற வேண்டும்.
நட்ஸ் வகைகளில் முந்திரி மற்றும் பாதாம் ஊட்டச்சத்துக்களின் ராஜாவாக திகழ்கிறது. இதே அளவிற்கு ஈடு இணையில்லாத சக்திகளைக் கொண்டுள்ளது தான் வேர்க் கடலை. அது போல தேங்காய் மற்றும் பனைவெல்லம் இந்த இரண்டும் ஒரு நாளைய உற்சாகத்தைக் கொடுக்கக் கூடிய அளவிலான சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆக இந்த பொருட்களை எல்லாம் நாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொண்டால் கூட அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்படலாம்.
இரண்டு முந்திரி, நான்கைந்து பாதாம் பருப்புகள், இரண்டு டீஸ்பூன் அளவிற்கு வேர்க்கடலை, ஒரு சில்லு தேங்காய் பத்தை, இதற்கு தேவையான இனிப்பு கொடுக்கக் கூடிய வகையில் கொஞ்சமாக பனைவெல்லம் இவற்றில் முந்திரி, பாதாம் மற்றும் வேர்க்கடலை போன்றவற்றை முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் காலையில் எழுந்ததும் வடிகட்டி தோலுரித்து பனை வெல்லம் மற்றும் தேங்காயுடன் சேர்த்து அப்படியே சாப்பிட்டாலும் நன்றாகத் தான் இருக்கும்.
இல்லையேல் இவற்றை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொஞ்சம் தேவைப்பட்டால் பசும்பால் சேர்த்துக் கொள்ளலாம். மில்க் ஷேக் போல இவற்றை செய்து பருகினால் ஒரு நாள் முழுவதும் உற்சாகத்துடன், முழு பலத்துடன் நம்மால் இயங்க முடியும். எப்போதும் எந்த காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. காலை உணவை தவிர்த்து ஒரு சிலர் மதிய மற்றும் இரவு உணவை மட்டுமே எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்து இருப்பார்கள். இது நாளடைவில் அவர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
காலையில் கொஞ்சமாவது ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் மதிய மற்றும் இரவு உணவுகளை உங்களுக்கு பிடித்தது போல சாதாரணமாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இப்படி முழுவதுமாக நம்முடைய உணவு முறையை மாற்ற முடியாவிட்டாலும் காலை உணவை மட்டும் ஊட்டச் சத்து நிறைந்ததாக இப்படி மாற்றிக் கொண்டால் நிச்சயம் ஒரு நாளைய உற்சாகத்தை மற்றும் புத்துணர்வுடன் செயல்பட கூடிய ஆற்றலை பெற்றுக் கொள்ளலாம்.