செவ்வாய், 12 அக்டோபர், 2021

உங்களுடைய முகம் இருட்டு பிடிச்ச மாதிரி ரொம்ப கருப்பா இருக்கா? 10 நிமிடத்தில் வெள்ளையாக மாற்றலாம் வாங்க!

உங்களுடைய முகம் இருட்டு பிடிச்ச மாதிரி ரொம்ப கருப்பா இருக்கா? 10 நிமிடத்தில் வெள்ளையாக மாற்றலாம் வாங்க!

சில பேருக்கு வெளியில் போய் சுற்றித்திரிந்தாலோ அல்லது அதிகப்படியான வெயிலில் வெகுநேரம் இருந்தாலும் முகம் இருட்டு பிடித்த மாதிரி ஆகிவிடும். அதாவது ரொம்ப சோர்வடைந்து, கருப்பாக மாறி, முகத்தில் தழும்புகள் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். நம் முகத்தை கண்ணாடியில் பார்க்க நமக்கே பிடிக்காத அளவிற்கு கூட சில சமயங்களில் கண்ணுக்குக் கீழே கருவளையங்கள் விழுந்து, முகம் பொலிவிழக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முகத்தில் தவுஸன் வாட்ஸ் பல்ப் எறிய என்ன செய்யலாம்.

face4

ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். உங்க வீட்ல இருக்க சமையலறையில் இருக்க இந்த பொருட்களை வைத்து ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் 10 நிமிடத்தில் உங்களுடைய முகத்தை சரி செய்ய போகின்றோம். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாத்துட்டு, அட முகத்தை அழகாக்குவது இவ்வளவு சுலபமான வேலையா என்று நீங்களே ஆச்சரியப்பட போகிறீர்கள்.

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் சர்க்கரை, 4 ஸ்பூன் தண்ணீர் விட்டு, கரைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது டபுள் பாய்லிங் என்று சொல்லப்படும் முறையில் அகலமான கிண்ணத்தில் இருக்கும் சுடுதண்ணீரின் மேல், சிறிய கிண்ணத்தில் இருக்கும் சர்க்கரை கரைசலை வைத்து, கரைத்தால், சர்க்கரை கரைசல் 2 நிமிடத்தில் சர்க்கரை பாகு தண்ணீராக மாறிவிடும். இதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இதை வைத்து தான் நம்முடைய முகத்தை அழகாக மாற்ற போகின்றோம்.(சர்க்கரைப்பாகு என்றால் அது பிசுபிசுவென்று ஆகும் அளவிற்கு செல்லக்கூடாது. சர்க்கரை சுடு தண்ணீரில் கரைந்து, இருக்க வேண்டும். அவ்வளவுதான்.)

double-boiling

இப்போது மற்றொரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் காய்ச்சாத பால், 1 ஸ்பூன் சர்க்கரை பாகுவை ஊற்றி அப்படியே கலந்து உங்களுடைய முகத்தில் கையால் தொட்டோ அல்லது காட்டன் பஞ்சால் தொடும் நன்றாக மசாஜ் செய்து கொடுங்கள். 5 நிமிடங்கள் சர்க்கரையும் பாலும் கலந்த கலவையில் உங்கள் முகம் மசாஜ் ஆகும் போது முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவி துடைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக ஒரு அகலமான பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க வெந்நீரை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பு போட்டு, ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு, உங்கள் வீட்டின் அருகில் வேப்ப இலை துளசி இலை கிடைத்தால் அதையும் இந்த தண்ணீரில் போட்டு, நன்றாக உங்களது முகத்தை ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் ஆவி பிடிக்கலாம். தோலின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது.

face-wash

அதன் பின்பு, உங்களது முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். அடுத்தபடியாக ஒரு உருளைக்கிழங்கை எடுத்து குக்கரில் போட்டு நன்றாக வேகவைத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த உருளைக்கிழங்கோடு ஒரு ஸ்பூன் தேன் ஊற்றி, ரோஸ் வாட்டர் ஊற்றி, காய்ச்சி வைத்திருக்கும் சர்க்கரைப்பாகு ஒரு ஸ்பூன் ஊற்றி மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளலாம். இதை அப்படியே உங்களுடைய முகத்தில் மாஸ்க் போல போட்டு 10 நிமிடங்கள் விட்டுவிடவும். அதன் பின்பு குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடலாம்.

ice-massage

உங்களால் தினமும் இப்படி மேல் சொல்லப்பட்ட விஷயங்களை செய்ய முடியவில்லை என்றாலும், இந்த உருளைக்கிழங்கு க்ரீமை ஃப்ரீசர் ட்ரேயில் அப்படியே வைத்து விடுங்கள். சிறிது நேரத்தில் அது ஐஸ் க்யூப் ஆக மாறிவிடும். தினமும் காலை நேரமுமோ மாலை நேரமுமோ உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அந்த ஐஸ் கியூபை எடுத்து மெதுவாக 10 நிமிடங்கள் உங்கள் முகத்தில் வட்டவடிவமாக மசாஜ் செய்தால் கூட போதும். உங்களது முகம் எப்போதும் பளிச் பளிச்சென்று இருக்கும்.

face

ஒரு நாளைக்கு ஒரு வாட்டி ஐஸ் மசாஜ் பண்ணிக்கோங்க போதும். நேரடியாக முகத்தில் ஐஸ் கியூபை வைக்கவில்லை என்றாலும், ஒரு சிறிய கைக்குட்டையில் ஐஸ் கியூபை வைத்து, அதன் பின்பு அந்த தண்ணீர் முகத்தில் படும்படி கூட மசாஜ் செய்து கொள்ளலாம் தவறில்லை. ட்ரை பண்ணி பாருங்க புடிச்சிருந்தா ஃபாலோ பண்ணிக்கோங்க.