செவ்வாய், 12 அக்டோபர், 2021

ஒரு நாள் இரவு, இந்த 1 பொருளை உங்கள் முகத்தில் தடவினால் போதும். மறுநாள் காலை உங்களுக்கு வயசு 10 குறைந்துவிடும்

ஒரு நாள் இரவு, இந்த 1 பொருளை உங்கள் முகத்தில் தடவினால் போதும். மறுநாள் காலை உங்களுக்கு வயசு 10 குறைந்துவிடும்

சொன்னா நிச்சயமா நீங்க நம்ப மாட்டீங்க. அதெப்படி ஒரு நாள் இரவிலேயே முகம் அழகாக மாறும்? நிச்சயம் அழகாக மாறும். உங்களுடைய முகத்தில் இருக்கும் சுருக்கம் நீங்கி, பளபளப்பாக நீங்கள் மாறியதை உங்கள் வீட்டு கண்ணாடியிலேயே நீங்கள் பார்க்கலாம். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. இதற்கு ரொம்ப கஷ்டப்பட தேவையில்லை. உங்களுடைய அழகின் மேல் அக்கறை எடுத்துக்கொண்டு, 10 நிமிடங்கள் இதற்காக நேரம் ஒதுக்கினால் கூட போதும். சரி இப்பவே அந்த டிப்ஸை பார்த்திடலாமா?

orange

நம்முடைய முகத்தை அழகாக்குவதற்கு முதலில் நாம் இதற்கு பயன்படுத்தப் போகும் பொருள் ஆரஞ்சு பழத்தோல். நீங்கள் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டுவிட்டு தூக்கிப் போடும் அந்த தோலில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. நம்முடைய தோல் சுருக்கம் இல்லாமல் பளபளப்பாக இருப்பதற்கு வைட்டமின் சி சத்து அவசியம் தேவை.

ஆரஞ்சு பழத் தோல்களை முதலில் ஒரு தட்டில் போட்டு உங்கள் வீட்டிற்கு உள்ளேயே வைத்து விடுங்கள். நிழலிலேயே நன்றாக காயட்டும். வெயிலில் வைத்து எக்காரணத்தைக் கொண்டும் காய வைக்கக் கூடாது. மூன்றிலிருந்து நான்கு நாட்கள் இந்த ஆரஞ்சு பழத்தோல் காய்ந்தால் போதுமானதாக இருக்கும். அதன் பின்பு இதை உளர்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைத்தால் ஒரு வருடங்கள் வரைகூட இந்தப்பொடி கெட்டுப் போகாது.

vitamin-c-tab

இப்போது தண்ணீர் இல்லாத ஒரு சுத்தமான அகலமான சிறிய பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் அளவு ஆரஞ்சு பழத் தோல் தூளை போட்டுக்கொள்ளுங்கள். இதோடு அலோவேரா ஜெல் 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் 50ml, வைட்டமின் E கேப்ஸ்யூல் – 3. கேப்ஸ்யூலில் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். மெடிக்கல் ஷாப்பில் வைட்டமின் E கேப்ஸ்யூல் என்று கேட்டாலே கிடைக்கும்.இப்போது நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த கலவை கெட்டிப் பதத்தில் இருக்கக்கூடாது. சீரம் போல தண்ணீராக இருக்க வேண்டும். உங்களுக்கு தேவைப்பட்டால் ரோஸ் வாட்டரை இன்னும் கொஞ்சம் கூட சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இது எண்ணெய் பதத்தில் இருக்க வேண்டும். அதாவது இதைத் தொட்டு நம்முடைய முகத்தில் தடவினால் எண்ணெய் தடவியது போலத்தான் தெரியும், லேசான ஆரஞ்சு நிறத்தில். மற்றபடி நான் முகத்தில் தடவியிருபது வெளியில் தெரியாத அளவிற்கு இந்த சீரத்தை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

orange-serum

பிரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைத்தாலே இந்த சீரம் 10 நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து உங்களது ஆள்காட்டி விரலால் ஒரு சொட்டு சொட்டாக எடுத்து தொட்டு, உங்களுடைய முகத்தில் ஆங்காங்கே வைத்து விட்டு அதன் பின் 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து விட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டு விடலாம். இந்த சிரத்தை உங்களது முகம் உறிஞ்சிக் கொள்ளும். மறுநாள் காலை குளிர்ந்த நீரில் உங்களது முகத்தை கழுவிப் பாருங்கள். (தினமும் இரவில் இதை தாராளமாக பயன்படுத்தலாம். பக்கவிளைவுகள் வரவே வராது.)

face12

முகம் எப்படி பள பளப்பாக மாறுகிறது என்று. ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. புடிச்சிருந்தா இதையே ஃபாலோ பண்ணுங்க. உங்களோட வயசு பத்து வருஷம் அப்படியே குறைந்துவிடும்னா பாருங்களேன். இதை தினந்தோறும் பயன்படுத்தி வந்தால் முகத்தில் சுருக்கம் நிரந்தரமாக விழாமல், வெள்ளையாக பளபளப்பாக இருக்கும் ஆயுசுக்கும் நீங்கள் இளமையாய் இருப்பீங்க.