Advertisement

சொன்னா நம்ப மாட்டீங்க! இதை 1 ஸ்பூன் போட்டு தினமும் தேய்த்துக் குளித்தால், உங்களுக்கு ஹீரோயின் லுக்கு வந்திடும். முகத்தோடு சேர்த்து, உடல் முழுவதும் பளபளப்பா வெள்ளையா மாறிடும்!

சொன்னா நம்ப மாட்டீங்க! இதை 1 ஸ்பூன் போட்டு தினமும் தேய்த்துக் குளித்தால், உங்களுக்கு ஹீரோயின் லுக்கு வந்திடும். முகத்தோடு சேர்த்து, உடல் முழுவதும் பளபளப்பா வெள்ளையா மாறிடும்!


சிலரைப் பார்க்கும்போது நன்றாக கவனித்தீர்கள் என்றால் தெரியும். முகம் மட்டும் அழகாக வெள்ளையாக இருக்கும். கை கால் கழுத்து பகுதி எல்லாம், முகத்தை விட நிறம் குறைவாக இருக்கும். இப்படியாக முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது. பார்ப்பதற்கு சினிமாவில் நடிப்பவர்கள் போல், உடல் முழுவதும் பளபளப்பாக வெள்ளையாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். நம்முடைய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக தயார் செய்யக்கூடிய ஒரு குளியல் பவுடரைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kasa-kasa

இந்தக் குளியல் பவுடரை தயாரிக்க தேவையான பொருட்கள் கசகசா – 5 ஸ்பூன், பச்சைப்பயிறு – 2 ஸ்பூன், உளுந்து – 3 ஸ்பூன், பச்சரிசி – 2 ஸ்பூன், இந்தப் பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். கொஞ்சம் நைசாக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க! நீங்க குளிப்பதற்கு குளியல்பொடி தயாராகிவிட்டது.

இந்த பொடியை தண்ணீர் படாமல் ஒரு மாதம் வரை பாதுகாத்து வைத்துக் கொண்டால், கெட்டுப்போகாமல் இருக்கும். ஆனால், நாம் சொல்லி இருக்கக்கூடிய அளவுகள் மிக குறைந்த அளவே! உங்களுக்கு நிறைய பொடி தேவைப்பட்டால் அளவுகளை கூட்டிக் கொள்ளலாம். உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதற்கு மொத்தமாக பத்து நாட்கள் வரை தான் இருக்கும். பொடி தீர்ந்த பின்பு மீண்டும் புதியதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

pachai_payaru

சரி, இந்த பொடியை எப்படி பயன்படுத்துவது? ரொம்பவும் ஆயில் ஸ்கின் உள்ளவங்க, இந்த பொடியோடு தண்ணீர் ஊற்றி குழைத்து உடம்பு முழுவதும் தேய்த்து குளிக்கலாம். டிரை ஸ்கின் உள்ளவங்க, கெட்டி புளிக்காத தயிரை ஊற்றி கரைத்து உடல் முழுவதும் தேய்த்து 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, 5 நிமிடங்கள் ஊற வைத்து அதன் பின்பு குளித்து விட்டு வரலாம். தண்ணீர் ஊற்றி குழைத்து உடம்பு முழுவதும் தேய்த்து குளித்தாலும் 5 நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும். 5 நிமிடங்கள் வரை உடம்பில் இந்த பொடி ஊறவேண்டும்.

சோப்பு போட்டு குளிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. உங்களுக்கு குளித்தபின்பு வாசமாக இருக்க வேண்டுமென்றால் ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு இந்த பவுடருடன் சேர்த்து குழைத்து உடம்பில் பூசி குளித்தால் கூட நல்ல மனம் கிடைக்கும். ரோஸ் வாட்டர் அல்லது நறுமணம் தரக்கூடிய மற்ற எஸ்ன்ஸையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம் தவறில்லை. அது உங்களுடைய விருப்பம். இல்லையென்றால் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது சோப்பை பயன்படுத்தாமல் இந்த பொடியை மட்டுமே உடம்பு முழுவதும் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். (ஒருவேளை நீங்கள் சோப்பு போட்டுக் குளித்த ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், சோப்பு போட்டு குளித்த பின்பு தான் இந்த பொடியை பயன்படுத்த வேண்டும். இந்த பொடியை போட்டு குளித்து முடித்து விட்டு சோப்பு போடக்கூடாது.)

ஒருவாட்டி இத ட்ரை பண்ணும் போதே உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். நல்லா வெள்ளையா மாறி இருப்பீங்க. ஒரே ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! இதில் எதையுமே செயற்கையாக சேர்க்கவில்லை. இயற்கையான பொருட்கள் என்பதால் பக்க விளைவுகள் வருவதற்கு வாய்ப்பே கிடையாது.

எந்த ஒரு பொடியாக இருந்தாலும் ரொம்பவும் நறநறப்பாக அரைத்து, தினம்தோறும் உடம்பிலும் முகத்திலும் மசாஜ் செய்து குளித்தால், தோலில் கீறல் விழுந்து சீக்கிரம் தோல் சுருங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. சொரசொரவென்று உள்ள பொடியை எக்காரணத்தைக் கொண்டும் முகத்திலும் உடம்பிலும் அழுத்தி தேய்த்து மசாஜ் செய்யக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.