Advertisement

உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனர் தான் வீட்டிலேயே இருக்கிறதே! எதுக்கு காசு கொடுத்து வாங்குறீங்க? இந்த 2 பொருள் கூந்தலை பட்டு போல் சாஃப்டாக மாத்திடுமே!

உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனர் தான் வீட்டிலேயே இருக்கிறதே! எதுக்கு காசு கொடுத்து வாங்குறீங்க? இந்த 2 பொருள் கூந்தலை பட்டு போல் சாஃப்டாக மாத்திடுமே!

எல்லோருக்கும் தங்களுடைய கூந்தல் பட்டுப் போல் அசைந்தாட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் எல்லோருடைய கூந்தலும் அவ்வாறாக இருப்பதில்லை. பெரும்பாலானோருக்கு கூந்தலின் தன்மை எப்படியாக இருந்தாலும் சாஃப்டாக இருப்பதில்லை. இதற்கு பெரிய தொகையை செலவு செய்ய வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. ஒரு சிலருக்கு இயற்கையாகவே அப்படி அமைந்து விடுகிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு அவர்களைப் பார்த்து ஏங்க வேண்டிய நிலைமை தான்.

cobing-hair

அழகு நிலையங்களுக்கு சென்று காசை அள்ளி விட்டு கூந்தலை மென்மையாக மாற்றிக் கொள்வதற்கு இன்றைய பெண்கள் பலரும் தயக்கம் காட்டுவது இல்லை. இவ்வாறு செய்வதால் கூந்தலுடைய பலம் பலவீனம் அடையும் என்கிற ஆபத்தை உணராமல் அவர்கள் செய்வதாகவே கூறலாம். இயற்கையாகவே நம்முடைய கூந்தலை மென்மையாக பட்டுப் போல் மாற்றுவதற்கு என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வறட்சியான கூந்தல், கரடுமுரடான கூந்தல், சாதுவான கூந்தல், எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள கூந்தல் என்று பல வகைகள் இருந்தாலும் ஆரோக்கியமாக எந்த விதமான செயற்கை கண்டிஷனர் வகைகள் போடாமல் இயற்கையாகவே நம்முடைய கூந்தல் பட்டுப்போல் அலைபாய வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்களே போதுமானது என்றால் ஆச்சரியப்படுவீர்கள் தானே?

hair

எல்லோர் வீட்டிலும் இந்த 1 பொருட்கள் கட்டாயம் இருக்கும். ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் பெரும்பாலும் இந்த 2 பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் எந்த 2 பொருட்கள் நாம் பயன்படுத்த இருக்கிறோம்? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை இனி பார்ப்போம்.

நாம் முகத்திற்கு பயன்படுத்தும் பயத்தமாவு மற்றும் தயிர் தான் அந்த 2 பொருட்கள். இந்த இரண்டு பொருட்களையும் முக அழகிற்கு மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் வாரம் ஒருமுறையாவது உங்களுடைய கூந்தலுக்கு பயத்தம் மாவு மற்றும் தயிர் இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். பின்னர் தலை முழுவதும் தடவி விட்டு ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து சாதாரண தண்ணீர் கொண்டு தலையை அலசி விட்டால் போதும். கூந்தல் பட்டுப்போல் கண்டிஷனர் போட்டது போல் மென்மையாக மாறிவிடும்.

green-gram-powder

நிறைய பேருக்கு ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் இவை இரண்டிற்குமே வித்தியாசம் தெரியாமல் இருக்கும். இப்போதெல்லாம் கண்டிஷனரை தனியாக யாரும் வாங்குவதில்லை. ஷாம்புவுடன் கண்டிஷனர் இலவசமாகவே கொடுக்கிறார்கள். ஆனால் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பதைக் கூட தெரியாமல் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வகையான கண்டிஷனர்கள் கூந்தலுக்கு மாய்ஸ்சுரைசர் போன்று செயல்பட்டாலும் செயற்கையானது தான். எனவே மேற்கூறிய இந்த டிப்ஸை பயன்படுத்தினால் இயற்கையாகவே கண்டிஷனர் போட்டது போல் கூந்தல் பட்டுப் போல் ஜொலிக்கும் என்பது நிச்சயம்.

cobing-hair-1

முதலில் ஷாம்புவை தண்ணீரில் கலந்து தலை முழுவதும் அலசி விட்டு இறுதியாக கண்டிஷனர் போட்டு 2 நிமிடம் கழித்து தலையை அலசி விட்டால் கூந்தல் பட்டு போல் மாறிவிடும். ஆனால் இந்த முறையில் முதலில் தலையை அலசிய பிறகு லேசாக ஷாம்பு போட்டு ஒரு முறை தலையை அலசி விடுங்கள் போதும். கூந்தல் இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் பட்டுபோல் ஜொலிக்கும்.