Advertisement

உங்கள் முகம் வெள்ளையாக மாற வெறும் 2 நிமிடமும், இந்த 3 பொருளுமே போதும். எப்படிப்பட்ட கருநிறமும், வெண்மை நிறத்திற்கு மாறிவிடும்.

உங்கள் முகம் வெள்ளையாக மாற வெறும் 2 நிமிடமும், இந்த 3 பொருளுமே போதும். எப்படிப்பட்ட கருநிறமும், வெண்மை நிறத்திற்கு மாறிவிடும்.

இரண்டே நிமிடத்தில் வெள்ளையான முகத்தை பெற முடியுமென்றால், வெள்ளையாக மாற யாருக்குதான் ஆசை இருக்காது. பியூட்டி பார்லருக்கு சென்று செயற்கையான பொருட்களை முகத்தில் போட்டு, உடனடியான அழகை, நிரந்தரம் இல்லாமல் பெறுவதை விட, வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்து ஆரோக்கியமான, நிரந்தரமான அழகை பெறுவது மிகவும் நல்லது. அப்படிப்பட்ட ஒரு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். காலம் காலமாக அழகிற்காக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒரு பொருளை தான் நாமும் இந்த குறிப்பிற்கு பயன்படுத்த போகின்றோம். இந்த பொருளோடு குறிப்பிட்ட 2 பொருளைச் சேர்க்கும் போது நம்முடைய அழகு மேலும் அழகாக போகின்றது.

Turmeric

குறிப்பாக முகத்தில் இருக்கும் தழும்புகள், கரும்புள்ளிகள், சிறிய துவாரங்கள் அனைத்துமே சுலபமான முறையில் நிரந்தரமாக சரியாகிவிடும். நாம் இந்த குறிப்பில்  பயன்படுத்தப் போகும் அந்த 3 பொருட்கள் என்னென்ன? அதை முறைப்படி எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

நம்முடைய அழகிற்காக பாரம்பரியமாக பயன்படுத்தும் பொருள் என்றால் அது மஞ்சள். நம்மில் நிறைய பேருக்கு இது தெரிந்திருக்கும். இந்த மஞ்சளை பவுடராக வாங்காமல், மஞ்சள் கிழங்கு வாங்கி அதை அரைத்து நாம் பயன்படுத்துவது நம்முடைய சருமத்திற்கு மிகவும் நல்லது. நம்முடைய அழகை அதிகப்படுத்திக் கொள்வதற்காக, கருநிறம் கரும்புள்ளிகள், கரும் மச்சம் தழும்புகள் இவைகளை நீக்குவதற்காக நாம் பயன்படுத்த போகும் பொருள்கள் மஞ்சள்தூள், புளிக்காத கெட்டி தயிர், கற்றாழை ஜெல், கற்றாழையிலிருந்து இயற்கையான முறையில் கிடைத்தால் நல்லது. அப்படி இல்லை என்றால் கடைகளில் விற்கும் அலோவேரா ஜெல்லைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

alovera

ஒரு அகலமான கிண்ணத்தில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் புளிக்காத கெட்டித் தயிர், 1/2 ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல், இந்த மூன்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். இந்தப் பேஸ்ட் ரொம்ப கட்டியாக இருந்தால், இன்னும் கொஞ்சமாக தயிர் சேர்த்துக் கொள்ளலாம். இந்த 3 பொருட்கள் சேர்த்த கலவையை இரண்டு நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்து, அதன்பின்பு 10 நிமிடங்கள் அந்த ஃபேஸ் பேக்கை முகத்திலேயே உலர விட வேண்டும்.

தினம்தோறும் இப்படி செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. வாரத்தில் ஒரு நாள் இப்படி செய்து வந்தால் கூட, உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் தானாக குறைய ஆரம்பிக்கும். முகத்தில் போடும் பேக்கை எக்காரணத்தைக் கொண்டும் பத்து நிமிடங்களுக்கு மேல் உலர வைக்க வேண்டாம். 10 நிமிடங்கள் முடிந்ததும் குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவி விடுங்கள். உடனேயே சோப்பு போட்டு முகத்தை அலம்பவும் வேண்டாம்.

face9

மஞ்சளை பயன்படுத்துவதன் மூலம் உங்களது முகம் மஞ்சள் நிறமாக மாறிவிடும். வெளியில் செல்வதற்கு அந்த மஞ்சள் நிறம் சங்கடத்தைத் தரும் என்று நினைப்பவர்கள், இரவு நேரத்தில் இந்த ஃபேஸ் பேக்கை போட்டு முகத்தை கழுவி விட்டு, மறுநாள் காலை சோப்புப் போட்டு குளித்துக் கொண்டால் மஞ்சள் நிறம் தெரியாமல் இருக்கும். இந்த குறிப்பின் பயன்படுத்திருக்கும் மூன்று பொருட்களுமே மிகவும் குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான். குறிப்பாக பக்க விளைவுகளை ஏற்படுத்தாத பொருட்கள்.

சில பேரின் சருமத்திற்கு மஞ்சள் ஒத்துவராது இருப்பினும் அந்த மஞ்சளோடு தயிரையும், அலோவேரா ஜெல்லையும் சேர்த்து மாதத்திற்கு 2 முறை பயன்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுடைய சருமத்தை இளமையாக பாதுகாக்கவும் இந்த பேஸ்ட் உபயோகமானதாக இருக்கும்.

face4

இந்த பேஸ்டை உங்களுடைய உடலில் எந்த இடங்களில் அதிகப்படியான கருமை நிறம் உள்ளதோ அந்த இடத்தில் எல்லாம் போட்டு 2 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு, மீண்டும் 2 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால், 10 நாட்களில் அந்த கரு நிறம் பாதியாக குறைந்து இருக்கும் குறிப்பாக கழுத்து பகுதி, கை முட்டி, கால் முட்டி இப்படிப்பட்ட இடங்களிலும் இந்த பேக்கை பயன்படுத்தி பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் தெரியும்.