சொன்னா நம்பமாட்டீங்க! 30 நாட்களில் உங்களுடைய முடி, 3 மடங்கு அதிகமாக வளரும். இந்த எண்ணெயை தடவினால்
தற்போது பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, தலைமுடி பிரச்சனை அதிகமாகவே இருக்கின்றது. காரணம் அந்த காலத்தில் இருந்த தண்ணீரின் தன்மை வேறு. இந்த காலத்தில் இருக்கும் தண்ணீரின் தன்மை வேறு. இதை தவிர்த்து சுற்றுச்சூழல் பாதிப்பு, அசுத்தமான புகை இப்படிப்பட்ட பொல்யூஷன் மூலமும் நம்முடைய தலைமுடி உதிர்வு அதிகமாகிக் கொண்டேதான் வருகிறது. எல்லா பிரச்சினைகளிலிருந்தும் நம்முடைய தலைமுடியை காப்பாற்றி பராமரிக்க என்ன செய்வது? அதுவும் அதிகப்படியான செலவும் ஆக கூடாது. அப்படி ஒரு ரெமிடியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த எண்ணெயை நாம் தயார் செய்ய பயன்படுத்தப்படும் பொருள். வெந்தயம் – 50 கிராம், கருஞ்சீரகம் – 50 கிராம், தேங்காய் எண்ணெய் – 1 கப், விளக்கெண்ணெய் – 1/2 கப். முதலில் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வெந்தயம், கருஞ்சீரகத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். நைசாக அரைக்க வேண்டாம். 80% அரைந்தால் போதும்.
அடுத்தபடியாக ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இரண்டையும் ஒன்றாக ஊற்றி கொள்ள வேண்டும். அந்த கடாயை அடுப்பில் வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடம் எண்ணெய் காய்ந்த பிறகு, அரைத்து வைத்திருக்கும் வெந்தயம் கருஞ்சீரகப் பொடியை எண்ணெயில் போட வேண்டும்.
அடுப்பு சிம்மில் தான் இருக்க வேண்டும். எண்ணெயும் அதில் சேர்த்த பொடியும், 5 நிமிடங்கள் வரை நன்றாக காய வேண்டும். காயும் போது நுரை பொங்கி வரத்தான் செய்யும். பயப்பட வேண்டாம். 5 நிமிடங்கள் கழித்து அந்த கடாயை அடுப்பில் இருந்து கீழே ஓரமாக வைத்து விடுங்கள். அது 5 மணி நேரம் அப்படியே, ஊறட்டும் மேலே. ஒரு வெள்ளைத் துணியை போட்டு மூடி வைத்து கொள்ளலாம். (கருஞ்சீரகம் வெந்தயம் சேர்த்த பொடியை, எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.)
எண்ணெய் 5 மணி நேரம் நன்றாக ஊறிய பின்பு, ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி, திப்பித்தை நீக்கி விட்டு அந்த எண்ணெயை கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். வாரத்தில் 3 நாட்கள் உங்களுடைய தலைமுடியின் மயிர்கால்களில் படும்படி இந்த எண்ணெயை 10 நிமிடங்கள் வரை தேய்த்து மசாஜ் கொடுக்க வேண்டும்.
அதன் பின்பு, ஒரு மணி நேரம் வரை உங்களுடைய தலையில் இந்த எண்ணெய் ஊற மீண்டும். உங்களால் முடிந்தால் இரவு இந்த எண்ணெயை உங்களது தலை முடியில் நன்றாக மசாஜ் செய்து விட்டு, இரவு முழுவதும் அந்த எண்ணெயை அப்படியே, உங்கள் தலையில் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலை ஒரு ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்த்து கொண்டாலும் பரவாயில்லை.
இப்படியாக ஒரு வாரத்திற்கு 3 நாள், 30 நாட்களில், அதாவது நான்கு வாரத்தில் 12 நாள் பயன்படுத்தி பாருங்கள். உங்களுடைய தலைமுடி வளர்ந்திருப்பதை நிச்சயம் உங்களால் உணர முடியும். இதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய தலை முடி உதிர்வு படிப்படியாக குறைந்து, வழுக்கை விழுந்த இடத்தில் கூட முடி வளர ஆரம்பித்துவிடும். ட்ரை பண்ணி பாருங்க. நல்ல ரிசல்ட் கிடைச்சா தொடர்ந்து யூஸ் பண்ணுங்க