Advertisement

எதிர்பார்க்காத முடி வளர்ச்சியைக் கொடுக்கும் 8 பொருட்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளர்ந்து கொண்டே போகும். முடி வளர்ச்சியை கட்டுப்படுத்த உங்களாலேயே முடியாதுன்னா பாருங்களே!

எதிர்பார்க்காத முடி வளர்ச்சியைக் கொடுக்கும் 8 பொருட்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளர்ந்து கொண்டே போகும். முடி வளர்ச்சியை கட்டுப்படுத்த உங்களாலேயே முடியாதுன்னா பாருங்களே!

எவ்வளவுதான் பொருட்களை முடி வளர்ச்சிக்காக பயன்படுத்தி பார்த்தாலும், பிரயோஜனமில்லை. முடி தொடர்ந்து கொட்டிக் கொண்டுதான் இருக்கின்றது. இப்படியே விட்டால் கூடிய சீக்கிரமாகவே வழுக்கை விழுந்து விடும் என்று நினைப்பவர்களுக்காக இருந்தால், உங்களுக்கான பதிவு தான் இது. இயற்கையான முறையில் இயற்கையான சில பொருட்களைக் கொண்டு ஒரு டிப்ஸை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்தவித பயமும் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெமிடியை முயற்சி செய்து பார்க்கலாம்.

herbal powder for hair

இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் பொடிகள் ஆர்கானிக் பொருட்கள் விற்கும் கடைகளில் கட்டாயம் கிடைக்கும். பொடியாகவே கிடைக்கின்றது. நல்ல தரமான பிராண்ட் வகையான பொடிகளை வாங்கி இந்த ரெமிடிக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் கேரள பெண்களின் முடி ரகசியத்திற்கு இந்த பொடிகளும் ஒரு காரணம் தான்.

சரி, குறிப்பாக அந்த 8 பொடி என்னென்ன என்பதை இப்போது பார்த்து விடலாமா? செம்பருத்தி இலை பொடி, வெந்தய பொடி, கருவேப்பிலை பொடி, துளசி இலை பொடி, முருங்கை இலை பொடி, வேப்பிலைப் பொடி, ஆளிவிதை பொடி, நெல்லி பொடி.

herbal powder for hair

இந்த பொடிகள் எல்லாம் பேக் செய்யப்பட்டு கடைகளில் விற்கிறது சுலபமாக நீங்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களால் முடிந்தால் இயற்கையாகவே இந்த பொருட்களையெல்லாம் வாங்கி நிழலில் உலர வைத்தும் பொடி செய்து கொள்ள முடியும் என்றாலும் பொடி செய்து கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான்.

முதலில் இந்த பொடிகளிலிருந்து செம்பருத்தி இலை பொடி 2 ஸ்பூன், வெந்தயப் பொடி 2 ஸ்பூன், கருவேப்பிலை பொடி 2 ஸ்பூன், துளசி இலை பொடி 2 ஸ்பூன், முருங்கை இலை பொடி 1 ஸ்பூன், வேப்ப இலை பொடி 1 ஸ்பூன், ஆளி விதை பொடி 1 ஸ்பூன், நெல்லிக்காய்பொடி 2 ஸ்பூன், இந்த அளவுகளில் எடுத்து ஒன்றாக, ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்து ஒரு காற்றுப்புகாத சிறிய டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். (அந்த பேக்கில் மீதமிருக்கும் பொடிகளை காற்று புகாமல் மடித்து, கேரி பேக்கில் போட்டு கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.)

long-hair

எட்டு பொருட்களையும் கலந்த கலவையிலிருந்து 1 ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு சிறிய பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். இதோடு புளிக்காத கெட்டித் தயிரை சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள். தண்ணீரை சேர்க்க வேண்டாம். கெட்டி தயிர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

Curd (Thayir)

இந்த பேஸ்ட்டை வாரத்தில் 2 நாட்கள் மட்டும் உங்களது தலையில் வேர்க்கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து, அதன் பின்பு ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடலாம். இந்த ஹெர்பல் பைக்கை மறுநாள் காலை தலைக்கு போட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், முந்தைய நாள் இரவே உங்களது தலையை தேங்காய் எண்ணெய் தேய்த்து நன்றாக ஊற வைத்து விடுங்கள்.

cobing-hair

தொடர்ந்து இந்த பேக்கை உங்கள் தலையில் போட்டு வந்தால், நல்ல ரிசல்டை கொடுக்கும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். முடி உதிர்வு நாளுக்கு நாள் குறையும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் நல்ல ரிசல்ட் கொடுத்தால் தொடர்ந்து இந்த ரெமிடியா ஃபாலோ பண்ணிக்கோங்க.