அட! ஒரு ரோஸ்வாட்டருக்குள் இத்தனை ரகசியங்களா? இத்தனை நாளா இதெல்லாம் தெரியாமல் போயிருச்சே! இது தெரிஞ்சிருந்தா நீங்க என்னைக்கோ அழகா ஆகிருப்பீங்க.
நம்மை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள பலவகையான பொருட்கள் இருந்தாலும், அதில் ரோஸ் வாட்டருக்கு முன்னுரிமை உண்டு. குறைந்த செலவில் நம்முடைய சருமத்தை பராமரிப்பதற்கு இந்த ரோஸ் வாட்டர் அவசியம் தேவை. ரோஸ் வாட்டரை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகளை நாம் பெற முடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். நீங்கள் அழகாக இருக்க வேண்டும் அதற்கான செலவும் குறைவாக ஆக வேண்டும், என்று நினைப்பவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து பயன் அடையலாம்.
முதலில் முகப்பரு உள்ளவர்களுக்கு, ஒரு சிறிய பௌலில் ஒரு ஸ்பூன் கிராம்பு தூள், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரை கலந்து, அதை எடுத்து உங்களது முகப் பருவின் மேல் தடவிக் கொள்ள வேண்டும். இரவில் இதை தடவிக் கொண்டு, அதை அப்படியே உலர விட்டு விடுங்கள். மறுநாள் காலை எழுந்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வரவேண்டும். தினம்தோறும் இதை தொடர்ந்து செய்து வந்தால், முகப்பரு தழும்பு கூட தெரியாமல் உங்களது சருமம் அழகாக மாறிவிடும்.
இரண்டாவதாக உங்களுடைய முகம் எப்போதுமே பொலிவிழந்து காணப்படால், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் லேசாக மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் வரை அப்படியே இதை ஊற விட்டு விட வேண்டும். அடுத்தபடியாக குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவி விடுங்கள். சோப்பு போட்டு கழுவ வேண்டாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்களது முகம் பொலிவாகும்.
இரவில் தூங்கும்போது, எப்போதுமே முகத்தில் மேக்கப் இருக்கக்கூடாது. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தை நன்றாக சுத்தம் செய்து விட்டு அதன் பின்பு சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு தான் தூங்கவேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
வெள்ளையாக இருப்பவர்கள், வெயிலில் சென்று வந்தால், சூரிய ஒளியின் காரணமாக சன் டேன் ஏற்படும். இதை நீக்குவதற்கு ஒரு ஸ்பூன் பச்சை பயறு தூள், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து உள்ள பகுதிகளில் போட்டு வந்தால் வெயிலினால் கருத்த இடம், சீக்கிரம் வெண்மையாக மாறிவிடும்.
பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும், இருசக்கர வாகனம் ஓட்டி முடித்த பிறகு, இரவு நேரத்தில் கண்கள் மிகவும் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், கொஞ்சம் காட்டேன் பஞ்சில், ரோஸ் வாட்டரை நனைத்து கண்களுக்கு மேல் 10 நிமிடங்கள் வைத்தால் கூட போதும் கண்கள் புத்துணர்ச்சி பெறும். இதேபோல, தேவையற்ற முடிகளை நீக்கும் போது, அந்த இடத்தில் அரிப்பு இருக்கும். அந்த அரிப்பு நீங்குவதற்கு ரோஸ் வாட்டரை தடவிக்கொள்ளலாம்.
சில பேரது தலைமுடி மிகவும் ரஃபாக இருக்கும். இப்படிப்பட்ட முடியை சாஃப்ட் ஆக மாற்றுவதற்கு, கிளிசரின் 2 ஸ்பூன், ரோஸ் வாட்டர் 2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து அதன் பின்பு, தலையில் எண்ணெய் வைப்பது போல மயிர்க்கால்களில் படும்படி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து எப்போதும் போல ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக்கொள்ளுங்கள்.
உங்களுடைய தலைமுடி அதன்பின்பு எப்போதும் சில்கி ஹேர் ஆக மாறிவிடும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த முறையை பின்பற்றலாம். மேலே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை ஆண்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் பெண்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.