Advertisement

சோற்றுக் கற்றாழையை தவறியும் இப்படி மட்டும் பயன்படுத்தி விடாதீர்கள்! ஆபத்து நிச்சயம்.

சோற்றுக் கற்றாழையை தவறியும் இப்படி மட்டும் பயன்படுத்தி விடாதீர்கள்! ஆபத்து நிச்சயம்.

சோற்றுக் கற்றாழை ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் வளர்க்க வேண்டிய ஒரு செடி வகையாக இருக்கிறது. கற்றாழைச் செடியை வளர்ப்பவர்கள் மருத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் அதன் பலன்களை அனுபவிக்கலாம். கற்றாழை மிகப்பெரிய மருத்துவ மூலிகை பொக்கிஷம் என்றே கூறும் அளவிற்கு அற்புதமான ஆற்றல் படைத்துள்ளது. ஆன்மீக ரீதியாகவும் கற்றாழையை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும் என்பார்கள். அத்தகைய கற்றாழையை பயன்படுத்தக் கூடாத முறை என்ன? ஏன் அப்படி பயன்படுத்தக்கூடாது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

katralai

கற்றாழைச் செடியை வீட்டிற்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் தாராளமாக வைத்து வளர்த்து வரலாம். குறிப்பாக வீட்டின் காம்பவுண்ட் சுவருக்கு ஒட்டிய நிலையில் வளர்த்தால் விசேஷமான பலன்கள் உண்டு. பொதுவாக முட்கள் அதிகம் நிறைந்துள்ள செடிகளை வீட்டில் வளர்க்க கூடாது என்பார்கள். அவ்வகையில் கற்றாழை தனித்துவமானது என்று கூறலாம். கற்றாழையில் முட்கள் இருந்தாலும் அதை தெய்வீக செடியாக பார்க்கப்படுவதால் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை காம்பவுண்ட் சுவருக்கு அருகில் வளர்த்தால் வீட்டில் விஷ ஜந்துக்கள் வருவது தடுக்கப்படும். எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்களும் கிடைக்கும். துளசி செடியை போன்றே கற்றாழையும் ஆக்சிஜனை நமக்கு அதிக அளவில் கொடுக்கும். இதனை தினமும் காலையில் மோரில் கலந்து உட்கொள்வதால் உடலில் இருக்கும் பல்வேறு நோய்கள் நீங்கும்.

katralai

கற்றாழையில் நாம் செய்ய கூடாத தவறு 2 உள்ளது. ஒன்று, கற்றாழையை பயன்படுத்துபவர்கள் பிஞ்சு கற்றாழையை எப்போதும் தவறியும் பயன்படுத்தி விடக்கூடாது. கற்றாழையை நீங்கள் எடுக்கும் பொழுது முற்றிய கற்றாழையை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பிஞ்சு கற்றாழையை வெட்டுவதோ அல்லது அதை பயன்படுத்துவதோ நிச்சயம் கூடாது. அதில் இருக்கும் அதிகப்படியான கசப்பு எதிர் விளைவுகளை உண்டாக்கும். முகத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தாலும், கூந்தலுக்கு பயன்படுத்துவதாக இருந்தாலும், உடலுக்கு உள்ளே உட்கொள்ள எடுத்துக் கொள்ள பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி முற்றிய கற்றாழையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக கற்றாழையை செடியிலிருந்து எடுத்த உடன் உடனடியாக பயன்படுத்தக் கூடாது. பத்து நிமிடம் இடைவெளி விட்டு பார்த்தால் அதில் இருக்கும் விஷ திரவங்கள் மஞ்சளாக வெளியே வந்திருக்கும். அதன் பிறகு கற்றாழையை தோல் நீக்கி உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து அதையும் நேரடியாக அப்படியே பயன்படுத்தி விடக்கூடாது. கற்றாழை ஜெல்லை குறைந்தது ஏழு முறையாவது சுத்தமான தண்ணீரில் நன்கு அலச வேண்டும். அதற்குப் பின்னர் தான் மற்ற உபயோகத்திற்குப் பயன்படுத்த வேண்டும். கற்றாழையில் இருக்கும் லேசான விஷத்தன்மையும் இவ்வாறு செய்வதால் முற்றிலுமாக நீங்கி விடுகிறது.

aloe-vera

அதன் பிறகு நீங்கள் கற்றாழையை மோரில் கலந்து குடித்து வந்தால் உடலின் உஷ்ண தன்மை நீங்கி குளிர்ச்சியாகும். மேலும் உடலுக்கு உள்ளே இருக்கும் கழிவுகள் அனைத்தையும் நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதய குழாயில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு. குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாதவர்கள் இதனை வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் போதும். முதுமையான தோற்றத்தை நீக்கி இளமையை மீட்டுத்தரும் ஆற்றலும் கற்றாழைக்கு உண்டு.

கற்றாழையை முகத்தில் தேய்த்து உலர விட்டு கழுவினால் மாசுமறுவற்ற பிரகாசமான முகம் கிடைக்கும். வாரம் ஒரு முறை கூந்தலுக்கு பயன்படுத்தினால் கூந்தல் உதிர்வது நின்று, பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்கும். தினமும் கற்றாழைக்கு தண்ணீர் தெளித்து வளர்த்து வந்தால் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கற்றாழையை உங்கள் வீட்டில் இல்லை என்றால் உடனே வாங்கி வந்து வளருங்கள் நல்லது நடக்கும்.