Advertisement

நீங்க எப்படி தூங்கனும்னு முதல்ல தெரிஞ்சுக்கோங்க! அப்பறம் தூக்கம் வரலனு எப்பவும் புலம்பவே மாட்டீங்க.

நீங்க எப்படி தூங்கனும்னு முதல்ல தெரிஞ்சுக்கோங்க! அப்பறம் தூக்கம் வரலனு எப்பவும் புலம்பவே மாட்டீங்க.

தூக்கம் என்பது மனிதனுக்கு வரம். சரியான தூக்கம் இல்லாததால் அது பல பேருக்கு இன்று சாபமாக இருந்து வருகிறது. தூக்கம் வராததற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல காரணங்கள் இருந்தாலும் இது மிகப்பெரும் பிரச்சனையாக உங்களுக்கு இனிவரும் காலங்களில் மாறலாம். நீங்கள் எப்படி முறையாக தூங்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இதை பற்றி பத்து கருத்துக்களை தனிப் பெரும் கருணையான அருட்பெரும் ஜோதி வள்ளலார் கூறியிருக்கிறார். அவர் அப்படி என்ன சொன்னார்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

sleepless

ஒரு வீட்டில் முதலில் இருள் சூழ்ந்து இருக்கக் கூடாது. நம் மனதிற்கு உள்ளேயும் சரி, நாம் வசிக்கும் வீட்டிலும் எந்த நேரத்திலும் இருள் சூழ்ந்த நிலையை உருவாக்கக் கூடாது என்கிறார் வள்ளலார். அதாவது நீங்கள் படுத்திருக்கும் அறையில் ஒரு சிறிய விளக்கையாவது எரிய விடுவது நல்லது. அப்படி உங்களால் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால், சிறிய மின் விளக்கை போட்டு விட்டு தான் தூங்க வேண்டும். ஒரு சின்ன லைட் கூட இல்லாமல் தூங்குவது நல்லது அல்ல என்கிறார் வள்ளலார்.

தூங்கும் பொழுது இடது பக்கமாக ஒருக்களித்து தூங்க வேண்டும். இடது பக்கம் சூரிய கலையும், வலதுபக்கம் சந்திர கலையும் நடைபெறுவதால், வலது பக்கம் தூங்கினால் உடல் குளிர்ச்சி ஏற்பட்டு உண்ட உணவு செரிமானம் ஆக தாமதப்படும். இடது பக்கம் ஒருக்களித்து படுக்கும் பொழுது உண்ட உணவு சீக்கிரம் ஜீரணம் ஆகி உடனே உறக்கம் வருமாம். படுக்கும் போது நீங்கள் வேறு எந்த சிந்தனையில் இருந்தாலும், உங்களது மனம் ஒருமுகப்படுவதற்கு, மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படாமல் இருப்பதற்கு, மலச்சிக்கல் உண்டாகாமல் இருப்பதற்கு இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பது தான் நல்லது. அதே போல் நேராகவோ அல்லது குப்புற படுத்து தூங்குபவர்களுக்கு ஆயுள் குறையுமாம்.

sleep1

சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறிய நடை பயிற்சி செய்து விட்டு, இரண்டு மணி நேரம் கழித்து ஒரு பத்து நிமிடமாவது தியானம் செய்துவிட்டு உறங்க செல்வது உடனடி உறக்கத்தை வரவழைக்கும். சாப்பிட்ட உடனேயே தூங்க செல்வது நீங்கள் எவ்வளவு நேரம் தூங்கினாலும் காலையில் தூங்கிய திருப்தியே இருக்காது என்கிறார்.

பகலில் தூங்குபவர்களுக்கு கண்பார்வை பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். பகலில் எப்போதும் தூங்க கூடாது. ஆனால் மதிய உணவு உண்ட பிறகு ஒரு இருபது நிமிடமாவது இடக்கைப் பக்கம் ஒருக்களித்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக அப்படியே படுத்து தூங்கி விடக்கூடாது. இவ்வாறு ஓய்வு எடுத்துக் கொள்வதன் மூலம் வேலை செய்த களைப்பு மற்றும் செரிமானமும் ஆகி உடலுக்கு புதிய சுறுசுறுப்பு கிடைக்குமாம்.

sleep1

சூரிய உதயம் ஆவதற்கு முன்பே எழுந்து விட வேண்டும். எழுந்ததும் தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்பவர்களுக்கு மற்றவர்களை விட அறிவுத் திறனும், ஆரோக்கியமும் அதிகமாக இருக்குமாம். கண் பார்வையும் சிறப்பாக இருக்குமாம். இரவு இடது கைப்பக்கம் ஒருக்களித்து தூங்கும் பொழுது இறைசிந்தனை, மந்திரம் போன்றவற்றை உச்சரிப்பது நல்ல பலன் தருமாம்.

எந்த ஒரு மனிதன் அதிக நேரம் தூங்குகிரானோ அவனுக்கு ஆயுள் குறைவு என்கிறார் வள்ளலார். எந்த அளவிற்கு உங்களின் தூக்க நேரத்தை குறைத்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களின் ஆயுளும் கூடுமாம். தூக்கத்தை விட, தியானம் செய்வது மிகவும் சிறந்த ஒன்றாக கூறுகிறார் வள்ளலார். தூங்கும் நேரத்தை குறைத்து, அந்த நேரத்தை ஈடுகட்ட நீங்கள் தியானத்தை மேற்கொள்வது தான் சரியான பழக்கமாம்.

meditation

நாலு மணி நேரம் தூங்குகிறீர்கள் என்றால், இரண்டு மணி நேரமாவது தியானம் மேற்கொள்ள வேண்டும். இதுவே உங்களின் உடல் திடம் மேம்பட உதவி செய்யுமாம். தியானம் செய்யும் பொழுது இறைசிந்தனை தவிர வேறு எந்த சிந்தனையும் உங்களுக்கு வரக்கூடாது. இதையெல்லாம் பின்பற்றுவதற்கு ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், போகப் போக நிச்சயம் பழக்கமாகிவிடும்.