Advertisement

நாம் இப்படி தான் சமைத்து சாப்பிட வேண்டும் என்று அன்றே ஆச்சரியமூட்டும் தகவல்களை வள்ளலார் கூறியுள்ளார். அவர் அப்படி என்னதான் சொன்னார் தெரியுமா?

நாம் இப்படி தான் சமைத்து சாப்பிட வேண்டும் என்று அன்றே ஆச்சரியமூட்டும் தகவல்களை வள்ளலார் கூறியுள்ளார். அவர் அப்படி என்னதான் சொன்னார் தெரியுமா?

நாம் சமைக்கும் அரிசி எந்த அரிசியாக இருப்பது நல்லது? எப்படி சமைப்பது? எந்த உணவை எல்லாம் நாம் சாப்பிடுவது? அதை எப்படி முறையாக சாப்பிடுவது? இதுபோன்ற விஷயங்களை எல்லாம் அன்றே வள்ளலார் நமக்கு எடுத்துரைத்து சென்றுள்ளார். இந்த காலகட்டத்தில் அதை யோசிக்கும் பொழுது மிகவும் சரியானதாக இருக்கிறது. இந்த விஷயங்களை எல்லாம் வள்ளலார் மட்டுமல்லாமல் இன்னும் சில சித்தர்களும் தங்களது குறிப்புகளில் கூறி சென்றுள்ளனர் என்பதே மேலும் வியக்கத்தக்க தகவல்களாக இருக்கிறது. அப்படி வள்ளலார் என்ன கூறினார்? என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

jeera-samba

நாம் சமைக்கும் அரிசி சீரகசம்பா அரிசியாக இருப்பது உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகச்சிறந்த பலனை தருபவையாம். சீரகசம்பா சமைக்கும் பொழுது எந்த அளவிற்கு பிரமாதமான மணம் வீசும் என்பதை சமைத்து பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். எடுக்கக்கூடாத அரிசியாக புன்செய் நிலத்தில் விளையும் அரிசி வகைகளை அன்றாட உணவில் நிச்சயம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்கிறார். சாப்பிட்ட உடன் தூக்கம் வருமே பாருங்கள்! அந்த தூக்கம் கூட சீரகசம்பா சாப்பிடுவதால் அறவே வராது.

அரிசி வகைகளில் மிகவும் சுவையான அரிசி சீரகசம்பா தான். இன்று பெரும்பாலான மாவட்டங்களில் பிரியாணியை சீரகசம்பா வைத்துதான் செய்கிறார்கள். பாஸ்மதி அரிசியை அவர்கள் அறவே தவிர்க்கிறார்கள் என்பது கூடுதல் தகவலாகும். குறிப்பாக கரூர், கோயம்பத்தூர், பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் சிறிய மெஸ் முதல், பெரிய ஹோட்டல்கள் வரை சீரக சம்பா அரிசியில் தான் பிரியாணி சமைத்து பரிமாறப்படுகிறது.

rice

அடுத்து இயற்கையாக விளையும் கைக்குத்தல் அரசியான பச்சரிசியை சாப்பிடுவது ஆரோக்கியத்தை தரும். கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், உடல் பலவீனமானவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். ஜீரண கோளாறு உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்ப்பது நல்லது. எந்த அரிசியாக இருந்தாலும் அதை சரியான பதத்தில் வேகவிட வேண்டும். அதிகம் வெந்து குழைந்து விடவும் கூடாது, குறைவாக வெந்து விழுங்குவதற்கு சிரமப்படவும் கூடாது. எப்போதும் சரியான பதத்தில் சாப்பிடுவது ஆரோக்கியம் தரும். அதிகம் குழைந்துவிட்டால் உமிழ்நீருடன் கலக்காமல் அப்படியே விழுங்கி விடுவோம் இதுவும் நல்லதல்ல. நன்கு மென்று உமிழ்நீருடன் கலந்து பின் விழுங்குவது தான் ஜீரணத்திற்கு நல்லது.

எப்போதும் சாதத்தை வடித்து தான் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் எண்ணெய் போன்ற படலங்கள் நீங்கும். அதை விடுத்து குக்கரில் சமைத்து சாப்பிட்டால், அல்லது வடிக்காமல் பொங்கி சாப்பிட்டால் சோர்வு, உடல் அசதி, மந்தம், தேவையில்லாத உடற்பருமன் போன்ற பிரச்சினைகள் உண்டாகக்கூடும்.

rice-cooker

கீரை வகைகளில் இரும்புச் சத்தும், தாது சத்தும் அதிகம் இருப்பதால் தினமும் ஒரு கீரை எடுத்து கொள்வது நல்லது. அதிலும் குறிப்பாக கரிசலாங்கண்ணி, தூதுவளை, பொன்னாங்கண்ணி, பசலை, முருங்கை போன்ற கீரை வகைகளை பருப்பு, மிளகு சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சக்திவாய்ந்த உணவு ஆகுமாம். புளியாரை என்னும் கீரையை தினமும் எடுத்துக் கொள்வது ஆயுளைக் கூட்ட வல்லதாம்.

veggitables

அதேபோல் காய் வகைகளில் கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், கல்யாண பூசணிக்காய், புடலங்காய், தூதுவளங்காய், கொத்தவரங்காய், பேயன் வாழைக்காய், கருணைக்கிழங்கு இவைகள் மிகவும் உடலுக்கு நன்மை பயப்பவை என்கிறார் வள்ளலார். பழவகைகளில் பேயன் வாழைப்பழம், ரஸ்தாலி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாம். குளிர்ச்சி பொருந்திய காய்கறிகளை விட சூட்டைத் தரும் காய்கறிகள் செரிமான கோளாறு ஏற்படுவதைத் தடுக்கின்றன.

thuvaram-paruppu

பருப்பு வகைகளில் மற்ற பருப்பு வகைகளை குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் துவரம் பருப்பு மிகுந்த ஆரோக்கியம் தரும் பருப்பு வகையாகும். இதில் இருக்கும் புரதம் உடலின் சீரான வளர்ச்சிக்கு உதவி புரியும். ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்திற்கு நன்மை செய்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

uppu-puli-milagai

முதல் நாள் செய்த உணவை மறுநாள் நன்றாகவே இருந்தாலும் சூடுபடுத்தி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அன்றைய நாள் சமைத்த உணவை மிதமான சூட்டில் எடுத்துக்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார். உப்பு, புளி, மிளகாய் இந்த மூன்றையும் குறைந்த அளவே சேர்க்கவேண்டும். அதுவும் இந்த மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்து எடுத்த பின் உணவில் சேர்ப்பதே சிறந்தது என்கிறார். மிளகாய் குறைத்து அதற்கு பதிலாக மிளகை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். பூண்டு மற்றும் வெங்காயம் அதிக அளவு சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஜீரகம் தேவை ஆனால் கடுகு சமையலுக்கு தேவையே இல்லை என்கிறார் வள்ளலார்.

incrediants

ஒரு குழம்பு வைக்க ஒவ்வொரு பொருளும் எந்த அளவுக்கு தேவை என்பதையும் அவரே அருமையாக கூறுகிறார். மிளகு – 160g, சீரகம் – 60g, வெந்தயம் – 40g, உப்பு, புளி, மிளகாய் – தலா 10g இந்த அளவில் உங்களது தேவைக்கு ஏற்ப விகிதத்தை கூட்டிக் குறைத்து அமைத்துக் கொண்டால் ஆரோக்கியம் தரும் என்கிறார். தாளிக்க எப்போதுமே பசுநெய் அல்லது நல்லெண்ணை பயன்படுத்த வேண்டுமாம்.

mamisam

அசைவ உணவை சாப்பிட்டால் மனிதனுக்கு ஏற்படக்கூடிய கோபம், குரோதம், காமம் போன்ற உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முடியாமல் அவஸ்தைப்பட வேண்டுமாம். சைவ உணவே இருந்தாலும் அதில் எந்த உணவை, எந்த விதத்தில், எந்த விகிதத்தில் எப்போது எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே உடல் ஆரோக்கியம் தருபவையாம். இவற்றையெல்லாம் நீங்கள் முறையாக பின்பற்றுவதன் மூலம் உங்களின் உடல் ஆரோக்கியமும், ஆயுளும் கூடுமாம். உங்களின் சொல்லுக்கு உங்களின் உடல் சரியாக தலை அசைத்து வேலை செய்யுமாம். நாமும் முயற்சி செய்து பலன் பெறுவோம்.