தலைக்கு என்னத்த தேச்சாலும் முடி மட்டும் வளரலையா? ரொம்ப யோசிக்காதீங்க! இதை மட்டும் செய்யுங்க.
இப்போது இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் என்ன வேலை தேடுவது? அடுத்து என்ன தான் செய்வது? என்கிற யோசனை தான் நிறைய பேருக்கு இருக்கிறது. இப்படி யோசித்து யோசித்து இருக்குற கொஞ்ச முடியும் கொட்டிவிடும் போல இருக்கு. ஏற்கனவே மழை இல்லாம பூமியில தண்ணி வத்தி போச்சு. அதுவும் நல்ல தண்ணீர் கிடையாது. உப்பு தண்ணீரில் குளித்தால் முடி கொட்டாமல் என்னங்க செய்யும்? உங்க முடியோட ஆரோக்கியத்துக்கு நீங்க இதுவரைக்கும் என்ன செஞ்சு இருக்கீங்க அப்படின்னு யோசிச்சு பாருங்க? விளம்பரத்துல வர்ற கண்ட கண்ட எண்ணெயை வாங்கி தேச்சி இருப்பீங்க. டிசைன் டிசைனா பாட்டல்ல மூலிகை எண்ணெய் என்று சொல்லி அடைத்து விற்றாலும் அதுல ஒரு பிரயோஜனமும் இல்லை என்று நினைக்கிறீர்களா? அப்டின்னா இத செஞ்சு பாருங்க! நம்முடைய முடி ஆரோக்கியமா வளர நாம என்ன செய்யணும்னு தெரிஞ்சுக்க இந்த பதிவை தொடர்ந்து படிங்க.
ஒரு செடியை நட்டு வெச்சா போதுமா? அது செழித்து வளர என்ன பண்ணனும்னு ஒரு முறை இருக்குல்ல? தினமும் தண்ணி ஊத்தணும், ஊட்டச்சத்து கிடைக்க உரம் போடணும் அப்பதான் அந்த செடி செழித்து வளர்ந்து நமக்கு பயனைத்தரும். அதேபோல தாங்க முடியும்! நம்முடைய முடி ஆரோக்கியமா செழித்து வளர வேண்டுமென்றால், முதலில் தினமும் எண்ணை தடவ வேண்டும். தினமும் எண்ணெய் தடவுபவர்கள் எத்தனை பேர்? என்று கேட்டால் யாரும் கை தூக்க மாட்டார்கள். தினமும் யாரும் தொடர்ந்து எண்ணெய் தடவுவது கிடையாது. கேட்டால் ‘ஸ்டைல்’ என்று சொல்வார்கள்.
செடிக்கு தண்ணி ஊற்றுவது இல்லை என்றால் வறண்டு வாடி விடும் அல்லவா? அதே போல் தான் உங்கள் முடிக்கும் நீங்கள் எண்ணை தடவவில்லை என்றால் முடியின் வேர்க்கால்கள் வறண்டு உதிர துவங்கும். இதைத்தான் இன்று பல பேரும் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனையான ஒரு விஷயம்.
அதெல்லாம் சரி, இப்ப தப்பு பண்ணியாச்சு! அதை எப்படி சரி செய்து திருத்திக் கொள்வது? வறண்ட வேர்க்கால்களின் மண்டை ஓட்டு பகுதியை மறுபடியும் ஊட்டச்சத்து கொடுத்து அதன் வளர்ச்சி செல்களை தூண்டி விட வேண்டும். அதற்கு நாம் இந்த மூன்று பொருட்களை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொண்டால் போதும். முதலில் நாட்டு மருந்து கடைக்கு சென்று, நெல்லிக்காய் தைலம், கருவேப்பிலை தைலம் வாங்கி வையுங்கள். அதனுடன் 50 கிராம் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையுடன் மருதாணி இலைகளை சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு அரைத்து சிறுசிறு உருண்டைகளாக தட்டி வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை அந்த எண்ணெயுடன் ஒரு வாரம் வரை அப்படியே ஊற வைத்து விடுங்கள்.
ஒரு வாரத்திற்கு பின் வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தினமும் உங்களின் மண்டையோட்டு பகுதியின் வேர்க்கால்கள் முதல், முடியின் நுனி பகுதி வரை நன்றாக தடவி வாருங்கள். இதை தினமும் தவறாமல் தடவி வாருங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரம் இருமுறை நீங்கள் தலைக்கு தேய்த்து குளித்தால் போதுமானது.
முடியை எப்போதும் எண்ணெய் பிசுபிசுப்புடன் வைத்துக் கொள்வதும் தவறு தான். உங்களது முடி எப்போதெல்லாம் சுத்தமாக இல்லை என்று தோன்றுகிறதோ, உடனே தலைக்கு குளித்து விட வேண்டும். ஒரு நாள் நீங்கள் சோம்பல் தனம் பட்டு விட்டாலும் உங்களின் முடி ஆரோக்கியம் கெட்டுவிடும். இது போல் ஒரு மாதம் செய்து பாருங்கள். முளைக்காத மண்டையில் கூட முடிகள் செழிப்பாக முளைக்கத் தொடங்கிவிடும். முடி உதிர்வது நிச்சயம் ஒரே வாரத்தில் கட்டுப்படுவதை நீங்களே உணரலாம்.
இதில் எந்த ரசாயன மூலக்கூறுகளும் சேர்க்கப்படவில்லை. நெல்லிக்காயும், கறிவேப்பிலையும் சுத்தம் செய்து காயவைத்து சிறு சிறு துண்டுகளாக கத்தரித்து எண்ணெயில் போட்டு காய்ச்சி எடுக்கலாம். இது இன்னும் சிறப்பான பலன் தரும். ஆனால் அது யார் உட்கார்ந்து செய்வது? என்று சோம்பல் தனம் படுபவர்களுக்கு மேலே சொன்ன வழி தான் சரி.
நீங்கள் பெண்களாக இருந்தால் முதலில் முடியை இறுக்கமாக ஹேர்பின்கள் அல்லது கிளிப்புகளை சொருகி வைக்கக் கூடாது. சற்று தளர்வான முறையில் முடியை பின்ன வேண்டும். ஷாம்பு உபயோகிக்கும் பொழுது நேரடியாக உபயோகிக்காமல் சிறிதளவு ஜக்கில் தண்ணீர் எடுத்து அதில் ஷாம்பூவை கலந்து நீங்கள் தலைக்கு தேய்த்து குளித்தால், அதில் இருக்கும் ரசாயனம் உங்கள் முடியை நேரடியாக பாதிக்காமல் பாதுகாக்கும். இது போல் எளிய வழிமுறைகளை உங்கள் வீட்டிலேயே செய்து நீங்களும் பயனடையுங்கள்.