Advertisement

குதிகால் வலியால் கஷ்டபடுகிறீர்களா? இதை குடித்தால் போதும் 1 நிமிடத்தில் வலி போயே போச்சு.

குதிகால் வலியால் கஷ்டபடுகிறீர்களா? இதை குடித்தால் போதும் 1 நிமிடத்தில் வலி போயே போச்சு.

ஆண், பெண் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் அதிகம் தாக்கும் வலிகளில் குதிகால் வலி முக்கிய பங்காற்றி வருகிறது. வேலை செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், தொழில் புரிபவர்கள், சுய தொழில் செய்பவர்கள், குடும்ப பெண்கள் என்று எந்த விதமான வேலையில் ஈடுபவர்களுக்கும் தொடர்ந்து ஒரு மணி நேரம் நிற்கும் நிலை ஏற்பட்டால் குதிகால் வலி ஏற்படுகிறது. ஏன் இந்த வலி உண்டாகிறது? என்று கேட்டால்.. பாதங்களில் எழும்பு மற்றும் தோல் இணையும் பகுதிக்கு இடையே சவ்வு போன்ற ஒரு அமைப்பு இருக்கும். அதில் பாதிப்புகள் ஏற்படுமானால் குதிகால் வலி உண்டாகும்.

heel-pain

இன்றைய கால கட்டத்தில் குதிகால் வலியால் அவதிபடுவோர் எண்ணிக்கை பரவலாக அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது. இதற்கு காரணங்கள் பல இருந்தாலும் அதன் வலி என்னவோ இரவில் நிம்மதியாக தூங்க கூட விடுவதில்லை. யாராவது காலை இதமாக அமுக்கி விட்டால் நன்றாக இருக்கும் என்பது போல் ஒரு உணர்வு ஏற்படும். குதிக்காலில் சதை நரம்புகளில் அழுத்தம் கொடுத்தால் அவ்வளவு நிம்மதியாக இருக்கும். இந்த குதிகால் வலி தொல்லையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று இயற்கை ரீதியாக இப்பதிவில் காண்போம்.

குதிகால் வலி யாரை எல்லாம் அதிவிரைவாக தாக்குகிறது? அதிகமாக நடப்பவர்கள், குளிர்ச்சியான பகுதியில் தொடர்ந்து பணி புரிபவர்கள், உயரமான செருப்புகளை அதிகம் பயன்படுத்துகிறவர்கள், தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்பவர்கள், உடல் எடை அதிகம் கொண்டவர்கள், மற்றும் சத்து குறைபாடு உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது. தொடர்ந்து பாதத்தில் அழுத்தம் ஏற்படும் போது ரத்த ஓட்டம் குறைந்து சவ்வு பாதிக்கபடுகிறது.

heel-pain1

தேவையான பொருட்கள்:

இஞ்சி – 10 கிராம்

பூண்டு 10 கிராம்

விரலி இலை – 10 கிராம்

மாவிலங்கப்பட்டை – 10 கிராம்

அசுவகந்தா – 10 கிராம்

கோரைக்கிழங்கு – 10 கிராம்

முடக்கத்தான் – 10 கிராம்

இவைகளை தனி தனியாக வெயிலில் காய வைத்து பின்னர் 300ml தண்ணீர் சேர்த்து மேற்கண்ட அனைத்து பொருட்களையும் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்து வற்றி கால் அளவு ஆனதும் அடுப்பை அனைத்து விட வேண்டும். இந்த கசாயத்தை உணவு எடுத்து கொள்வதற்கு முன்னர் குடித்து விட வேண்டும். காலை மற்றும் மாலை இரண்டு வேளை தொடர்ந்து குடித்து வந்தால் குதிகால் வலி, உடல் அசதி, முதுகு வலி என்று தசையில் ஏற்படும் அனைத்து வலிகளும் ஓடியே போய் விடும்.

mooligai

குறைந்தது வாரம் மூன்று நாட்கள் இந்த கசாயத்தை பருகி வரலாம். எந்த பக்க விளைவுகளும் இல்லாத இயற்கையான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுவதால் குழந்தைகளுக்கும் ஒரு அவுன்ஸ் வீதம் கொடுக்கலாம். நன்றாக தூக்கம் வரும். அதிகமாக வலி இருக்கும் போது சுடு நீரில் உப்பு போட்டு கால்களை கொஞ்ச நேரம் அதில் வையுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும். அவ்வளவு தான் இனி யாரையும் கால் அழுத்திவிட சொல்ல தேவையே இல்லை. நன்றாக உறங்கி மறு நாளைய பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்கலாம்.