Advertisement

எந்த நோயும் உங்கள் பக்கத்தில் கூட வரமுடியாது. இந்தப் பொடியை பயன்படுத்தி, இப்படி குளித்து பாருங்கள். கொரானா கூட பயந்து ஓடிவிடும்.

எந்த நோயும் உங்கள் பக்கத்தில் கூட வரமுடியாது. இந்தப் பொடியை பயன்படுத்தி, இப்படி குளித்து பாருங்கள். கொரானா கூட பயந்து ஓடிவிடும்.

எந்த ஒரு கொடிய நோயாக இருந்தாலும், உலகின் பல்வேறு நாடுகளில் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் நம் இந்திய நாட்டில், அதன் தாக்கம் குறைவாகத்தான் இருக்கும். இதற்கு காரணம் நம்முடைய பழக்கவழக்கமும், நம் முன்னோர்கள் நமக்கு கூறியிருக்கும் மருத்துவ முறைகளும் தான். நம் நாட்டில் விலையும் தாவரங்களுக்கும், இயற்கையான பொருட்களுக்கும் மருத்துவ குணம் அதிகம். அதை நம்முடைய ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை, நாம் நன்றாக அறிந்து இருக்கின்றோம். நம்முடைய அன்றாட வாழ்க்கையில், இன்றியமையாத, ஆரோக்கியமான ஒரு விஷயம் எது என்றால், அது குளியல் தான். இந்தக் குளியலை முறையாக குளித்து வந்தாலே போதும். நம்மை எந்த நோய் தொற்றும், கிருமிகளும் அண்டவே அண்டாது. அந்த வகையில் நம்மை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள இப்படித்தான் குளிக்க வேண்டும் என்ற முறையும், நம்முடைய பழமையான ஆயுர்வேத நூல்களில் கூறப்பட்டுள்ளது. நமக்கு ஆரோக்கியத்தைத் தரும், நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் இந்தக் குளியலை எப்படி குடிக்க வேண்டும்? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

bathing

எண்ணை தேய்த்து குளிப்பது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இதை வாரத்திற்கு ஒருமுறைதான் செய்வோம். ஆனால் தினம் தோறும் எண்ணை தேய்த்து குளிப்பது என்பது ஆரோக்கியத்திற்கு மிக மிக மிக அவசியம். எப்படி எண்ணை தேய்த்து குளிப்பது? நல்லெண்ணெயை லேசாக சூடு படுத்திக்கொண்டு முதலில் உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். இரண்டாவதாகத் தொப்புள் பகுதி, மூன்றாவதாக இரண்டு உள்ளங்கைகள், நான்காவதாக 2 பாதங்கள். இதன் பின்புதான் உடலின் அனைத்து பாகங்களிலும், நம் கைகள் முழுமையாக படும் படி அழுத்தம் கொடுத்து எண்ணெய் தேய்த்து விட வேண்டும். எண்ணெயானது ஒரு ஐந்து நிமிடம் நமது உடலில் ஊறினால் போதும்.

குளிக்கச் சென்றதும் உடனே ஷவரை திறந்து கீழே போய் நின்று விடக்கூடாது. பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, காலிலிருந்து படிப்படியாக மேல் பக்கமாக தண்ணீர் ஊற்றி, உடம்பை முழுமையாக நினைத்து விட்டு, கடைசியில்தான் தலையில் தண்ணீரை ஊற்றவேண்டும். பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமுமில்லை. வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மிகவும் நல்லது. (பச்சைத் தண்ணீரில் குளிப்பது தான் நல்லது. நம்முடைய பழக்க வழக்கம், கால சூழ்நிலை எல்லாமும் மாறி விட்டது. இந்த காலத்திற்கு தகுந்தவாறு வெதுவெதுப்பான நீரில் குளித்துக் கொள்ளலாம்.) சிறிய குழந்தைகளுக்கு எல்லாம், கொதிக்க கொதிக்க தண்ணீரில் குளிப்பாட்டும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். நரம்பு பிரச்சனை வரவும் வாய்ப்பு உள்ளது. வெதுவெதுப்பாக குளிப்பது ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

oil pulling

நாம் உபயோகப்படுத்தும் சோப்பு எல்லாம் இந்த நல்லெண்ணெயின் வழுவழுப்புத்தன்மையை நம் உடம்பை விட்டு நீங்காது. கட்டாயம் இயற்கை பொருட்களை பயன்படுத்தி நம் உடம்பில் மசாஜ் செய்து தேய்த்தால் தான், இந்த வழுவழுப்பு தன்மை நீங்கும். இதற்கு என்ன பொடியை பயன்படுத்தலாம்.

பாசி பருப்பு, மஞ்சள், கோரைக்கிழங்கு, வெந்தயம், வேப்ப இலை, ஜவ்வாது, செம்பருத்தி இலை, சந்தனம், கஸ்தூரி மஞ்சள், செம்பருத்தி பூவை நிழலில் உலரவைத்து எடுத்துக்கொள்ளலாம். இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட அளவு சேர்த்து பொடியாக அரைத்துக் கொண்டு தினமும் உடலில் தேய்த்து குளித்து வருவது மிகவும் சிறப்பானது. சீயக்காய் தூள் கூட பயன்படுத்துவது நல்லது. எந்த ஒரு நோய்த்தொற்றும் நம்மை அண்டாமல் இருக்கும். கொரானா வைரஸிற்கு கூட ஆயுட்காலம் 12 மணி நேரம்தான். முதல் நாள் காலை நாம் இந்த முறையில் குளித்தால், அடுத்த நாள் காலை வரை நம் உடலை எந்த கிருமித் தொற்றும் அண்டாது.

padikaram

உங்களது உடம்பில் நோய் தொற்று (infection) ஏதேனும் இருந்தால் சிறிதளவு படிகாரத்தை நீங்கள் குளிக்கும் தண்ணீரோடு சேர்த்துக்கொண்டால் போதும். உடம்பு வலி அதிகமாக இருந்தால், வலியைப் போக்க சுடுதண்ணியில் புளிய இலையை போட்டு காய வைத்து குளிப்பது நல்ல பலனை தரும்.

சில பேருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். அதைத் தணிக்க, நாம் உட்காரும் அளவிற்கு பெரிய அளவிலான பிளாஸ்டிக் டப் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு, அதில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி நம்முடைய இடுப்பு மூழ்கும் அளவிற்கு, பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் அமர்ந்தாலே போதும் உடல் சூடு தணிந்து விடும்.

aavi pidippathu

உடலில் இருக்கும் கெட்ட நீர் வியர்வையாக வெளியே வர நொச்சி இலை, புளிய இலை, வேப்ப இலை, தைல இலை இவை அனைத்தையும் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அதில், ஆவி பிடித்தாலே போதுமானது. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை 5 நிமிடம் மட்டும்தான் இந்த ஆவி பிடிக்க வேண்டும்.

நம்முடைய ஆரோக்கியமும் பாதுகாப்பும் நம் கைகளில்தான் இருக்கின்றது. குளிக்கும் விஷயத்திலேயே இவ்வளவு நன்மை இருக்கிறது என்றால் இதை பின்பற்றுவதில் என்ன தவறு. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால் இதை பின்பற்றினாலே போதும்.