Advertisement

கோதுமை மாவுல நீங்க வெறும் சப்பாத்தி, பூரி மட்டும்தானே செய்வீங்க! கொஞ்சம் வித்தியாசமா மசாலா சப்பாத்தி, பூரி செஞ்சு பாருங்க! 10 நிமிஷத்துல புது டிபன் ரெடி!

கோதுமை மாவுல நீங்க வெறும் சப்பாத்தி, பூரி மட்டும்தானே செய்வீங்க! கொஞ்சம் வித்தியாசமா மசாலா சப்பாத்தி, பூரி செஞ்சு பாருங்க! 10 நிமிஷத்துல புது டிபன் ரெடி!

கோதுமை மாவில் கொஞ்சம் மசாலா சேர்த்து, பிசைந்து புதுவிதமாக சப்பாத்தியும் செய்து கொள்ளலாம். பூரியும் செய்து கொள்ளலாம். சுவையான மசாலா கலந்த இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!

masala-poori

மசாலா பூரி செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு-1 கப், தக்காளி-2, பூண்டு-6 திரி, இஞ்சி-சிறிய துண்டு தோல் சீவி வெட்டி வைத்துக் கொள்ளுங்கள், (மிளகு, சீரகம் சேர்த்து) -1 ஸ்பூன், வெங்காயம்-சிறிதாக நறுக்கிக்கொள்ளவும், மல்லித்தழை சிறிதளவு-பொடியாக நறுக்கிக் கொள்ளவும், மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள்-1/4 ஸ்பூன், உப்பு-தேவையான அளவு.

முதலில் மிக்ஸி ஜாரில் தக்காளியை நான்காக வெட்டி போட்டுக் கொள்ளவும். அதில் பூண்டு தோலுரித்து போட்டுக்கொள்ளுங்கள். மிளகு, சீரகம், இஞ்சி எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மொழு மொழுவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

wheat

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு ஒரு கப் அளவு எடுத்துக்கொண்டு, அதில் பொடியாக வெட்டிய பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொண்டு, தேவையான அளவு உப்பு போட்டு, கொத்தமல்லி தழை போட்டு, தக்காளி விழுதை சேர்த்து, 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். விழுதில் இருக்கும் தண்ணீரே போதுமானது.

உங்களுக்கு தேவைப்பட்டால், தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளாம். அதன் பின்பு, அந்த மாவின் மேல் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். 1/2 மணி நேரம் கழித்து, உங்கள் கைகளில் எண்ணெய் தொட்டு சிறு சிறு உருண்டையாக உருட்டிக்கொண்டு, மாவு தொட்டு சப்பாத்தி கட்டையில், பூரி தேய்ப்பது போல் தேய்துக் கொண்டு, கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்க வேண்டியது தான்.

masala-poori1

இதே மாவை கொஞ்சம் மெல்லீசாக திரட்டி, சப்பாத்தி கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்துக்கொண்டாலும் சுவையாகத்தான் இருக்கும். அது உங்களுடைய இஷ்டம். பூரி வேண்டுமென்றால், பூரி. சப்பாத்தி வேண்டும் என்றால், சப்பாத்தி. சுவையான தேங்காய் சட்னியோடு இதை, சூடாக பரிமாறி பாருங்கள் ஒரு நிமிஷத்தில் காணாமல் போய்விடும். அவ்வளவு சூப்பரா இருக்கும்.