Advertisement

உங்கள் அன்றாட உணவில் ஒமேகா -3 சத்து இருப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

உங்கள் அன்றாட உணவில் ஒமேகா -3 சத்து இருப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

மற்ற ஊட்டச்சத்துகளை போல கொழுப்புச் சத்தும் உடல் நலத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. கொழுப்பு சத்துக்களில் கெட்ட கொழுப்பு, உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு என இரு வகைகள் இருக்கின்றன. அந்த கொழுப்பு சத்து அமிலத்தன்மை நிறைந்த ஒரு சத்து தான் ஒமேகா – 3 கொழுப்பு அமிலம் சத்தாகும். இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலம் செரிவூட்டப்படாத கொழுப்பு வகையை சார்ந்ததாகும். மீன், கோழிக்கறி, முட்டை, பருப்புகளில் இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. மனிதர்களின் உடலுக்கு இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

omega 3

ஒமேகா 3 பயன்கள்

இதயம் சீராக இயங்க 

நமது இதயம் நன்றாக இயங்கவும், நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கவும் அன்றாடம் அதிக கொழுப்புச் சத்து இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும். ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து உணவுகளில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் ரத்தத்தில் படிவதை தடுக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் மற்றும் இதயத் தசைகளின் இயக்கம் சீராக்கப்பட்டு, இருதய பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. மேலும் இதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் சீராக்கி பக்கவாதம் ஏற்படாமல் காக்கிறது.

கர்ப்பிணி பெண்கள்

கருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தை பிறக்கின்ற காலம் வரை சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்குவதோடு பிறக்கின்ற குழந்தையின் மூளை செயல்திறன் சிறப்பாக இருக்க உதவுகிறது.

omega 3

ஆஸ்துமா நோய் 

ஆஸ்துமா என்பது மனிதர்களின் நுரையீரலை பாதித்து, பல சமயங்களில் மூச்சுக் காற்றை சுவாசிப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்த கூடிய ஒரு நோயாகும். பரம்பரை காரணமாகவும், ஒவ்வாமை போன்றவற்றாலும் இந்த நோய் ஏற்படுகின்றது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் அவர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது. இதற்கு ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரும் ஆஸ்துமா நோயாளி குழந்தைகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.

ஞாபக மறதி, மனநலம் 

உடல்நலம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதற்கு நிகராக மனநலமும் சிறப்பாக காக்கப்படவேண்டும். அமெரிக்காவின் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்ட நபர்களுக்கு அதிலிருக்கும் சத்துக்கள் அவர்களின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை வலுபடுத்தியதோடு, வயது மூப்பு காரணமாக உண்டாகும் அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய் மற்றும் இன்ன பிற மனநல குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கப்படுவதாக தெரியவந்திருக்கிறது.

omega 3

தூக்கமின்மை பிரச்சனை 

தூக்கமின்மை ஒரு மனிதனை மிகவும் அவஸ்தைக்குள்ளாகும் பிரச்சனையாகும். நரம்புகள் சம்பந்தமான குறைபாடுகள் இருப்பவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை அதிகம் ஏற்படும். ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, அதில் இருக்கின்ற மெலடோனின் எனப்படும் ஹார்மோன் உடலில் கலந்து மிக விரைவிலேயே நீண்ட நேரம் நீடிக்கும் ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நரம்புகளுக்கு வலிமையை தரும் ஆற்றல் பெற்றிருக்கிறது. தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படும் குழந்தைகளுக்கும் இந்த ஒமேகா – 3 கொழுப்பு சத்து நல்ல தீர்வாக இருக்கிறது.

மாதவிடாய் பிரச்சனைகள்

மாதவிடாய் என்பது பெண்களாய் பிறந்த அனைவருமே தங்களின் வாழ்வில் அனுபவிக்க வேண்டிய ஒரு இயற்கை நிகழ்வாக இருக்கிறது. இக்காலத்தில் பெண்கள் பலருக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்களை உடலளவிலும் மனதளவிலும் களைப்படைத்து உடல் சத்து இழப்பு மற்றும் சோர்வு ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்கள் கடுமையான வலியை இக்காலத்தில் அனுபவிக்கின்றனர். ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் கடுமையான வலி உண்டாவதை தடுப்பதோடு இதர மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கிறது.

omega 3

புற்று நோய்

தற்போது உலகம் முழுவதும் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் வயிறு மற்றும் இரைப்பை புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி புற்று செல்கள் வளராமல் தடுக்கிறது. மேலும் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பிரோஸ்ட்ரேட் புற்று, பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய்களையும் தடுக்கும் ஆற்றல் ஒமேகா -3 கொழுப்பு அமில சத்து அதிகம் கொண்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கல்லீரல் கொழுப்பு கரைய 

நமது உடலுக்குள்ளாக இருக்கும் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கல்லீரல். கல்லீரல் நலமாக இருந்தால் நாம் பெரும்பாலான நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் காத்துக் கொள்ள முடியும். அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு நான் ஆல்கஹாலிக் பேட்டி லிவர் டிசீஸ் உண்டாகிறது. இதனால் கல்லீரல் பாதிப்பு உண்டாகி சமயங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு நோயாக மாறுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களின் கல்லீரலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகள் அறவே நீக்குகிறது. கல்லீரலில் வீக்கத்தை குறைத்து அதன் வழக்கமான செயல்பாட்டை ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து ஊக்குவிக்கிறது.

omega 3

ஆட்டோ இம்யூன் டிசீஸ்

ஆட்டோ இம்யூன் டிசீஸ் எனப்படும் குறைபாடு நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமான செல்களையும் புறத்திலிருந்து உள்ளுக்குள் நுழைந்து நோய் பாதிப்பு செல்களாக நினைத்து அவற்றை அழிக்கும் செயலில் இறங்குவதை குறிக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணையத்தில் உற்பத்தியாகும் இன்சுலின் செல்களை நோய் எதிர்ப்பு மண்டல செல்கள் அழிப்பதாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இத்தகைய ஆட்டோ இம்யூன் டிசீஸ்எனப்படும் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஏ. டி. எச். டி குறைபாடு நீங்க 

ஏ. டி. எச். டி (Attention deficit hyperactivity disorder) குறைபாடு குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு வகை மற்றும் மனநலம் சார்ந்த குறைபாடாக இருக்கிறது. இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிலும் கவனம் செலுத்த இயலாமை, அதீத சுறுசுறுப்பு மற்றும் அதீத உணர்ச்சிப்பெருக்கு கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளின் ரத்த மாதிரிகளை சோதனை செய்த போது அதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலச் சத்து மிகவும் குறைந்தளவில் இருப்பதை கண்டறிந்தனர். எனவே இத்தகைய குழந்தைகளுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து நிறைந்த உணவுகளை கொடுத்து வந்ததில் அவர்களிடம் மன அமைதி, கவனம் செலுத்தும் திறன், தேவைக்கு அதிகமான செயல்பாடு குறைவு ஆகியவை உண்டானதை மருத்துவர்கள் தங்களின் ஆய்வுகளில் உறுதி செய்துள்ளனர்.