Advertisement

வைட்டமின் டி ஊட்டச்சத்து உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

வைட்டமின் டி ஊட்டச்சத்து உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

நாம் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ முக்கிய அடிப்படை தேவையாக இருப்பது அன்றாடம் சாப்பிடும் உணவாகும். அத்தகைய உணவு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்ததாக இருப்பது அவசியமாகிறது. பல வகையான ஊட்டச் சத்துக்களில் முக்கியமானது வைட்டமின் சத்து. வைட்டமின் சத்துக்கள் பல வகைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒரு வைட்டமின் சத்தாக வைட்டமின் டி ஊட்டச்சத்து இருக்கின்றது. சூரிய ஒளியில் இந்த வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக இந்த வைட்டமின் டி ஊட்டச்சத்து. அத்தகைய வைட்டமின் டி ஊட்டச்சத்து அதிகம் உட்கொள்வதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

வைட்டமின் டி பயன்கள்

கண்பார்வை தெளிவாக 

மற்ற வைட்டமின் சத்துக்களைக் காட்டிலும் வைட்டமின் டி சத்து மனிதர்களின் கண்பார்வைக்கு மிகவும் அத்தியாவசிய வைட்டமின் தேவையாக இருக்கிறது. சொல்லப்போனால் வைட்டமின் டி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே பலருக்கும் இரவு நேரத்தில் தெளிவாக பார்க்க முடியாத குறைபாடான மாலைக்கண் வியாதி ஏற்படுகிறது. இந்தக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க வைட்டமின் டி ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இயற்கையாக ஏற்படும் கண்திசுக்கள் வளர்ச்சி குறைவதை தடுத்து, கண் பார்வை திறனை தெளிவாகவும் செய்ய வைட்டமின் டி ஊட்டச்சத்து உதவுவதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன.

புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்க 

நமது உடலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் செல்களின் அபரிமிதமான வளர்ச்சியால் புற்று நோய் ஏற்பட வழிவகுக்கிறது. மனித உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை சரியான விகிதத்தில் கட்டுப்படுத்தும் திறன் வைட்டமின் டி ஊட்டச்சத்து பெற்றிருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வைட்டமின் டி ஊட்டச்சத்து அதிகம் உட்கொள்ள, அவர்களின் உடலில் செல்களின் வளர்ச்சி உடலின் கட்டுப்பாட்ட்டிற்குள் இருக்க உதவுகிறது. குறிப்பாக காய்கறிகளில் இருந்து கிடைக்கப்பெறும் வைட்டமின் டி ஊட்டச்சத்து புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்றுநோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

vitamin-d

தொற்று நோய்களை தடுக்க 

வைட்டமின் டி ஊட்டச்சத்து நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மிகுந்த வலிமை உடையதாக செய்கிறது. மேலும் ஈரப்பதம் மிக்க சவ்வு படலங்கள் கொண்ட உறுப்புகளான கண்கள், நுரையீரல், வயிறு மற்றும் பிறப்புறுப்புகளில் வெளியிலிருந்து ஏற்படக்கூடிய கிருமி தொற்றுகளை அழிப்பதற்கு பேருதவி புரிகிறது. மேலும் வைட்டமின் டி ஊட்டச்சத்து நமது உடலில் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. ரத்தத்தில் நுழைகின்ற அந்நிய பொருட்கள் மற்றும் நோய்த் தொற்றுக் கிருமிகளை உடனடியாக சென்று தாக்கி அழிக்க செய்ய வைட்டமின் டி சத்து உதவுகிறது.

முகப்பருக்கள் பிரச்சனை தீர 

முகப்பரு என்பது பருவ வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பாதிப்பில்லாத குறைபாடாக இருக்கிறது. அதிக அளவில் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, நீடித்த மலச்சிக்கல் போன்றவை முகப்பரு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. முகத்தில் இருக்கின்ற செபேஷியஸ் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படும் போது முகப்பருக்கள் ஏற்படுகின்றன. வைட்டமின் டி ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு அந்த செபேஷியஸ் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து, முகத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து முகப்பரு பிரச்சனை ஏற்படாமல் முற்றிலும் தடுக்கிறது.

எலும்புகள் உறுதி பெற 

வயது, கால்சியம் சத்து மற்றும் வைட்டமின் டி சத்து ஆகியவை ஒரு நபரின் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. எனினும் வைட்டமின் டி சத்து எலும்புகளின் வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மைக்கு பக்கபலமாக இருக்கிறது. மேலை நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி வைட்டமின் டி ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்படும் ஆபத்து 6 சதவிகிதம் அளவு குறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையாகவும், உறுதியாகவும் இருக்க மற்ற ஊட்டச்சத்துகளை உண்ணும் போது வைட்டமின் டி ஊட்டச்சத்தையும் சேர்த்து உண்பதால் நன்மை பயக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

இனப்பெருக்கக் குறைபாடுகள்

வைட்டமின் டி சத்து திருமணமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு இன்றியமையாத ஊட்டச்சத்து தேவையாக இருக்கிறது. இந்த வைட்டமின் டி சத்து ஆண்களின் உடலில் உயிர் அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து மலட்டுத்தன்மையை போக்குகிறது. பெண்களுக்கு வைட்டமின் டி ஊட்டச்சத்து கருமுட்டைகளின் சீரான வளர்ச்சியை ஊக்குவித்து, கருத்தரிதலுக்கு பேருதவி புரிகிறது. கருவில் வளர்கின்ற குழந்தை எந்த ஒரு குறைபாடுகளும் இன்றி வளர்வதற்கும் உறுதுணையாக இருக்கிறது.