Advertisement

இந்த 3 பொருட்களையும் சேர்த்து உங்க வீட்ல வைங்க! எலியும், பெருச்சாலியும் உங்க வீட்டுப் பக்கம் தலவெச்சு கூட படுக்காது.

இந்த 3 பொருட்களையும் சேர்த்து  உங்க வீட்ல வைங்க! எலியும், பெருச்சாலியும் உங்க வீட்டுப் பக்கம் தலவெச்சு கூட படுக்காது.

பெரும்பாலான வீடுகளில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை எலி. ஒருமுறை வீட்டிற்குள் நுழைந்து ருசி பார்த்துவிட்டால், அந்த வாசத்தை வைத்து திரும்பத்திரும்ப என்னதான் துரத்தி அடித்தாலும், எலிப்பொறியில் பிடித்து தூரம் கொண்டு போய்விட்டு வந்தாலும், நம் வீட்டிற்குள் வந்து கொண்டே தான் இருக்கும்.

rat

இதில் பெருச்சாலிகளை சொல்லவே தேவையில்லை. நம் வீட்டு படிக்கட்டு அடியில் அல்லது கார் ஷெட், சிலருக்கு ஓட்டு வீடாக இருந்தால் சுலபமாக வீட்டுக்குள்ளேயே வந்து பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருக்கும். சில பெறுவது தோட்டங்களை நாசம் செய்து விடும். இந்த எலி தொல்லையில் இருந்து எப்படித்தான் விடுபடுவது என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு சுலபமான வழி உள்ளது. அது என்ன வழி என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் நல்ல பழுத்த தக்காளியை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். தக்காளியின் ஒரு பாதியின் மேல் தனி மிளகாய் தூளை(அதாவது தனியா மற்ற மசாலா பொருட்கள் கலக்காத தனி மிளகாய்த்தூள் தான் தேவை), நன்றாக தடவிக் கொள்ளுங்கள். அதன் மேல் சிறிதளவு நாட்டுச்சக்கரை தடவி விடுங்கள். உங்கள் வீட்டில் எலி நடமாட்டம் எங்கெல்லாம் உள்ளதோ அந்த இடங்களில், இப்படி தயார் செய்த தக்காளி துண்டுகளை வைத்து விடுங்கள்.

tomato

நீங்கள் தயார் செய்த இந்த தக்காளி துண்டை ஒருமுறை எலி சாப்பிட்டாலே போதும். திரும்பவும் உங்கள் வீட்டுப் பக்கம் வரவே வராது. காரணம் தக்காளியுடன் நாம் சேர்த்த மிளகாய் பொடியின் மூலம் ஏற்படும் உபாதைகள் தான். எலிகளுக்கு நினைவு சக்தி அதிகம் என்பதால், இந்த காரம் கலந்த தக்காளியை சாப்பிட்ட பிறகு, அந்த இடத்திற்கு கட்டாயம் திரும்பி வராது என்று கூறுகிறது ஒரு ஆராய்ச்சி.

ஒரே ஒரு முறை இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள். மறுநாளில் இருந்து உங்கள் வீட்டில் கட்டாயம் எலி தொல்லையே இருக்காது. இதனால் எலி செத்து போய் விடுமா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். கட்டாயமாக சாகாது.

rat1

தக்காளிப் பழத்தில் இருக்கும் புளிப்பு சுவையும், மிளகாய் தூளில் இருக்கும் கார சுவையும், ஒன்றாகக் கலந்து வயிறு எரிச்சல் மட்டுமே ஏற்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.