Advertisement

உங்கள் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல், வயதான தோற்றத்தை தள்ளிப் போட வேண்டுமா? இன்னைலிருந்தே இத பண்ணுங்க!

உங்கள் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல், வயதான தோற்றத்தை தள்ளிப் போட வேண்டுமா? இன்னைலிருந்தே இத பண்ணுங்க!

இருபதில் தான் இளமையாக இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அறுபதிலும் இளமையாக இருக்கலாம். அதற்கு முதலில் எப்போதும் மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக கோபப்படக்கூடாது. நெற்றியை கோபம் வரும்போது சுருக்கக் கூடாது. நெற்றியைச் சுருக்காமல் இருந்தால் கோபம் குறையும். முயற்சி செய்து பாருங்கள்! மன பாரத்தை மனதில் ஏற்றிக் கொள்ளக்கூடாது. மூளையில் குழப்பங்களை வைத்துக் கொள்ளவே கூடாது. தினமும் ஒரு 5 நிமிடமாவது வாய்விட்டு சிரிக்க வேண்டும்.

muga-surukkam

உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முகம் அழகாகவும் இருக்கும். இது எல்லோருக்கும் தெரிந்து இருக்கலாம். ஆனால், எத்தனை பேர் பின்பற்றுகிறோம் என்பதுதான் தெரியவில்லை. இதோடு சேர்த்து நம்முடைய முகத்தை மேலும் அழகுபடுத்திக் கொள்ள இரண்டு குறிப்புகளையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் பாசிப்பயறு வைத்து ஒரு குறிப்பை பார்த்து விடலாம். இந்த பாசிப்பயிரை வாரத்தில் மூன்று நாள் சுண்டல் செய்து சாப்பிட்டுவர சருமம் இயற்கையாகவே அழகான தோற்றத்தை பெறும். அதே பாசிப்பயிறை நன்றாக பொடி செய்து ரோஸ்வாட்டர் நீரில், கலந்து பேஸ்ட் போல் தயாரித்து முகத்திலும் கழுத்து பகுதிகளிலிருந்து, கீழிருந்து மேல் பக்கமாக தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கழுத்தில் இருக்கும் கருநிறமும் விரைவாக குறைந்து வருவதை காணலாம்.

pasi-paruppu

கடைகளில் கிடைக்கும் ரோஸ்வாட்டர் தரமானதாக இல்லை என்றால், வீட்டிலேயே ரோஜா இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். பன்னீர் ரோஜாவை பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. இந்த ஃபேஸ் மாஸ்க் தினம்தோறும் போடலாம்.

இரண்டாவதாக புதினா இலை. நம்முடைய உடலை சூட்டிலிருந்து பாதுகாக்கும் தன்மை இதற்கு உண்டு. வாரத்தில் இரண்டு நாள் நம்முடைய உணவில் புதினா இலைகளை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இந்த புதினாவில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக தண்ணீரில் கழுவி, மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும். வாரத்தில் இரண்டு முறை முகத்தில் இந்த விழுதை தேய்த்து 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து அதன் பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகத்தில் சூட்டினால் ஏற்படும் பிரச்சினைகள் எதுவும் வராது.

Mint leaf(puthina)

குறிப்பாக சூட்டு கொப்பளம் கட்டி முகப்பரு இவைகளை தடுக்கலாம். குறிப்பாக வெயில் காலம் ஆரம்பித்திருக்கும் இந்த சமயத்தில், இந்தக் குறிப்பு மிகவும் உபயோகமானதாக இருக்கும். வெயில் என்று வந்தால் சிலருக்கு முகத்தில் கட்டிகள் வரும். அதை தடுப்பதற்கு புதினா இலை நல்ல மருந்தாக அமையும்.