முகத்தில் உள்ள முகப்பரு நீங்க, துவாரங்கள் நீங்க, தோல் சுருக்கம் வராமல் இருக்க, வித்தியாசமான முறையில் ஐஸ் மசாஜ். வீட்டிலேயே செஞ்சுக்கலாம்! இந்த 4 பொருள் போதும்.
பொதுவாகவே பெண்களுக்கு முகத்தில் முகப்பரு வருவது இயற்கை தான். சில பேருக்கு அந்த முகப்பரு நாளடைவில் மறைந்து விடும். சில பேருக்கு தழும்பாக மாறும். சில பேருக்கு அந்த இடங்களில் சின்ன சின்ன துவாரங்கள் ஏற்பட்டு விடும், கூடிய விரைவில் சுருக்கம் விழுந்து, இளவயதிலேயே வயதான தோற்றத்தை அடைந்து விடுவார்கள். அதாவது தோல் சுருக்கம், நம்முடைய நிறத்தையும் குறைத்துவிடும். பளபளப்பையும் குறைத்துவிடும். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக நம் வீட்டிலேயே சில பொருட்களை சேர்த்து, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஐஸ் க்யூப்ஸ் என்று சொல்லப்படும் ஐஸ் கட்டிகளை தயார் செய்து, தினம்தோறும் முகத்தில் மசாஜ் செய்து வந்தாலே போதும். முகம் கண்ணாடி போன்று பளபளப்பாகும். என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த ஐஸ் கியூபை எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்?
வீட்டிலேயே ஐஸ் க்யூப் தயாரிக்க தேவையான பொருட்கள்.
வேகவைத்த சாதம்-3 ஸ்பூன்
ரோஸ்வாட்டர்-1 கப்
காய்ச்சாத பால்-1/2 கப்
புதினா இலை-10
இதற்கு தேவையான பொருட்கள் இவ்வளவுதான். முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் வேக வைத்த சாதத்தை மூன்று ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிதளவு ரோஸ்வாட்டர் ஊற்றி நன்றாக மைய அரைத்து கொள்ள வேண்டும். கையை வைத்து பிசைந்து கொண்டாலும் சரி. குழவையில் போட்டு, மைய மசித்துக் கொண்டாலும் சரி. உங்கள் இஷ்டம் தான். ஆனால் கொழகொழவென்று குழந்தைக்கு சாதம் ஊட்டுவது போல பக்குவம் வர வேண்டும்.
இந்தக் சாதக் கலவையோடு மீதமுள்ள ரோஸ் வாட்டரையும், காய்ச்சாத பாலை சேர்த்து, புதினா இலைகளை துண்டு துண்டாக வெட்டி இதோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின்பு ஐஸ் ட்ரேயில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த நீர்ம கலவையை ஊற்றி, ஃப்ரீசரில் வைத்தால், இரண்டே மணி நேரத்தில் மசாஜ் செய்ய ஆரோக்கியமான ஐஸ் க்யூப்ஸ் தயார். மொத்தமாக நீங்கள் தயாரிக்கும் இந்த நீர்ம கலவையானது, ஒரு ஐஸ் ட்ரேவை நிரப்பும் அளவிற்கு வந்தால் போதும்.
உங்கள் ஃப்ரீசரில் தயாரித்து இருக்கும் ஐஸ் க்யூப்ஸ் இல், ஒவ்வொன்றாக தினம்தோறும் எடுத்து, முகத்திற்கு மசாஜ் செய்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு நமக்கு ஒரு ஐஸ்கியூப் மட்டுமே தேவையானது. ஒரே ஒரு ஐஸ் கியூபை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு, முகத்தில் வைத்து வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். அந்த ஐஸ் கியூப் கரையும் வரை மசாஜ் செய்யலாம். மீதமுள்ள ஐஸ் கியூப்ஸை ஃப்ரீசரிலேயே வைத்துவிட்டு, தினம்தோறும் எடுத்து பயன்படுத்திக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.
இந்த ஐஸ் க்யூப் மசாஜானது, உங்களுடைய முகத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, சருமத்தை ஆரோக்கியமாக பளபளப்பாக மாற்றி விடும். முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு இருந்தாலும், நாளடைவில் நீங்கிவிடும். அதை கண்கூடாக காணலாம். சின்ன சின்ன துளைகள் நாளடைவில் மறைந்துவிடும். முகப்பரு வந்த இடத்தில் அடையாளமே தெரியாமல் சுத்தமாக மறைந்து விடும். பிரிட்ஜில் இருக்கும் ஒரு ட்ரே ஐஸ் க்யூப் முழுவதும், தீர்வதற்குள் உங்களது முகத்தில் கட்டாயம் நல்ல மாற்றம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
உங்களது முகம் முழுமையான பளபளப்பை அடைந்தவுடன் வாரத்திற்கு மூன்று முறை இந்த முறையைப் பின்பற்றினாலே போதும். எப்பொழுதும் உங்கள் முகம் இளமையாக இருக்கும். முயற்சி செய்து தான் பாருங்களேன்! பெண்கள் என்றாலே அழகுதான். அந்த அழகை மேலும் மெருகூட்ட சுலபமான சிறந்த முறையில் இதுவும் ஒன்று என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.