Advertisement

ஞாபக சக்தியை அதிகரித்துக்கொள்ள மிக முக்கியமான 4 விஷயங்கள் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஞாபக சக்தியை அதிகரித்துக்கொள்ள மிக முக்கியமான 4 விஷயங்கள் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக மறதி பிரச்சனை என்பது பெரும்பாலானவருக்கு இருக்கத்தான் செய்கிறது. மாணவர்களாக இருந்தால், நன்றாக படிக்கும் மாணவர்கள்கூட தேர்வுக்கு செல்லும் சமயத்தில் கேள்வித்தாளை பார்த்தவுடன் படைத்தது அத்தனையையும் மறந்து விடுவார்கள். பெரியவர்களாக இருந்தால் அவர்கள் செய்யும் தொழிலில் அல்லது பணிக்குச் செல்பவர்களாக இருந்தால் அவர்கள் ஈடுபடும் வேலையில் பலவகையான நுணுக்கங்களை மறந்துவிடுகிறார்கள். நன்றாக படித்த அறிவாளிகள் கூட நேர்காணலில் போது தடுமாறுவார்கள். எதுவுமே அறியாதவர்கள், எதையுமே சரியாகப் படிக்காதவர்கள் என்றால் அதில் பிரச்சினை இல்லை. எல்லாம் தெரிந்தும், எல்லாவற்றையும் நன்றாக மனப்பாடம் செய்தும் அந்த சமயத்தில், அந்த நேரத்திற்கு என்ன வார்த்தைகளைப் போட்டு பேச வேண்டும். எதை எழுதவேண்டும். என்று சிலருக்கு புரியாது. இது ஒன்றும் குணப்படுத்த முடியாத ஒரு வியாதி அல்ல. சுலபமான முறையில் இதை சரி செய்து விடலாம். நீங்கள் மாணவர்களாக இருந்தாலும் அல்லது பெரியவர்களாக இருந்தாலும் இந்த நான்கு விஷயங்களை பின்பற்றினாலே போதும். உங்களது ஞாபக சக்தி திறன் கட்டாயம் அதிகரிக்கும்.

brainwaves moolai

1. ஆர்வம்:

எந்தவொரு செயலையும் ஆர்வத்தோடும், அக்கறையோடும் செய்யும் போது அது நமக்கு மறக்கவே மறக்காது. படிப்பதன் மூலம் புதியதாக பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு செயல்படுவதன் மூலம், நம்மால் நம் மூளைக்கு கொண்டு செல்லும் எப்படிப்பட்ட விஷயங்களையும் எளிதில் மறந்துவிட முடியாது. கண் புத்தகத்தை பார்த்துக்கொண்டிருக்கும். மூளையும், மனதும் வேறொன்றை யோசித்துக் கொண்டிருக்கும். இப்படி இருந்தால் நீங்கள் படிப்பது நிச்சயமாக உங்களுக்கு நினைவில் இருக்காது.

2. காட்சி படுத்துவது:

நாம் படிப்பதை நம் மனதிற்குள் ஒரு காட்சியாக பதிவு செய்துகொள்ள வேண்டும். அதாவது ஒரு விஷயத்தை படித்து மனப்பாடம் செய்வதை விட, அதை ஒரு காட்சியாக, கதையாக வடிவமைத்து புரிந்துகொண்டு படிப்பது வாழ்க்கையில் என்றுமே மறக்காது. நல்ல திரைப்படத்தை ஒரு முறை பார்தால், பல வருடங்கள் கழித்தும் அந்த படத்தின் கதையை சொல்லுவோம். இதுவே அதற்கு உதாரணம்.

memory

நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை தெரிந்து தெரிந்து கொள்ளும் போதோ அல்லது புதியதாக கற்கும்போதோ, உங்களுக்கு முன்னதாகவே தெரிந்த ஏதாவது ஒரு விஷயத்தில் தொடர்புபடுத்திக் கொள்ள முடியுமா என்று பாருங்கள். நமக்கு அறியாத ஒரு விஷயத்தை, நன்கு அறிந்த விஷயத்தோடு தொடர்புபடுத்தி படிக்கும் போது அது நமக்கு என்றும் நினைவில் நிற்கும். சுலபமான எடுத்துக்காட்டு பழைய பாடல்களை, புது பாடல்களாக ரீமேக் செய்யும்போது பழைய பாடல்களின் வரிகள் கூட நமக்கு மனப்பாடம் ஆகிறது அல்லவா அப்படித்தான்.

3. அறிந்ததை பயன்படுத்தாமல் இருக்கக்கூடாது:

நாம் எவ்வளவு பெரிய அறிவாளிகளாக இருந்தாலும், நாம் படித்ததை நினைவு கூறாமல், எதற்கும் பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டோம் என்றால், நிச்சயம் நாம் படித்ததோ, கற்றுக்கொண்டதோ மறந்து போகத்தான் செய்யும். அதை பயன்பாட்டில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். படித்ததை குறிப்புகளாக எழுதி, மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டிருந்தால் அது நல்லது. இல்லை என்றால் நீங்கள் படித்ததை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு சொல்லித் தரும் விதத்தில் நீங்கள் படித்த விஷயங்கள் இன்னும் ஆழமாக பதியுமே தவிர என்றுமே மறக்காது.

memory1

4. இப்படி எல்லாம் செய்தால் கூட  படித்தது மறந்துதான் போகின்றதா? இறுதியாக இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தால்! பயம். படித்ததும், கற்றுக் கொண்டதும் மறந்து போய்விடுமோ என்ற பயம் நம்மிடத்தில் இருந்தால் நிச்சயம் மறந்து போகத்தான் செய்யும். நான் படித்தவை எல்லாம் நன்றாக புரிந்து கொண்டுதான் படித்து இருக்கின்றோம். தேர்வில் மட்டுமல்ல, தேர்வு முடிந்த பிறகும் அவை நம் நினைவில் இருக்கும் என்பதை, நம் மனதில் வைத்துக் கொண்டாலே போதும். தேர்வாக இருந்தாலும், நேர்காணலாக இருந்தாலும் பயம் இல்லாதவர்கள் நிச்சயமாக வெற்றி அடைய முடியும்.