காய்ந்த திராட்சை பயன்கள்
உணவு பொருட்கள் சில உடனடியாக உட்கொள்ளப்படுவதாக இருக்கிறது. மற்ற சில பொருட்கள் எக்காலத்திலும் உண்பதற்கு ஏற்றவாறு பதப்படுத்தி உண்பதாக இருக்கிறது. அப்படி ஒரு உணவு பொருள் தான் காய்ந்த திராட்சை. காய்ந்த திராட்சைகள் பல உடல் குறைபாடுகளுக்கு சிறந்த உணவாக இருக்கிறது. அவற்றை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
காய்ந்த திராட்சை பயன்கள்
மலச்சிக்கல் :
சரியான உணவு பழக்கம் இல்லாதவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் 4 காய்ந்த திராட்சைகளை இரவு நீரில் ஊற வைத்து, விடிந்ததும் காலை உணவை உண்பதற்கு முன்பு அவற்றை சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.
எடை கூடல் :
உடல் எடை சராசரியான அளவில் இருப்பது நல்லது. சிலருக்கு இந்த சராசரி அளவைக்காட்டிலும் மிக குறைந்த எடை இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் ஊறவைக்கப்பட்ட காய்ந்த திராட்சைகளை தேன் அல்லது நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
ஆண்மை குறைபாடுகள் :
நரம்புகள் பாதிப்படைவதால் சில ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி மற்றும் உடலுறவு சார்ந்த குறைபாடுகள் ஏற்படுகின்றன. காய்ந்த திராட்சைகளை சூடான பசும்பாலில் சிறிது ஊற வைத்து அருந்தி வர நரம்புகள் வலுவடைந்து, ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.
அதீத மனஅழுத்தம் :
அவசரமான இன்றைய வாழ்க்கை முறையால் பலரும் அதீத மனஅழுத்ததால் பாதிக்கப்படுகின்றனர். இரவு உறங்கும் முன்பு காய்ந்த திராட்சைகளை பாலில் ஊறவைத்து அருந்தி வர கூடிய விரைவில் மன அழுத்தங்கள் குறையும்.
பல் குறைபாடுகள்:
சில சமயங்களில் உடலில் சில அத்தியாவசிய சத்துக்கள் குறைவதால் பல் உடைதல், பல் ஈறுகளில் வீக்கம், மற்றும் ரத்தக்கசிவு போன்றவை ஏற்படுகின்றன. காய்ந்த திராட்சைகளை தொடர்ந்து உண்பவர்களுக்கு மேற்கூறிய பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
ரத்த குறைபாடுகள்:
ரத்தத்தில் இருக்கும் வெள்ளையணுக்களின் உற்பத்தி குறைவதால் சிலருக்கு ரத்த சோகை ஏற்படுகிறது. காய்ந்த திராட்சைகளில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை பெருக்கும் ரசாயனங்கள் அதிகம் உள்ளன. இவற்றை அதிகளவில் உண்பதால் ரத்த சோகை குறைபாடு நீங்கும்.
கண்கள்:
முதுமை மற்றும் உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகளாலும் சிலருக்கு கண் பார்வை குறைபாடுகளும், அது சம்பந்தமான நோய்களும் ஏற்படுகின்றன. காய்ந்த திராட்சைகளை தினந்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு இது சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.
ஜுரம்:
உடல் அதிகம் உஷ்ணமடைவதாலும் வெளிப்புற தொற்றுகளாலும் சிலருக்கு ஜுரம் ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட நேரங்களில் மூன்று வேளை காய்ந்த திராட்சைகளை உண்பதால் உடல் ஜுரத்தால் இழந்த சக்திகளை மீண்டும் பெறும்.
வாயு கோளாறுகள்:
சிலர் பக்குப்படாத உணவுகளை உண்பதாலும், உடலில் வாதம் அதிகரிப்பதாலும் வாயு தொந்தரவு ஏற்பட்டு அவதியுறுகின்றனர். வயிற்றில் தீமையான கழிவுகள் மற்றும் புண்கள் காய்ந்த திராட்சைகள் உட்கொள்வதால் நீங்கும்.
சிறுநீரகம்:
உடலின் கழிவுகளை வெளியேற்றி உடலின் வெப்பநிலையை சீராக வைப்பதில் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுகின்றன. காய்ந்த திராட்சைகள் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி, சிறுநீர் நன்கு பிரிய உதவும் சிறுநீர் கற்களை கரைக்கும்.
ஈரல்:
உணவை செரிமானம் செய்வது மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவது போன்ற காரியங்களில் ஈரல் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்ந்த திராட்சைகள் தொடர்ந்து உண்ண ஈரலுக்கு வலு சேர்த்து உடலின் சீரான இயக்கத்திற்கு உதவும்.