Advertisement

மாதவிடாய் மற்றும் கருத்தரிக்க உகந்த நாள்காட்டி

மாதவிடாய் மற்றும் கருத்தரிக்க உகந்த நாள்காட்டி

மாதவிடாய் என்பது பூப்படைந்த ஒரு பெண்ணிற்கு மாதம்தோறும் சுழற்சி முறையில் நடக்கும் ஒரு உடல்சார்ந்த நிகழ்வாகும். இதனை வீட்டிற்கு வெளியே, வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு என்று அவரவர் பழக்கத்திற்கு ஏற்றவாறு கூறுவதுண்டு. மாதவிடாய் முடிந்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பெண் தன் கணவனோடு சேர்ந்தால் அவள் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு. அந்த காலகட்டத்தையே ஓவுலேஷன் பீரியட் என்கிறோம்.  அந்த வகையில், குழந்தைக்கு முயற்சிப்பவர்கள் எப்போது ஒன்று சேர்ந்த கருத்தரிக்கலாம், கருத்தரித்த பிறகு தோராயமாக அவர்களின் பிரசவம் எப்போது நிகழும், ஒரு பெண்ணின் அடுத்த மாதவிடாய் காலம் எப்போது என்பது குறித்த அனைத்து தகவல்களையும் கூறும் மாதவிடாய் நாள்காட்டி இதோ.

[ovulation-predictor]

Pregnancy symptoms

கருத்தரிக்க ஏற்ற நாள் அல்லது கருத்தரிக்க உகந்த நாட்கள் எவை என்பதை அறிய உதவும் நாட்காட்டி தான் மேல் உள்ளது. அதோடு ஒரு பெண்ணின் மாதவிடாய் குறித்த அனைத்து விதமான தகவலையும் இந்த நாள்காட்டி மூளும் நாம் அறிய. ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் அவள் உடல் அளவிலும் மனதளவிலும் சோர்த்து விடுவது இயல்பு. அத்தகைய காலங்களில் அவளை ஓய்வு எடுக்க செய்து அவளுக்கு தேவையான னைத்தையும் செய்து கொடுப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை ஆகும். அதே போல ஒரு பெண் கர்ப்பம் அடைந்த பிறகு அவளை ஒரு கருவாக நினைத்து காப்பது கணவனின் கடமை.

ஓவுலேஷன் பீரியட் என்றால் என்ன ? (what is ovulation period in Tamil language)

ஓவுலேஷன் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் ஒருவகை சுழற்சி முறை ஆகும். இது மாதம் தோறும் ஏற்படக்கூடியது. பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டால் அவர்களின் உடலில் உள்ள கருப்பையானது கருமுட்டைகளை வெளியிடும். இது அடுத்த மாதவிடாய்க்கு முன்பாக 12 முதல் 16 நாட்களுக்குள் நடைபெறும். இந்த கருமுட்டைகள் விந்தோடு கலந்தால் அது கருவாக உருமாறும்.

ஓவுலேஷன் அறிகுறிகள் (ovulation symptoms in tamil language)

ஒரு பெண்ணின் உடலில் ஓவுலேஷன் நடக்கப்போவதை அவள் சில அறிகுறிகள் மூலம் அறியலாம். இந்த காலகட்டத்தில் பெண்களின் மார்பகங்கள் மென்மையாக இருக்கும். உடல் சூடு .4 முதல் 1 டிகிரி வரை உயரக்கூடும். சிலருக்கு அடி வயிறில் லேசான வலி ஏற்படுக்கூடும். சிலருக்கு உடலில் அதிக பலம் ஏற்பட்டது போல தோன்றும், இன்னும் சிலருக்கு பார்வை திறன், நுகரும் தன்மை போன்றவை அதிக அளவில் இருக்கும். இப்படி ஓவுலேஷன் சமயத்தில் ஏற்படும் அறிகுறிகள் பல உள்ளன.