நிலவேம்பு குடிநீரை வீட்டிலே தயாரிப்பது எப்படி ?
காய்ச்சல் வந்தால் இன்று பலரும் தேடி செல்வது நிலவேம்பு குடிநீரை தான். டெங்கு காய்ச்சல் போன்ற கொடிய நோய்களுக்கு இது சிறந்து மருந்தாத விளங்குகிறது. இதை நாம் வீட்டிலே மிக எளிதாகவும் சுத்தமாகவும் தயாரித்து பருகுவது சிறந்தது. நோய்கள் பல தீர்க்கும் நிலவேம்பு குடிநீரை தயாரிப்பது எப்படி என்று சித்த மருத்துவம் கூறும் குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
நிலவேம்பு சமூலம் 10 கிராம், சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம், சந்தனத்தூள் 10 கிராம், கோரைக்கிழங்கு 10 கிராம், வெட்டிவேர் 10 கிராம், பேய்புடல் சமூலம் 10 கிராம், பற்பாடகம் 10 கிராம், விலாமிச்சம் வேர் 10 கிராம்.
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எடுத்து சுத்தம் செய்துகொண்டு அவற்றை நன்கு இடித்து பொடிசெய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு 800 மில்லி லிட்டர் நீரில் 25 கிராம் பொடியை கலந்து நீரை நான்கு கொதிக்க விட வேண்டும். நீரானது 800 மி.லி. இருந்து 150 மி.லி ஆகும் வரை நன்கு கொதிக்க வேண்டும். அதன் பிறகு ஆறவைத்து சுத்தமாக வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
குளிர்காய்ச்சல், டெங்கு போன்ற ஜுரம் வரும் சமயத்தில் காலை மாலை என இரு வளையும் 25 மி.லி நிலவேம்பு நீரை குடித்தால் காய்ச்சல் பறந்தோடும். இந்த கசாயத்தை அருந்துவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதோடு உடலில் உள்ள ரத்த தட்டணுக்களையும் இது அதிகரிக்க செய்கிறது. காய்ச்சல் இல்லாத சமயங்களில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இதை அருந்தலாம். ஆனால் தினமும் அருந்த வேண்டாம்.